"

இப்படிப்பட்ட கதைகள் ஏதோ மக்கள் பொழுது போக்க (பொழுதை வீணாக்க) எழுதப்பட்டதல்ல.

நமது தோல்விகள், துயரங்கள் வறுமை ஆகியவை நம்மை துரத்தக் காரணம் என்ன? நாம் புத்தியை அதிகம் பயன் படுத்தாமல் வாழப் பழகிவிட்டதுதான் காரணம். அதிகம் பயன் படுத்தாமல் வைத்த எதுவாயிருந்தாலும, காரோ, சைக்கிளோ, மனம் / மூளை / புத்தி,  துருப்பிடிக்கும்.

கதையில் கரைந்திருக்கு, அறிவு. அவ்வப்போது புத்தியை சுத்தம் செய்து, அறிவின் உதவியால் புத்தியைக் கூராக்கி நமது பாதுகாப்பு மற்றும் தினசரித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். .

படித்ததில், கேட்டதில் அறிவைத் தேடிப்¢ பிரித்தெடுத்து, மனதிலே சேர்க்காமல் அப்படியே விட்டுவிட்டால், அது ஒரு வெட்டி அரட்டைக்குச் சமம். எவருக்கும் பயன் படாத, டயம் பாஸ்.
கதைகளைப் படித்த நேரம், புத்தகம் வாங்கிய செலவு என்று எல்லாமே வீணே.

நடராஜன் நாகரெதினம்.

License

Icon for the Public Domain license

This work (அறிவு தரும் ஜென் கதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book