8

ஸாதாரணமாக   அரசர் வெளியே போய்  நேபாலிலேயே மற்ற பகுதிகளில் தங்கி  இரண்டொரு மாதம்   அவ்விட முன்னேற்றங்களை மனதில் வைத்து ஒழுங்கு செய்து விட்டு வருவது வழக்கம்.  அம்மாதிறி   ராஜ ஸவாரிகளின் போது    ஒரு   சிறிய காட்மாண்டுவே    இடம் பெயர்ந்தாற்போல இருக்கும்.

இம்மாதிரி, ஸவாரிகளின்  போதும்,    அயல் நாட்டுக்குப்    பிரயாணம் செய்யும் போதும்   அவர்களுக்கு   ஸ்ரீ.பாஞ்ச்,மஹாராஜாதிராஜ் ஸர்கார் வருகிறார், அல்லது போகிரார் என்று   முன் கூட்டி அறிவித்து விடுவார்கள்.

காட்மாண்டுவிலும், நேபாலில் எவ்விடம் போனாலும் வழியின்    நெடுகிலும்,   யாவர் வீட்டு வாயிலிலும்    பெறிய, பெறிய  குடங்களில் காக்ரிஎன்று   சொல்லுவார்கள் நீரை நிரப்பி    குங்கும,    பூக்கள் என அலங்காரம் செய்து   பூரண கும்ப வரவேற்பு, அல்லது வழியனுப்புதல் கட்டாயமாக   கடை பிடிக்கப்படும். மக்கள் உடலை வளைத்து  இரு கைகளினாலும்   கையைத் தட்டி ஓசையுடன் வணக்கம் செய்யும் நிலையில்  ஸந்தோஷமாக,  வழியனுப்புதலும், வரவேற்பும்  கொடுப்பார்கள்.   இப்படியே எந்த வொரு   கூட்டங்களுக்குப் போனாலும்,  கோவிலுக்குப் போனால் கூட     உடல் வளைத்து கைகூப்பித் தட்டி   ராஜாவுக்கு ராஜ மறியாதை.

இப்படிப்பட்ட ராஜாவின்  வாயுவிமானம் கூட   டாக்ஸி மாதிரி ,கூட்ஸ் வண்டி மாதிரியும்   உபயோகப் படுத்தப் பட்டது. முடியாட்சியே இல்லை.காமாட்சி அதைப்பற்றி   பேசுகிறேன்.

ராயல்ஃப்ளைட்டே   பெயரில்லாமல்  ஆர்மியில்  இணைக்கப்பட்டு, S.N.S.B.S  என்று பெயர் மாறியதும் நடந்தது. ஷாஹி,நேபாலி,ஸைனிக்,   பிமான ஸேவா  என்று பெயர் மாறிய ஆர்மியிலும்  ஸிவிலியனாக   இவர் வேலை செய்வதும் தொடர்ந்தது. எங்கு   திரும்ப  வருகிறேனென்றேன். ?? அவ்விடமே போவோம். ஜும்ஸும்மிற்கு    இரண்டாவது முறையாகச் சென்ற’ ட்வின் ஹாட்டரில் இரண்டு இன்ஜினீயர்களுடன்   இவரும் போயிருந்தார்.

கூடுமான வரை   முடிந்த ஸாமான்களை   ஒரு ட்ரிப் அடித்து விட்டு அடுத்த முறை   ஸ்டாப் மெம்பர்கள் என்று   தீர்மானிக்கப் பட்டது.

அந்த கால கட்டத்தில்   இவ்விடமிருந்து நாம் பேசவேண்டுமானால் ஆகாச்வாணி என்று  ஒரு முறை   டெலிகிராஃப்  ஆபீஸுக்குப் போய் பேச வேண்டும்.  இதை நான் ஸரியாகச் சொல்கிறேனா இல்லையா? தெரியவில்லை.

ஸாதாரணமாக வெளியூர் போனால்  சொன்னபடி வருவார்கள். இல்லை என்றால் யாரிடமாவது தகவல் வரும். ஸமீபத்தில் விபத்து அது இது  என்பதால் மனதில் அச்சம்.

