1
முகஸ்துதியின் முனைகளோடு
என்னை நோக்கி
நீட்டப்படும் கோப்பைகள்
ஒருபோதும் காலியாக இருப்பதில்லை.
சுயநலத்தின் சாயலால் நுரைத்து
மாறாத நோக்கங்களின் உள்ளீடால்
முற்றாகவோ, குறைவாகவோ
அவைகள் நிரம்பியே இருகின்றன.
வெற்றுக் கோப்பைகளுக்காக
காத்திருக்கும் என் தருணங்கள்
தன் துயர் கடத்தும் நதியைப் போல
ஏமாற்றங்களோடு நகர்கின்றன.
இப்போதைய என் கவலை எல்லாம்
எவரிடமும், எதன் பொருட்டும்
நிரப்பிய கோப்பைகளை
நான் தந்துவிடக் கூடாது என்பது மட்டுமே!