ஆசிரியர் – காமாட்சி மஹாலிங்கம்
மின்னூலாக்கம் – சிவ கார்த்திகேயன் seesiva@gmail.com
https://silaninaivugalnew.pressbooks.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
சொல்லுகிறேன் என்ற என் வலைத்தளத்தில் ஐந்து ஆறு வருடங்களாக எழுதிவரும் நான் சில நினைவுகள் என்ற தொகுப்பில், அடிக்கடி என் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை எழுதி வருகிறேன். அதில் சிறு வயதில் ஸ்ரீ ரமண ரிஷியைப் பார்த்தது, பாரக்பூரில் பஜனை நிகழ்வுகளில் கலந்து கொண்டது, ஜெனிவாவில் நவராத்திரி,நேபாலில் தீபாவளி,பாய்டீக்கா நிகழ்வுகள், ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும், இன்னும் எங்கள் ஊர்,மற்றும் லெஸொதோ அனுபவமும் என எழுதிய உண்மையான சொந்த அனுபவங்களின் தொகுப்பு இது. அன்னையர் தினம் என்ற தொகுப்பையும் இது வரை 26 தொகுப்புகள் எழுதி தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். யாவும் நல்ல வரவேற்பைப்பெற்ற உண்மை அனுபவங்கள். நூல் ஆசிரியர் அறிமுக உரை. எண்பத்து மூன்று வயது முடியும் எனக்கு ஒரு மின்னூல் என்னுடயதென்று வரவேண்டும் என்ற ஆசையை மின்நூல்கள் உண்டாக்கிவிட்டது. மின் புத்தகம் என்றால் என்ன?எப்படி இதில் நுழைவது என்பதே கேள்விக்குறியாகி, அதைப்பற்றியே விசாரித்துக் கொண்டு,நாம் எழுதியிருப்பதையும் போடலாமே என்ற தணியாத தாகம்தான் இந்த முயற்சி. என்னுடைய பேத்திமூலம் இந்த முயற்சி இதுவரை வந்துள்ளது. முடிவின்போது நான் சொல்லும் வார்த்தை அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்.