வா…என்றால் வந்து விடுவாயா?
போ..என்றால் போய் விடுவாயா?
நில்..என்றால் நின்று விடுவாயா?
ஆங்கில புத்தாண்டே?????????????
பகல், இரவு என்று…………………………
வருவதும் போவதும் உன் வேலை
நீ வராமல் போனால் என்னாகும்?
கடல்அலை நின்றால் என்னாகும்?
கடல்அலை நின்றால் என்னாவேன்
தெரிந்தும அனுபவத்தில்லை!
நீ எப்பொழுது தோன்றினாய்?
நீ எந்நேரம் பிறப்பிக்கபட்டாய்?
ஜனவரி ஒன்னு நள்ளிரவு பணிரெண்டு
மணிக்கு பிறந்ததாக……………..சூரியன்
அஸ்தமிக்கும்முன் தோன்றியவர்கள்
கண்டு சொன்னார்கள்……………………….
ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்
(பல நாடுகளை அடிமைபடுத்தி ஆண்டவர்கள்)
அடக்கியாண்ட வெற்றி களிப்பை
கொண்டாட உன்னை பிரசவித்தார்கள்
வருவதும் போவதும் உன் வேலை
ஒழுங்காக நீ செய்கிறாய்…………
குரங்கிலிருந்து தோன்றி ஆறறிவு
ஒன்றைப்பெற்று ஏழாவது அறிவுக்கு
அலைபவர்கள…..புதியன கழிதலும்
பழையன புகுதலுமாக வழமையாகக்
கொண்டு வாழ்கிறார்கள்.
உன் பிறப்பு எப்படியிருந்தாலும்
உன் வரவு எனக்கு போராட்ட நாளே..!!
கடல்அலையும் ஓயப்போவதில்லை
சமத்துவத்துக்கான போராட்டமும்
ஓயப்போவதில்லை…..எப்படியிருந்தாலும்
உன் வரவு எனக்கு போராட்ட நாளே……!!!
