2

வயதானவர்களுக்கு  பக்தி ஸம்பந்தப்பட்ட நினைவுகளும்,பாராட்டுகளும் அன்பின்  மூலம்   கிடைத்ததையும்,    எல்லோருக்கும் வேண்டியவர்களாக ஒரு   சிநேகக்   கூட்டம்   கிடைத்ததையும்,   ஒரு கனவாக எண்ணமிடும் அளவிற்கு   காலங்கள்  கடந்து ஓடிவிட்டாலும்   பசுமையான நினைவுகளை உங்களுடன்  அசை போடுவதில்   ஒரு   மன நிறைவு   ஏற்படும் என்ற எண்ணத்தில்  இதைப்   பகிர்ந்து   கொள்கிறேன்.கேளுங்கள்

பக்தி வலையிற் படுவோன் காண்க.

ஜானகீ காந்தஸ்மரணம்.ஜெய்ஜெய்     ராம ராம

நமப் பார்வதி பதயே–ஹரஹர மகாதேவா

கோபிகா    ஜீவன    ஸ்மரணம்.கோவிந்தா கோவிந்தா

வரிசையாகச் சொல்லி ஹரி நாராயணவும் பாடியாயிற்று. சுக்லாம்பரதரம் முதல்  ஸ்லோகங்கள் சொல்லி ஆரம்பமாகிவிட்டது பஜனை.

மூஷிக  வாஹன  மோதக  ஹஸ்தா  சாமரகர்ண விளம்பிதசூத்ரா

வாமனரூப மஹேச்வர  புத்ர   விக்ந விநாயக  பாத நமஸ்தே

ஜயஜானகீ ரமண   ஜய  விபீஷண  சரண ஜயஸரோருஹ சரண

ஜயதீன கருணா   ஜயஜய

தொடர்ந்து

சரணு சரணு  ஸுரேந்திர   ஸன்னுத   சரணு  ச்ரீஸதி வல்லபா தேவ

சரணு ராக்ஷஸ  கர்வ ஸம்ஹார  சரணு வேங்கட நாயகா

ஸ்வாமி  ச்ரீ   ரகு    நாயகா     சரணு சரணு ஹரே

தோடய மங்களங்கள்   காதில் ஒலிக்கிறது. அடிக்கடி நாமாவளிகள் மனது பறக்கிறது.

கோல்க்கத்தாவை   அடுத்த   பாரக்பூர். 24 பர்கானாவில் ஒன்று. பூரா H.A.L.  இல்  வேலை செய்யும்    பஜனைக்கு வரும் பக்தர்களின் கூட்டம்.தம்பதிகள்,குழந்தையுடன்,  குடும்பத்தை விட்டு கருமமே கண்ணாயினார்கள்,சற்றுப் பெரியவர்கள்,   இளைஞர்கள்,   என எல்லோரும் கலந்த பக்தராகிப் போனவர்கள்   ஒவ்வொருவராக மெல்ல   கூட்டம் களைகட்டும் நேரம்.  H.A.L.  இல்  வேலை பார்ப்பவர் என் வீட்டுக்காரர்.   மண்டலியின்  அடுத்த போர்ஷனில் எங்கள் குடும்பம்.  எங்களைப்போல்    5,6   குடும்பத்தினர்.

ஆறு மணிவாக்கில்    மாமி  வேலையெல்லாம் ஆச்சா? ஏதாவது செய்யணுமா?  ஒவ்வொருவரின் விசாரணை.

பஜனை  அறை  கோலத்துடன்  காட்சி அளித்தது பூமாலை. ஊதுவத்தி மணம்,  கல்பூர தீப ஏர்பாடு,     ப்ரஸாதத்திற்கு பெரிது பெரிதாக வாழை இலை நறுக்குதல்,நடுவே மிளகு,கல்கண்டுதட்டு,  என பரபரவென்று ஆளுக்கொன்றாய் அவரவர்கள் பரபரப்பாய்   ஏற்பாடு செய்ய பஜனை மண்டலி  களை கட்டுகிறது.

வெளித்தாழ்வாரத்தில்   பாய்,ஜமக்காளங்கள்  விரிக்கத் தயாராகிரது.

மாமி  ஈவத்து  ப்ரஸாத ஏனு?    இப்போதே வாஸனை வந்துண்டே இருக்கே, என்னையும் கொஞ்சம்   கவனிச்சுங்கோங்கோ.

எதுவும் சமையல் செய்துவிட்டு வரலே.   இம்மாதிறி தனியாயிருக்கிறவர் எல்லோரும்  வைக்கும்   அன்பு  கோரிக்கைகள்.

எல்லோரும்   அட்வான்ஸ் நோட்டீஸ். இன்னிக்கு   யார்து பஜனை?

