4

புதியதாக  ஒரு அயல் நாட்டிற்குப் போகும் போது நம் பாஷை பேசுபவர்கள்,  நம்  மானிலத்தவர்கள்.யாராவது  அங்கு இருப்பார்களா   இப்படி எல்லாம் யோசனை தோன்றுகிறதல்லவா? அம்மாதிரி எல்லா எண்ணங்களும்   எனக்கும் தோன்றியது.  ஒரு ஏப்ரல் மாதம்  திடீரென்று முதல்நாள்   வந்து விட்டுமறு நாள் நீயும் நாளைக்கு என்னுடன்  வருகிறாய், டாக்டர் செக்கப் போய்விட்டு,   காலுக்கு ஷூ,ஸாக்ஸ் எல்லாம் வாங்க போகணும் என்ற போது,  எனக்கு என்னவோபோலத் தோன்றியதே  தவிர   குஷி  வரவில்லை. அந்த ஊரில் அதே வருஷத்திலேயே நவராத்திரி   எப்படி எல்லாம் கொண்டாடினோம் என்பதுதான்   என்னுடைய பீடிகை.

ஜெனிவா போய் 7, 8 நாட்களில்  அந்த  ஏப்ரல் மாதத்திலும் குளிரு,குளிரு என்றே  சொல்லிக் கொண்டிருந்தேன். இங்கே யாராவது  நமக்குத் தெறிந்தவா கிடைப்பாளா என்ற கேள்விதான் மனதில் வந்து கொண்டே இருந்தது.

பார் உனக்கு நிறைய  தெறிந்தவர்களைக் கொண்டு வந்து இருக்கிறேனென்று ஒரு   அழகான  சிறிய  புத்தகத்தைக் கொடுத்தான்  என் பிள்ளை. ஜெனிவா  இந்தியர்களின்  அஷோஸியேஷன் டைரி அது. ஒரு டைரியைக் கொண்டு கொடுத்து  இதைப் படித்து பாரு இங்கேயும்   எவ்வளவு இந்தியர்கள்  இருக்கிறார்கள் என்று ஓரளவுக்கு  உனக்குத் தெறியலாம் என்றான்.

படித்தேன், படித்தேன்,  அப்படிப் படித்தேன்!!  போங்களேன்.

பெயர்களைப் பார்த்தே  பரவசம்.

நான்கு   மாதங்களுக்கு    முன்பே  மருமகள்  அங்கு போயாகி விட்டதால்   அவர்களுக்கு,  அதுவும்  வேலை செய்பவர்களுக்கு இம்மாதிரி யெல்லாம்  தோன்ற நேரம் கிடையாது.

பேரைப்பார்த்தே தமிழர்கள்,தெலுங்கு,  கன்னடம்,இன்னும் பல மனதில்   வாஸ்கோடகாமா   நன்நம்பிக்கை முனையைக் கண்ட ஸந்தோஷம்போல  வந்து விட்டது.

வசிக்கும் ஏறியா,    போன்நம்பர் முதலானது  இருந்தது. கிட்ட வசிக்கும்   வசிக்கும்  ஒருவருக்கு   போன் செய்து  சுய அறிமுகம் செய்து  கொண்டதில்   அவர்களே  வீட்டுக்கு வருவதாகச்  சொல்லி   வந்தார்கள். இன்னும் வேண்டும் விவரமெல்லாம்  சொன்னார்கள்

நவராத்திரி  விசேஷமாகக்  கொண்டாடும் விஷயத்தையும் சொன்னார்கள்.   எங்களிடம்  கொலு பொம்மைகள்  ஏதும் இல்லாவிட்டாலும்  வழக்கமாக  குத்து விளக்கு பூசை செய்யும் நவராத்ரி   வெள்ளிக்கிழமையில்   கூப்பிட்டு   செய்யலாம் என நாட்டுப்பெண்  மிகவும் மகிழ்ச்சியுடன்  ஒப்புக்கொண்டாள்.

ஆச்சு  நவராத்ரியும் வந்தது. பேத்தி விலாஸினி நாட்டுப்பெண்  பெயர் ஸுமன்.   நாங்கள்  ஜெனிவா வந்திருக்கும் விஷயம்,    எல்லோரும்    மஞ்சள்,குங்குமம்  பெற்றுக்கொண்டு ஸந்தோஷமாக   பிரஸாதம்   சாப்பிட்டுப் போகவேண்டுமென்று ஃபோனிலும் கூப்பிட்டுச் சொல்லி,   ஜிமெயிலில்   விவரம் கொடுத்தாள்.

 

கூப்பிட்ட   அனைவரும்   வந்தனர்.   சென்ற வருஷம்  வீட்டில் பெறியவருக்கு  உடல் நிலை மோசமாக  இருந்ததால்  எதுவும் செய்யவில்லை.  இன்று   எல்லோரையும்  கூப்பிட்டிருப்பதாக பேத்தியும்,நாட்டுப் பெண்ணும்   ஃபோன் செய்திருந்தனர்.

எண்ணங்கள் ஜெனிவாவை நோக்கியது.   ப்ளாக் படங்களில் சில  பகிர்வுக்குக் கிடைத்தது. 4 மணியிலிருந்து   இரவு   9 மணி வரையில்  நேரம் குறித்தாலும்  எல்லாம் முடிய   11 மணிக்கு மேலேயேஆகிவிடும்.  வாருங்கள் யாவரும்.   மானஸீகமாக  நான்  ஜெனிவா போகிறேன். பிரஸாதம்  எடுத்துக் கொள்ள  யாவரும்  வாருங்கள்.

பிரஸாதங்களெல்லாம்தான்  தெரியுமே! மாதிரிக்கு.

 

இன்னும்  அனேகம்  இன்னொரு நாள் வேண்டுமானால் பார்க்கலாம்.   இட்லி,  மிளகாய்ப்பொடி, சட்னிக்கெல்லாம் போட்டோ வேண்டுமா என்ன?எல்லோருக்கும் வாழ்த்துகள். போட்டோக்கள்    2,3   வருஷங்களுக்கு  முந்தையது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சில நினைவுகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book