2,  3,நாட்களாகுமென்றால் தெரிவிக்கும்படி சொல்லியிருந்தோம். போன மறுநாளே     கொஞ்சம்   உருப்படிகள் வந்து சேர்ந்தது. அதற்கும் மறுநாள்    சில  சாமான்களுடன்   பரீக்ஷார்த்தமாக பைலட் ஸோம்நாத்   உடானை  டேக்ஆஃப் செய்யும் போது,   பரந்த விமானம் மோதியது  அருகில்  விமானம் நிலை குலைந்தது.

விமானி தப்பினார்.  விமானம்    உடைந்ததா? இல்லை தீப்பற்றவில்லையா?   ஆராய்வுக்குழு என்ன சொல்லியதோ/???????

ஒரு      விமானக்குழு   சிப்பந்திகளா,  இன்ஜினீயர்களா,ஹெல்பர்களா எல்லோரும் காட்மாண்டு திரும்ப வேண்டும்.    வேறு விமான ஸேவைகள் எதுவும் இல்லை.

நல்லபடி திரும்ப வேண்டுமே என   குடும்பத்தினரின் கவலைகள்.கெட்டவித கற்பனைகள்  இப்படி 5,  6 குடும்பங்கள்  அல்லலில்.

எப்படி திரும்புவார்கள்?   அவரவர்களுக்குத்  தெறிந்த  பழைய விபத்துக்கள் பற்றி எங்கு என்ன பேசுகிறோமென்ற அறியாத  நிலையில் பேச்சுகள்.

புளி கறைக்கும் மாதிரி நிலையில்லை. ஜ்வாலா முகிதான்  மனதில் யாரும் பயப்படவேண்டாம். ராயல் ஃப்ளைட்  கண்ட்ரோலரே நேரில் போகிரார்.   என்ற பேச்சு சொல்லியனுப்பப் பட்டது. ஓரளவுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்,  நல்லபடி வரவேண்டுமே.

எங்கும் ப்ரார்த்தனை மயமாகத்தானிருந்தது. இல்லை. எத்தனை முறை  ஜும் ஸும் போனபோது இப்டி எல்லாம் விசாரப் பட்டோமா? சாளிக்ராமம் கொண்டு வரலியா,  எங்கும் போக முடியலியா என்ற கேள்விகள்தான் கேட்டுப் பழக்கம்.

ஜும்ஸும்,அதைவிட மோசமான லுக்லா முதலிய இடங்களுக்குப் போய் வரும்போது அவ்விடத்திய உருளைக்கிழங்கு, நல்ல பெறிய அகலமான ஸோயாபீன்ஸ் கொட்டைகள்  என வாங்கி வருவது வழக்கம். நிமிஷத்தில் வேகக் கூடியவைகள்.

தரான்  தன்குடா போனால்   எலுமிச்சை,   ஆரஞ்சுப் பழங்கள் எனக்  கூடை கூடையாய் வாங்கிவந்து  பகிர்ந்து கொள்வது,   தன்கடி போனால் நல்ல வெல்லம்  ஒரு கட்டி 4 அல்லது 5 கிலோ இருக்கும், இப்படி ஆப்பிள் முதல் பூசணிக்காய்,   தக்காளிவரை,   எங்கு எது கிடைக்குமோ வாங்கி வருபவர்கள் உருப்படியாக ஆள் வந்து சேர்ந்தாலே போதும் என அலரலடித்து இருந்தோம்.

சில நாட்கள் கழித்து  கண்ட்ரோலர்   போயிருக்கிறார். அவரும் எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு இரண்டொரு நாளில் நல்லபடி திரும்புவார் என்ற நல்ல செய்தி வந்தது. நல்லதுதானே?திரும்பவும் வருகிறேன்.

பின் குறிப்பு. படஉதவி—-கூகல்தான். வியாபாரத்துக்கோ,லாபத்திற்கோ உபயேகப்படுத்தவில்லை.

ஒரு தற்போதைய அடையாளக் குறிப்பிற்கு உபயோகம். நன்றி.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சில நினைவுகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book