ஒரு ஊரின்¢ பெயரோ அல்லது பொருளின் பெயர்களோ காலத்தின் வேகமான ஓட்டத்தில் வலுவிழந்து சிதறி, உருமாறுவது என்றும் புதியது இல்லை
சென்னையில் ஒரு பாலத்தின் பெயரை உதாரணமாகக் கொள்ளலாம். ஹாமில்டன் பிரிட்ஜ் என்று ஒரு பாலம். இந்தப் பெயரை பாலம் கட்டிய காலத்தில் பாலத்திற்கு (கட்டியவர் பெயரை ?) வைத்தார்கள்.
இந்தப் பெயர், சில தவறான வாய்களில் புகுந்ததால், உருமாறி அம்பட்டன் பிரிட்ஜாக மாறியது. அதுவே காலப் போக்கில் அம்பட்ட- வாராவதி என்று முழுவதுமாக மாறியது. அடுத்து வந்த மக்கள், மீண்டும் அதற்கு ஒரு ஆங்கிலப் பெயர் தந்து பார்பர்ஸ் பிரிட்ஜ் என்று மாற்றி விட்டாதாகக் கேள்வி. ஹாமில்டன் என்ற பொரியியல் நிபுணரை மக்கள் ஒரு சிகை திருத்துவராக மாற்றிய கொடுமை.
ஜென் என்ற ஒரு இயக்கம் தோன்றி, ஆயிரத்திற்கும் அதிகமான வருடங்கள் ஓடியிருக்க வேண்டும்.
இன்று இதன் முதற் பெயரை அறிய வாய்ப்பில்லை. ஆனால் அதற்கு பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. கிலவற்றைப் பார்ப்போம்.
ஆன்மிகத்தின் தேர்ந்தவர் சொல்வார்கள், அண்டத்தில் உயிர் இல்லாதது எதுசும் இல்லை. உயிருள்ள எல்லாமே ஓடும் தன்மையை உடையது. ஆனால் ஓடும் விதம்தான் மாறுபடும். மதங்களும், மற்ற உயிர்களைப் போலவே, இடம் பெயருகின்றன. புதியதாக தோன்றிய மதங்கள் பழைய அல்லது வேற்று கலாசாரத்தில் கலக்கும் போது உருமாறுகின்றன. பல நாடுகளில், பல விதங்களில், புத்த மதத்தைத் தழுவிய மக்கள் வாழ்கிறர்கள். அவர்கள் எல்லோருமே ஆங்காங்கே தாங்கள் பின்பற்றும் சடங்குகள், வழிபாடுகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில், மற்றவரிடம் இருந்து அதிக அளவில் மாறுபட்டிருப்பார்கள். ஜென் என்னும் பெயர், சீனாவில் ஜியாங் மானிலத்தில், அக்கால அரசர்களால் வரவேற்கப்பட்டு, மக்களால் பின்பற்றப்பட்ட புத்தமதத்தின் ஒரு வடிவம். ஜியாங், ஜென்னாக உருமாறியிருக்கலாம் ¢ என்பது சிலரின் ஊகம். வட மொழியில் க்யான் (Gyaan) என்ற சொல் அறிவைக் குறிக்கும். இதுவே, ஜென் என்ற சொல்லாக உருமாறியதாகச் சொல்லும் மக்களும் உண்டு. புத்த மதம் அறிவு அல்லது சிந்தனையின் அடிப்படையில் உருவானது. புத்தர் அவரையோ அல்லது எந்தக் கடவுளையோ வழிபட சொன்னதாக எனக்குத் தெரியாது. ஆனால், அவரால் பயனடைய அவர் தந்த எட்டு உண்மைகளை அறிவால் தேடி, தினசரி வாழ்க்கையில் இணைத்தால் மாத்திரமே பின்பற்றும் மக்களுக்கு முழுப் பயனும் கிடைக்கும். இனிமேல் ஜென் என்றால் என்ன என்ற மண்டைக் குடைச்சலில் இருந்து விடுபட்டு, இந்த கதைகளில் கவனம் செலுத்தி, அதன் மூலம் சிந்திப்பது என்ற ஒரு வழக்கத்தை மேற்கொண்டு, அளவில்லாத அறிவை அடைந்து, அமைதியான, வெற்றிகரமான வாழ்வை அடையலாமே ! கடைசியாக, வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். கீழே வரும் கதைகள், தன்னுள்ளே தாங்கிவரும் கருத்துகளை மறக்காமல் மனதில் தேக்கி வைத்திடுங்கள். அவற்றை அன்றாட வாழ்வில் இணையுங்கள். அப்படிச் செய்தால் நமது வாழ்வில் துயரங்கள் துரத்தாது. நாம் வாழும் சுற்றத்தில் நட்பும் நல்லுறவும் சேர வளமாக வாழ்வோம் என்பதில் சந்தேகமில்லை.