16
பிரமாதமாக இன்னும் சிறிதுதான் பாக்கி வருகிறேன் என்று ஆப்ரிக்க பிரயாணத்தைப் பங்கு கொள்கிறேன் என்று இவ்வருஷம் மே மாதம், எழுதினேன்.
சொன்ன சொல் தவறாமல் டிஸம்பரிலாவது முடித்து விடலாம் என்று வந்திருக்கிறேன்.
புதிய பிரயாணம் இல்லையே தவிர , கணினியில் போட்டோக்கள் என்னை அம்போ என்று விட்டுவிட்டாயே என்று கேட்காத குறைதான்.
லெஸொதோவிற்கு யாரும் போகாவிட்டாலும், தென் ஆப்பிரிக்காவிற்கு நீங்கள் யாராவது போகும்போது என்னையும் நினைவு கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன் போலும்!!!!!!!!!!!!சிறிது மன வண்டியை பின்னோக்கி போய் லயிக்க விட்டாற் போகிறது.
இருக்கவே இருக்கிறது நமது மன வர்ணனை. இப்போது லெஸொதோவிலிருந்து தென் ஆப்ரிக்க நேஷனல் பார்க் கோல்டன்கேட் ஹைலேண்ட்ஸைப்பார்க்க என் பிள்ளைக்கு சினேகிதர்கள் குடும்பம் என ஒரு மூன்று குடும்பங்கள் காரில் பிரயாணமாகிறோம்.
எல்லோரும் இளைஞர்கள்.
சாப்பாடெல்லாம் அங்கங்கே கிடைப்பதைப் பார்த்துக் கொள்ளலாம். கொரிப்பதற்கு என்ன அவரவர்களிடம் உள்ளதோ அது போதும். ஒவ்வொரு குடும்பமும் அவரவர்கள் கார். அவர்கள் இஷ்டத்திற்குப் போதுமே இருப்பது.
கிராமங்கள் எப்படி இருக்கு பார்க்கணும். என்னுடைய வேண்டுகோள். இன்னும் பரம ஏழை. அதுதவிர என்ன பிரமாத வேற்றுமை? அட வீடுகளைப் பார்க்கலாமா?
இல்லை. கற்களாலான சுவர். மேலே ஆஸ்பெடாஸ் ஷீட். அது காற்றில் ஓடாதிருக்க மேலே பெரிய,பெரிய பாறாங்கற்கள்.
இப்படிதான் ஏழையின் வீடுகள். மற்றபடி, உடுப்பு, துணி என ஏழ்மை.
வீட்டைச் சுற்றிலும் மக்கா சோளம் பயிர். அதுவும் செழுமையாக இல்லை.
வரண்ட பூமி. மனிதர்கள் எங்கும் எந்த இடத்திலும் தயக்கமில்லாமல் வீதிகளில் நடக்கவில்லை. இன்னும் என்ன பார்க்க வேண்டும்.?
கூட வந்தவர்கள் கார் வேகமாகப்போக அவ்வளவுதான். மனதில்ப் பதிந்தது. மலைகளைச் சுற்றியும், பிரிவுகளில் நுழைந்தும் பிரயாணம் தொடர்கிறது. நம் ஊராக இருந்தால் ஏதாவது இதிகாச புராணம் இருக்கும்.
மலைமீது ஏதாவது,கடவுளோ, அடையாளங்களோ இருக்கும். இங்கெல்லாம் அதொன்றுமில்லை. எண்ணங்களும், நினைவுகளும் தேசத்திற்கேற்றவையல்ல என்று மனது கூறியது.
எவ்வளவு வித்தியாஸமான காட்சிகள். ஏதோ யோசனை செய்யாதே. நம் மன உணர்ச்சி மகனாதலால் அவனுக்கும் எக்ஸ்ரே மாதிரி தெரிகிறது போலும். நினைத்தது ஞாபகம் வருகிறது.
கொஞ்ச தூரம் போயாகிவிட்டது. ஏதோ ஒரு இடம்.
கோக்குடிக்கிறார்கள் போலத் தோன்றுகிறது.
அவரவர்கள் நடுநடுவில் ஒரிடத்தில் கூடி சாப்பிட்டுக்கொண்டும்,பார்த்தவைகளைப்
பற்றி விமரிசனம் செய்து கொண்டும் பிரயாணம் தொடர்கிறது.
அவரவர்கள் சவுகரியப்படி குடும்பத்தினருக்கு விரிவுரை செய்யச் ஸரியான இடங்கள். நாங்கள் ஒருவர்தான் அப்பா,அம்மா கூட பிரயாணம் பிள்ளைக் குடும்பத்துடன். எங்களுக்கெல்லாம் அப்புரம் வரக்கூட சான்ஸ் கிடைக்கலாம். ஸரியாக கவனித்துப்பார். இம்மாதிரி இடங்கள் வருவோமென்று நாங்கள் கூட நினைத்தது இல்லை. இடையே பிள்ளையின் வாத்ஸல்யம்.
மருமகளின் கவனிப்பு. இந்த மலைகளெல்லாம் எப்படி வெட்டிஎடுத்திருக்கிரார்கள். கலர்கலரா கல்லெல்லாம் இந்த மலைகளின் பாறைகள் போலும். ஆச்சரியமாக மனக் கற்பனை.
கார் போய்க்கொண்டே இருக்கிறது. சில படங்கள் எடுக்கவே இல்லை. சில அதுவும் இது மாதிரிதான். சிறிது வித்தியாஸம்.இப்போ பாரம்மா. பாதை வளைகிறது. குட்டி மலையொன்று நடுவில். கிரிப்பிரதக்ஷிணமா,திருவருணை,திருக்கழுக்குன்றம் இல்லை.
மேலே குட்டி குடவரைக்கோயிலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.?
இதுவும் கிரிப்பிரதக்ஷிணம்தான். மனதுதானே காரணம்?
இன்னும் வேகமாகப் போகிறது. அடுத்து வளைந்து,நெளிந்து,உயர்ந்து
படர்ந்து என்னைப்பார், என் அழகைப்பார் என்று ஓரிடம்.
குட்டி மலை என்று ஏறவா வந்தோம்?
அடுத்துப் பார்க்க வேண்டாமா?
போகிறோம்,போகிறோம் எங்கு சாலையில்
இன்னும் சற்று தூரம் பார்ப்போம்
ரஸிக்கிறார்கள்.
உடன் வந்த இளம் தம்பதிகள் நாங்கள்