16
ஒவ்வொரு முறையும்
தந்திர விருத்தங்களால்
என் கட்டங்களை ஆக்கிரமித்தும்
திசை திறப்பிற்காக
காத்திருந்த தருணங்களில்
கருணையின்றி வெட்டி எறிந்தும்
தந்திரம் உணராது
தடுமாறிய சந்தர்ப்பத்தில்
பன்னிரெண்டால் பழமெடுத்தும்
பெருமை சாற்றும் உன்னிடம்
ஒரு விருத்தம் வழியேனும்
நேர்த்தியாய் பழமெடுத்து
நிலைநிறுத்திக் கொள்ள
எத்தனித்துக் கொண்டேயிருக்கின்றன.
சகுனியிடம் தோற்ற தருமராய்
ஒவ்வொரு முறையும்
புறந்தள்ளப்படும் என் காய்கள்!