"

வருடத்துக்கு ஒருமுறை
வரும் வாடிக்கையாளர்
தன்வீட்டுப் பிள்ளைகளின்
பாடப் புத்தகங்களை அடடையிட்டு
செப்பனிடக் கொடுத்தார்.

செப்பனிட்ட புத்தகத்தை
பெற்று  அய்ந்து நூறு
முழு நோட்டை நீட்டினார்.

என்னிடம் சில்லரை இல்லை
ஞானம் ஸ்டோர்க்கு சென்றேன்
உதட்டை பிதுக்கினார்.
உதடனின் டீக்கடையில்
நீட்டினேன் கைவிரித்தார்
.
கடைசியாக முத்துராசு
கடைக்கு போனால்..
மல்டிபார்க்கு போகச்
சொன்னார்.

போவதற்கு தயக்கம்
வாடிக்கையாளாரை
காக்க வைத்த தவிப்பு
ஒருபக்கம்……………..

துணிந்து சென்றேன் மல்டி
பார் ஒயின“ஷாப்புக்கு
சில்லரையை வாங்கி
வரும்போது……..

டாஸ்மாக் குடிமகன்
இருவரில்  ஒருவன்
சொன்னான்…………..

பார்றா………..தோழரும்
ஒயின்ஷாப்புக்கு வர்ராருடா!!!!…….