15

ஸன்ஸிடிமுகப்பு

ஜோஹான்ஸ்பர்க்கில் நாங்கள் தங்கி இருந்து அவ்விடமிருந்து முடிந்தவைகளைச் சுற்றிப் பார்த்தோம். கூட வந்தவர்கள் நேபாலி குடும்பத்தினர். ஏர்போர்ட்டில் முன்பு ஜெனிவாவினின்றும் வரும்போது பார்த்தவைகள் ஞாபகத்திற்கு வந்தது.

மறுநாள் காலையில்தான் எங்களுக்கு லெஸொதோ போகமுடியும் ஏர்ப்போர்ட்டின் மேல் தளத்திலுள்ளவைகளைப் பார்க்க, ஏதாவது சாப்பிட என்று போனோம். அவ்விடம் பார்த்த வகைவகையான கலர்களில் உள்ள வர்ணிக்க முடியாத வகையில் கடைகளில் கொட்டிக்கிடக்கும் கற்களை வர்ணிக்க வார்த்தைகளில்லை.

ஆபரணத்திற்காக வேண்டி இக்கற்கள் மனதைக் கொள்ளை கொண்டன.அவை எல்லாமும் ஞாபகத்திற்கு வந்தது. மஸாஜ் செய்வதற்காக வாடிக்கையாளர்களை பலவிதத்தில் ஆகர்ஷிக்கும் பெண்களைப் பார்க்க முடிந்தது. உலகத்து ஸாமான்கள் யாவையுமே   எது வேண்டுமானாலும் வாங்கலாம். அம்மாதிரி பலவண்ணக் கடைகள். பிரமிப்பை உண்டு செய்தது.

ஆனால் நாம் இப்போது வேறு விதமான உலகைப் பார்க்கப் போகிறோம். ஜோஹான்ஸ் பர்க்கில் காலையில் எழுந்து யாவரும் தயாரானோம். அவ்விடம் வீதிகளில் வாயு வேகமாகச் செல்லும் கார்களைத்தான் பார்க்க முடிந்த்தே தவிர மனித நடமாட்டமே இல்லை.

அதிலும் பெண்களைப் பார்க்கவே முடியாது. நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல்காரர்களே ஸரியான பந்தோபஸ்துடன், சுற்றுலாவிற்கும் ஏற்பாடு செய்கிரார்கள்.வரிக்குதிரைகள்

அப்படி இன்று   காட்டு மிருகங்கள்,அதன் இயற்கைச் சூழலில் பார்க்க என்று சொன்னார்கள். ஏதோ டிபனை முடித்துக் கொண்டு, கையில் வேண்டிய கொரிப்பதற்கும் எடுத்துக் கொண்டு அவர்களின் வண்டியில் ஒரு பசுமையான இடத்தில் கொண்டு விட்டார்கள்.

 

அங்கிருந்து அவ்விடத்திய பஸ்ஸில் போகக் காத்திருந்தோம்.கூண்டு வண்டிமாதிரி பஸ் . வழிநெடுக  நல்ல பசுமையான இடங்கள். காடு மாதிரி இல்லை. ஆனால் நாடும் இல்லை.பசுமையான இடம்

பாருங்கோ,பாருங்கோ, அப்புறம் பேசலாம். பிள்ளை எச்சரிக்கிறான். அதுவும் வேண்டும் நமக்கு. வரிக்குதிரைகளைப் பார்க்க முடிகிறது. சிறிது நேரம் வரை வரிக்குதிரைகள்மயம். அப்பறம் ஒட்டைச்சிவிங்கிகள்.ஒட்டைச் சிவிங்கிகள்

 

இது முடிந்ததும் ரெய்னோ. இவ்வளவு தானா !!!!!!!!!!ரெய்னோ

இல்லே வெவ்வேரெ இடம் போகணும். ஒருரவுண்டு வந்து இறங்கினோம். அங்கிருந்து ஸன்ஸிடி போனோம்.

 

பூராநேரமும் சுற்றி சுற்றி, பல கேளிக்கை இடங்கள்,

மிஸ் வேர்ல்ட் நடந்த இடம், இன்னும் பொழுது போக்குகளுக்கான இடம் எல்லாம்

சுற்றிப்பார்த்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

அதற்கும் அடுத்த நாள்.ஸன்ஸிடி முகப்பு

இன்று லயன்ஸ் பார்க்     பார்க்கப் போகிறோம். பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் அவைகள் இறை சாப்பிடும் நேரம்.

வழக்கம்போல் காலை பத்துமணிக்குள் எல்லாம் முடித்துக் கொண்டு ஆர்வமாக சிங்கங்கள்

பார்க்க அதே முறையில் கூண்டு வண்டி,மற்றும் கார்கள் பின்தொடர பெரிய,அரிய காக்ஷிகளைக்

காணப்போகிறோம் என்ற எண்ணத்துடன் பயணிக்கிறோம்.

சிறுத்தைகள்

ஸவாரி

சிறுத்தைகள்காட்டெருமைகள், மான்கள் காட்சிகள்

காட்டெருமைகள்

சிங்கங்கள் இறை பிடித்துச் சாப்பிடும் காட்சியானால் பார்க்கக் கஷ்டமாக இருக்குமே. பாட்டிக்கு பயமா? பேத்தியின் கேள்வி.

அவர்கள் உலகம் அவர்களுக்கு. ஸரியாக பன்னிரண்டுமணி. அங்கே பாருங்கள். சிங்கங்கள் அணி வகுத்து ஏக்கமாக நிற்கிறது. பின்னோட்டமிடுகிறது. . உணவு போடும் ஜீப்.

உயர்ந்த இரும்புக் கூட்டுடன் வருகிறது. சிங்கங்கள் பின் தொடருகிறது.சிங்கங்கள்தயார்

பார்வையாளர்கள் உஷாருடன பார்க்க, தொப்,தொப் என்ற சப்தத்துடன் இறைச்சி வேகமாக வீசப்பட

ஆங்காங்கே விழுகிறது.

பொத்தென்ற சப்தத்திற்கு நாய்கள் எச்சில் இலைகளுக்கு முந்திக் கொண்டு ஓடுவதுபோல சிங்கக்

கூட்டம் ஜீப்பின் பின்னால் ஓடுகிறது. இறையைக் கவ்விக் ,கொண்டுஏகாந்தமாகப்புசிக்க, கூட்டாஞ்சோறு

சாப்பிடஎன்று வெகு ஸ்வாரஸ்யத்துடன் புசிக்கும் சிங்கங்களைப் பார்க்க முடிகிறது.

உணவு ஜீப்புடன்

லோடு காலியான பிறகும் இன்னும் ஏதாவது விழுமா என்ற நப்பாசையுடன் ஜீப்பின் பின்னால் நிற்கும் ஆவலாதிகளையும் பார்க்க முடிந்த்து. பசி வந்திடப் பத்தும் அவைகளுக்கும் பறந்து போகும் போலும்.!!!!!!!!!!! மேலும் வெண் சிங்கங்கள், அவைகளின் ஆசுவாஸம்.

சும்மா ஒரு எஸ்கர்ஷன் மாதிரித் தோன்றுகிறதா? எவ்வளவோ வருஷங்களுக்கு முன் பார்த்த விஷயம். இன்னும் ஒரு சிறிய பிக்னிக், பாக்கி உள்ளது. பிறகு பார்க்கலாம்.வெண்சிங்கம்குட்டிப் பாப்பா

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சில நினைவுகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book