மிஸ்டர் காந்தி……….
மினிஸ்டர் அல்ல…
அவரின் அமைதி வழியிலும்
மாலைப் பொழுதினிலே…….
நடத்திய பஜனைகளாலும்
பகவத்கீதையின் ஒப்பற்ற
உபதேசங்களாலுமே…………
அடிமை இந்தியாவுக்கு
அடிமை மக்களுக்கு…….
ஆகஸ்டு 15ல் சுதந்திரம்
என்ற பட்டயம் வாங்கித்
தந்தவர்……………………..
மினிஸ்டர் காந்தி அல்ல
அவர் மிஸ்டர் காந்தி……………
இந்திய ஆட்சிக் குழுவின்
ஆட்சியருமல்ல……………
சுதந்திர பட்டயத்தின்
66வது ஆண்டு விழாவை
அடிமை இந்தியாவின்
அடிமை மக்கள்……..
சுதந்திரமாக கொண்டாட.
![]()
நகரமென்ன.. புறநகரென்ன..
ரயில் நிலையமென்ன….
பஸ் நிலையமென்ன…….
ஆகாய நிலையமென்ன…..
சுதந்திர போலீஸ்
முழு கட்டுப்பாட்டில்…
மத்திய,மாநில அலுவலகமா
சுற்றுலா இடங்களா……….
இந்துக் கோயில்களா……..
முஸ்லிம் பள்ளி வாசல்களா………
கிறிஸ்தவ ஆலயங்களா…….
அனைத்தும் போலீசின்
பாதுகாப்பில்……………..!!

இரவு வாகன சோதனை
லாட்சுகளில் சோதனை
எங்கெங்கும் தீவிர
சோதனைகள்………………
சுதந்திர இந்தியாவின்
சுதந்திர போலீசும்…..
சந்தேகப் பேர்வழிகளை
சந்தேகப் பொருட்களை
சுதந்திரமாக எங்களுக்கு
தெரிவித்து…………பின்
மிஸ்டர் காந்தியின்……..
66வது சுதந்திர தினத்தை
சுதந்திரமாக கொண்டு……
ஆடுங்கள் என்கிறது.
மத்தளத்துக்கு இரண்டு
பக்கமும் அடி என்றால்.
மிஸ்டர் காந்தியின்
சுதந்திர அடிமைகளுக்கு
நாலு பக்கமும் அடி……
வாழ்க! மிஸ்டர் காந்தியின்
சுதந்திர தினக் கொண்டாடடம்…