"

5

குளிர் ஆரம்பித்து விட்டாலும் கூட தீபாவளியை ஐந்து நாட்கள் பலவித பெயர்களைச் சொல்லிக்கொண்டாடுவார்கள்.நேபாளத்தில் கடவுள் பக்தி அதிகம்.   முன்பு  அரசாட்சியாக இருந்த போது,  நவராத்திரி தொடங்கி,    தீபாவளி முடிந்து  நான்கந்து நாட்கள்   வரை அதாவது ஒரு மாதத்திற்கதிகமாக   ஸ்கூலிற்கு  விடுமுறை  விட்டுவிடுவார்கள்.

எல்லா பண்டிகைகளின் போதும்  டீக்கா வாங்குவது, அதாவது பெறியவர்களிடம் ஆசி வாங்கி அவர்கள் கொடுக்கும்  ரக்ஷையை  நெற்றியிலிட்டுக் கொள்வது அவர்களாகவே  நெற்றியிலிட்டு  ஆசீர்வதிப்பது   முக்கியமான நிகழ்ச்சியாகும்.

டீக்கா என்பது  சிறிது தயிரில் அரிசியை ஊறவைத்து அதனுடன்  செந்தூர்க் குங்குமம் சேர்த்து   கெட்டியாகக் கலந்த கலவை. நெற்றியிலிட்டால் நன்றாக ஒட்டிக்கொண்டு பளிச்சென்று  பார்வையாக இருக்கும்.

ஒரு ரூபாயளவிற்கு   இதை நெற்றியிலிட்டு  வயதில்ப் பெறியவர்கள் சிறியவர்களுக்கு   ஆசி வழங்குவார்கள்.    தசராவில் இந்த ஆசியை வாங்க  எங்கிருந்தாலும்   வீட்டுப் பெறியவர்களிடம்   வந்து சேர்ந்து விடுவார்கள்.   திஹார் என்றால்  நேபாலியில்  பண்டிகை என்று அர்த்தம்.

தீபாவளியை   ஐப்பசி அமாவாஸையன்று  கொண்டாடுகிறார்கள். அன்று  தீவாலி லக்ஷிம்பூஜாஎன்பார்கள்,  அன்றே காய் பூஜாஅதாவது பசுமாட்டிற்கு பூஜையும் செய்வார்கள்.

அமாவாஸைக்கு முதன் வரும் மூன்று நாட்களில்  முதல் நாள் கௌவா பூஜா.   காக்கையை கவுரவித்து அன்னமிட்டு  பூஜை. சுற்றுப்புற சூழலுக்கு   நன்மை செய்வதைப் போற்றி  நடக்கிறது.

மறுநாள் குகுர்   அதாவது   வீட்டைக் கார்க்கும்,நன்றியுள்ள நாயைக் கவுரவித்து,  பைரவர் எனப்போற்றி    நாய்க்கு மாலை அணிவித்து, திலகமிட்டு, நல்ல சாப்பாடு போட்டு  அதைக் கவுரவிக்கிறார்கள்.

லக்ஷ்மி பூஜை பெறிய அளவில்  வீட்டைத் தூய்மை செய்து வண்ண விளக்குகளாலும்,  பச்சைத் தோரணங்களும்  மஞ்சள்ப் புஷ்பங்களாலும் அலங்கரித்து, பலவித  புஷ்பங்களும்,  பழங்களும்,   இனிப்புகளும் லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணித்து   சாயங்காலம்  தேவிக்கு அமோகமான பூஜை   மிகவும் சிரத்தையுடன் அர்ப்பணிப்பார்கள். பூஜை அரையிலிருந்து செம்மண்ணால்   வாயில் வரை லக்ஷ்மியை வரவேற்க பளிச்சென்று மெழுகி வைத்து  வரவேற்பார்கள்.

மண் அகலில்  எண்ணெய்,திரி போட்ட   விளக்குகளை ஏற்றி ஒவ்வொரு வீடும் ஜெகஜ்ஜோதியாய் ஜொலிக்கச் செய்வார்கள். இடித்த அரிசிமாவில்,பால்,நெய், வாழைப்பழம்,சர்க்கரை சேர்த்துக் கறைத்து  பெறிய,பெறிய  டோநட்டுகள் போல ஒரு இனிப்புப் பண்டம் பெயர்,   ஸேல்என்று சொல்வார்கள்.

