22
வெற்றியை எட்டும் ஆயத்தத்திற்காக
வேட்டைக்கு எத்தனிக்கும் விலங்காய்
பயிற்றுவிக்கப்பட்ட வித்தைகளுக்குள்
முடங்கிப் போனது பால்யம்.
தோள் தட்டும் தோல்விகள்
அகம் பாயும் கீழறுப்புகள் என
கீழ்மையின் நிலை தாண்டி
மேலெழ முயன்றதில் கழிந்தது வாலிபம்.
எட்டிப் பிடிக்க நினைத்த வெற்றி
அந்திமத்திலாவது வாய்க்குமா? என்ற வாதனை
எஞ்சிய வாழ்வின் முகத்துவாரங்களை
அரித்துக் கொண்டே இருக்கிறது.
முயன்றால் முடியும்
வெற்றி எட்டிவிடும் தூரமே என
போதிக்கப்பட்டவைகளுக்குள்
இன்னும் பொதிந்து கிடக்கிறது வெற்றி!