நன்நே ஸொல்ப  சன்னாஹி நோட்கோப்பா.  அவரிடம்  தனிப்பட்ட கோரிக்கை.

என்ன ப்ரஸாதம்ன்னு     கேட்காது சொல்ல வைக்கும்  கேள்வி.

ஹெச் ஏ எல்   நிர்வாகி   ப்ரான்ச்சை  நடத்துபவர் திரு.விச்வநாதன் மாமி   ஜெயலக்ஷ்மி.    இருவரின்  பக்திப்ரவாகம்.

அவர்கள்   தலைமையில்   பிரதி  சனிக்கிழமை  நடக்கும் பஜனை. அப்படி   ஒரு    கட்டுப்பாடு.ஒழுங்கு  ஒருமித்தல்.  அது எப்படிதான் வருமோ?

நம்கெல்லா ஆகோதில்ல.. எப்படி இவ்வளவு பேருக்கு பண்ரா, தைரியமா பண்ரா,

பஜனை பண்றவா   எப்படி  அக்கறை   எடுத்து  பண்றாளோ அதே மாதிறி  ப்ரஸாதமு நன்னா பண்ரா   இப்படி   கன்னடத்தில் புதுசா வரவாளிடம்  மற்றவர்கள்    சொல்லும்   விமரிசனங்கள்.

அதிகம்  எழுதினால்  சுய புராணமாகிவிடும். எனக்கு கன்னடம்  அவ்வளவாக வராதுன்னு எண்ணம். நன்னா எனக்கு புறியறது.  மாமிக்கே   வெண்ணெய் வெச்சு பேசரிங்களா?  ஸக வயது. சிறிப்பும் குஷியுமாக பேச்சு.

பஜனைரூம்  ஜெகஜ்ஜொலியாக  ஜொலிக்கிறது.

மாலைகள் அலங்காரம் பெரியமாமா மாமி    வந்தாச்சு.

என்ன ஆரம்பிக்கலாமா?   ஆரம்பிச்சாச்சு.

போதேந்ரம் ஜெகதாம்குருமாச்ரயே–

பஜேஸத்குரும்—-மருதாநல்லூர்

ச்ருதி,ச்ம்ருதி புராணானாம்  ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்.  சங்கரர்

கலய யசோதே தவபாலம்,   க்ஷேமம் குரு கோபாலா  தரங்கப்

பாடல்கள்.தொடர்ந்து   நாமாவளி.

பாலயமாம் ச்ரீ    பத்ராசல ராமதாஸர்

ஹரிநாராயண ஹரிநாராயண     புரந்தரதாஸர்

கேலதிமம ஹ்ருதயே    ஸதாசிவ ப்ரமேந்ராள்

ஆடாது அசங்காது வா   ஊத்துக்காடு

கபீர்தாஸ்   பாட்டு

மோரிலாகி லடககுரு   சரண  நஹி  மீராபாய்

இன்னிக்கி  எல்லாம்  சீக்கிரம் சீக்கிரம் முடியரது.வீட்டுக்கு சுருக்கப் போகலாம். இந்த நாள் வர   இன்னும் ஒரு வாரம் காக்கணும். ஒரு  பெறிய போஸ்ட்லே  இருக்கிற இவா நல்ல காரியம் செஞ்சு மனுஷாளை எப்படி  கட்டிப் போடரா பாருங்கோ.

ஒரு ஃபேக்டரி   நடத்ரவர்   பெண்டாட்டியோடு  இவ்வளவு  ச்ரத்தையா நடத்ரது   ரொம்ப அபூர்வம். திரு.  விச்வநாதன் தம்பதிகளை  நிரைய     பாராட்டும் வார்த்தை போன வாரம்   பெறியவர் வீட்டிலே   திவ்யநாமம் நடந்ததே அப்பப்பா   அந்த  தீபத்தே யெடுத்திண்டு,  பேகபாரோ,பேகபாரோ, என்னமா உருக்கமா பாடிண்டு  வந்தார் பார்தெங்களா?

பின்னாடி எல்லாரும் பாட  கண்கொள்ளா காட்சி. அது மட்டுமா  ராமபத்ர ராரா ச்ரீ ராமச்சந்திர ராரா நான் அப்படியே உருகி விட்டேன்னா பாத்துகோங்கோ.

சட்டென்று  எல்லார் வீட்டு சின்ன பசங்களும் ஒரு பெறிய ஹிமாலயாபொக்கே   பவுடர் டப்பாவை  வீட்டில் வைத்துக் கொண்டு  ஆடிப் பாடும்   காட்சிகள்   நினைவிற்கு வருகிரது.