அந்த இனிப்புப் பண்டத்தை எண்ணெயிலோ,நெய்யிலோ, பொறித்து எடுப்பார்கள். ஸேல் ரோடி என்ற  அந்த  இனிப்பு நம்முடைய  அப்பம் போன்ற  சற்று இனிப்புள்ளதாக இருக்கும். அது இல்லாத திஹார் இல்லை. நாம் எந்தத் தின்பண்டங்கள் கொடுத்தாலும் அதன் பெயருடன் ரோடி என்பதை இணைக்காது இருக்க மாட்டார்கள்.

உதாரணம். இட்லி.டல்லோ டல்லோ ரோடி  இட்லி.  டல்லோ என்றால் பெரிசு தோசை.பத்லோ ரோடி தோசா.   மெல்லிசாம்.  பத்லோ பழங்கள் ஹல்வாபேர்,பொகட்டே.ஸும்தலா,அம்பா,கேலா,அனார்.

இவைகள் நிவேதநத்ததிர்கு   முக்கியமானவை. இவைகள் முடிந்து பெறியவர்கள்   எல்லோருக்கும் டீக்கா கொடுத்து ஆசிகள் அளிப்பார்கள். இரவு   பெண் குழந்தைகள் ஒன்று சேர்ந்து    அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக் கூறும் பாட்டுகளைப் பாடி   அன்பளிப்புக் கேட்பார்கள்.

மாதிரிக்கு இரண்டுவரி பார்ப்போமா?

ஹே அவுசி பாரே  காய ஆயர பைலோ.இந்த  அமாவாஸையில்பாட

வேண்டி வந்திருக்கோம்.

ஹே அவுசிபாரே   லக்ஷ்மி பூஜா கரேகோ,லக்ஷ்மி பூஜா செய்த நாளில்

ஹே அவுசிபாரே  லக்ஷ்மி ஆயர பொஸேகோ

லக்ஷ்மி  எப்பவும் வந்து இருக்க இப்படி வீட்டு வெளியில் பாடி   அன்பளிப்பு எதுவானாலும் பெறுவார்கள் இதே ஆண்கள்  பெறியவர்கள்,  சிறியவர்கள்,  கும்பல்,கும்பலாக வாத்தியங்களுடன் வந்து, பாடி,  ஆடி சாப்பிட்டு,  கொஞ்சம் குடித்து என்ஜாய் பண்ணிவிட்டு பெறிய தொகையாய் வாங்கிக் கொண்டு பல வீடுகளுக்கும் போய் கலெக்க்ஷன் செய்து பங்கிட்டுக் கொள்வார்கள்.

இதில்,படித்து உத்தியோகம் செய்யும் செல்வந்தர்களும் அடக்கம். இவர்கள் ஆசீர்வதிக்கும் பாட்டின் இரண்டு வரியும் பார்க்கலாமே?

ஹே பனபன  பைகோ டவ்சீரே  சொல்ரோம்சொல்ரோம் வாழ்த்துகள்

ஹே ஆயகோ ஹாமி டௌசீரே நாங்கள்  வந்திருப்பது அதற்குதான்.

ஹே தின்சன் தின்சன் டௌசீரே.கொடுப்பார்கள் கொடுப்பார்கள்

வாழ்த்துக்கு

ஹேகர் கொஸ்தோ டௌசீரே , இந்த வீடு எப்படி வாழ்த்துவதற்கு

ஸிங்கதர்பார் ஜஸ்தோ  டௌசீரே.பார்லிமென்ட் மாதிறி வாழ்த்த

டூலோ மஹால் ஜஸ்தோ, பெறிய பங்களா மாதிறி,

இப்படி பலதினுஸில்   இட்டுக் கட்டிப் புகழ்ந்து பாடி வேண்டிய முக்கியமான இடங்களில் பாடி மகிழ்ந்தவர்களின் ஞாபகம் வந்தது.  பசுபதிநாதர் எல்லோரையும் வாழ வைக்கும் தெய்வம்.

இன்று இதை எழுதும்படியான  ஒரு  நிலையைக் கொடுத்த எல்லாம்வல்ல  பசுபதி நாதரை வணங்கி எல்லோருக்கும் நன்மையைக் கொடுக்கும்படி பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.

 இனிமையான  நினைவுகளில்    சகோதர பூஜை நாளை பாய் டீக்கா அடுத்து எழுதுகிறேன்.  தீபாவளி வாழ்த்துகள்.பட்டாசுகள் படபடக்கின்றன.

தீபங்கள்..

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சில நினைவுகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.