மாமி  குழந்தைங்களை   இங்கே விடறேன்.  எழுந்தா சொல்லுங்கோ. பெறிய தாழ்வாரம்.   நானும் இன்னிக்கு பாடப் போறேன்னு   முதலில்  போய் உட்காரும்  சுட்டிப் பெண்.ஆச்சு அப்படி இப்படி என்று   அஷ்டபதி வந்தாச்சு.

திரும்ப கணேசத்யானம்,  கஜானனாஓம்  கஜவதனா முருகன் பேர்லே பாடுங்கோ.  தமிழர்களுக்கு சான்ஸ்.

வாணி ஸரஸ்வதி வாழ்க என் தாயே   வாழ்க வாழ்க உனதருளே. கோஷ்டி கானம்.  தொடர்ந்து  அம்பாள் பேர்லே பாடுங்கோ ஜகஜ்ஜனனி   சுகவாணி கல்யாணி  ஜெயாமாமி பாடரார்.

மகாவிஷ்ணு எஸுர்லே   நீவுஹேளி..கன்நடஅன்பர்க்கு  சான்ஸ். நாநேனுமாடிதெனோ வெங்கடரமணா   பாட்டு பாக்யத   லக்ஷ்மி பாரம்மா தெறியாதவாளே இல்லை.

எல்லாம் எல்லாரும்பாட எல்லா கடவுளையும் பாடி முடித்து  ஆஞ்சநேயரையும் கூப்பிட்டு மாருதிராயா  பலபீமா பஜனேலாகே  தேப்ரேமா.முடித்து

பாரோ முராரே   பாலக சௌரே ஸதாவிசார ஸந்தோஷதீரா

ஊடக யேளோ  மையல்ல தூளோ ஆடஸக யேளோ ச்ரி

கிருஷ்ம க்ருபாலோ  . ஸாமிக்கு சாப்பாடு

மாமி  நைவேத்ய கொட்ரீ   கிருஷ்ண  ராவ் எழுந்து  வருவார்.

வயதில் மூத்தவர்.    ஹஜ்ஜி க்ருஷ்ணராவ்ன்னு    கூப்பிடுவோம். பக்தர்களின்  பழ வகைகள்   தட்டில்  அணிவகுக்கும் ஜயஜயதேவாதி தேவவிபோஜய   கோபால கிருஷ்ண க்ருபா ஜலதே.  சந்தனம்,தூபம்,தீபம்,   மாலைகள்  எல்லாவற்றிற்குமாகபாடிதீபாரதனையும் காட்டியாயிற்று. வழி விடுங்கோ  ஹஜ்ஜி வரார் . ப்ரஸாதம் கொண்டுவரார்.

சால்யான்னம் மது  க்ருத  ஸுபான்வித

சாக பாகவித ஸூ ஸம்ருத்தம்

சாரு பஞ்சபக்ஷ்ய பரமான்நம்ததி

ஸ்வீகுரு மாதவ  மது ஸூதனா—-தேவா

பக்ஷணம்,பால் ,ப்ரஸாதம் எல்லாம்

நிவேதநமாகிறது.

பசங்களை எல்லோரும்  எழுப்பி விடரா. ஜயஜயஹாரதி பாடி மங்கள ஹாரதி  எடுத்து   ஸ்லோகங்கள் சொல்லி   நமஸ்கரித்து எல்லாம்   விதரணையாக நடக்கிறது.

உச்சஸ்தாயியில்   நாமாவளிகள்.

உபசாரமுலனுவும் ஆயிற்று.

பிரஸாதத்தை எடுத்துபோய் மொத்தத்தில் கலந்து வினியோகந்தான். ஒவ்வொருவாரம் ஒருவர் என்று பொட்டி போட்டுக்கொண்டு பஜனை சிலவு.    எல்லோரும் கலந்து கட்டி   ஒத்தாசைகள். உப்பெல்லாம் ஸரியா பாத்தூட்டு கொடுங்கோ. இது நான்.

எல்லாம் ஸரியாயிருக்கு. யாருக்கு வேணுமோ கேட்டு வாங்கிப் போங்கள்.  உபசாரம் செய்து   2பேர்  வினியோகம். இன்னும் நிறைய   சொல்லலாம். என்னெல்லாம்  ப்ரஸாதம்,

எப்படி ரஸித்து சாப்பிட்டார்கள்.   ஒரு ஆன்மீக கெட்டுகெதர். எப்படி செய்தோம்.    எந்தமாதிறி வசதிகளக்காலத்தில்? எல்லாம்  எழுதட்டுமா?   யாராவது  பதில் கொடுங்கோ.

ஸந்தோஷமாக எழுதுகிறேன். அன்புடன்  சொல்லுகிறேன்.

இதெல்லாம்  எப்பொழுது  தெறியுமா?  1960 க்கு முன்னும் பின்னுமாக இருக்கும்.   இப்பொழுது போல எனக்குத் தோன்றுகிரது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சில நினைவுகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book