10

P1020560முக்திநாத் போனவர்கள் நல்ல முறையிலேயே வழியைக் கடந்து நல்ல குளிர் உள்ள போதும் ஸரியான ஸமயத்தில் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு அவ்விடம் தாராக்களில் வரும், தண்ணீரில் குளித்தார்களா, அப்படியே தண்ணீரை ப்ரோக்ஷணம், செய்து கொண்டோ எப்படியோ கையில் ப்ரஸாதங்களையும் வாங்கிக்கொண்டு முக்கியமாக அவ்விடம் தெரிந்த நபர் பெற்றுக் கொடுத்த,சாளக்ராமங்கள் கொஞ்சமாக இல்லை!!! வாரிக் கொடுத்து  வழியனுப்பினர்.நிறைய பைகள் கொள்ளாது ஒவ்வொருவருக்கும், நாமா சுமக்கப் போகிறோம்.

நம்முடன் வரும் குதிரை சுமக்கப் போகிறது என்று சொல்லிக் கொண்டே யாவரும் மிக்க ஆனந்தத்துடன் வரும் வழியில் கூட துணைக்கு வந்தவர்கள் காட்டிய இடங்களில் கண்டகி நதியில்
சாளக்ராமங்களையும பொருக்கிக் கொண்டு, ஜன்ம சாபல்யம் அடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடம்.

முக்திநாத் பெயர் தெரியுமே தவிர அவர் விஷ்ணுவா, சிவனா என்று கூட தெரியாது. அதிருஷ்டம் இருந்து இவ்விடம் வந்து போகிறோம் என்று நினைத்துப் பேசியதை, பிறகு சொன்னதை இந்த வரி எழுதும்போதுஞாபகப் படுத்திக் கொள்கிறேன்.

ஒருசாளக்ராமம்

இங்கே காட்மாண்டுவில் ஒரு பழைய விங்கை செங்குத்தாக
ஹெலிகாப்டரில் தொங்கும் படியாக பொருத்திக்கொண்டு
கன்ட்ரோலரின் ப்ளைட் மேலே,மேலே போய்க்கொண்டிருக்கிறது.
ஹெலிகாப்டரிலிருந்து ஆபத்துக் காலங்களில் கீழே உள்ளவர்களைக் காப்பாற்றுவதை எல்லாம் பார்த்திருப்பீர்களே!!
எந்த ஒரு பொருளையும் நான்கு புறமும் ஸபோர்ட் செய்து
ஊஞ்சல் மாதிரியோ, தராசு மாதிரியோ கட்டித் தூக்கினால்தான் அலைக்கழியாது இருக்கும். ஒத்தையாக இருந்தால் மனம் போன போக்கில் ஊசலாடுமே தவிர ஒத்து வராது. இதை நான்  உங்களுக்குப் புரியும்படிஎழுதியுள்ளேனா?படிக்கும் உங்களுக்குத்தான் தெரியும். இதை எழுதும்படியான அவசியம் இதுவும்தான்.

இந்தப் பதிவைப் பற்றி, இவரைப் பற்றி பாருங்கள் தற்போது இவர் 15 மாதங்களாக ஞாபக மறதி நோய்க்காளாகி இந்தியாவில் இருக்கிறோம். டிப்ரெஷனுக்கு மருந்து சாப்பிட்டு அது இந்த அளவில் இருக்கிறது. காட்மாண்டு,ராயல்ஃப்ளைட்,S.N.S.B.S, அந்த ஞாபகங்கள் மனதைவிட்டகலவில்லை இவருக்கு. அதனுடைய வெளிப்பாடாக இந்தப் பதிவுகளைக் கொள்ளலாம். சில ஸந்தேகங்கள் எப்போதாகிலும் கேட்பேன். அவருக்கு ஸதா காட்மாண்டு ஞாபகம் பசுமரத்தாணியாக இருக்கிரது.
இப்போது நீங்களாக மற்றதை யூகித்துக் கொள்ளுங்கள், ஸரி இப்படி ஒரு பதிவு போடலாம் என்று தோன்றியது. இதில், உங்களுக்கு முக்திநாத்தைப் பற்றிய ஸமாசாரங்கள் அதிகம் நான் எழுதவில்லை. காலங்கள் அதிகம் முன்னோக்கி வந்திருக்கிறோம். வசதிகள் பெருகியிருக்கிறது. இது ஒரு கனாக்கால நிகழ்வு.

ராயல்ஃப்ளைட்டையும்,சாளக்ராம வினியோகமும்தான் தலைப்பு. அப்படிதான் விவரங்களும் போய்க் கொண்டிருக்கிறது. மேலேமேலே காப்டர் பறக்கிறது. விங் வேகமாக இப்படியும்,அப்படியும் அலைக்கழிக்கிறது. வேகத்தைக் குறைத்து காப்டர் தரையிரங்க முயற்சிக்கிரது. அத்தப் பழைய விங் வேகமாகப் ப்ரொபல்லரைப் பதம் பார்த்து இப்படியும்,அப்படியுமாக மோதுகிறதா,பதம்பார்க்கிரதா?? எதைச் சொல்ல,என்ன சொல்ல காப்டரை கன்ட்ரோல் செய்ய
பெரும் முயற்சி. கண் இமைக்கும் நேரத்தில் என்ன ஆகிரது பார்ப்பவர் தவிக்க காட்மாண்டு ஏர்போர்ட் ஏரியா தாண்டி ராயல்ஃப்ளைட்டின் மூன்றாவது பயங்கரம்.

இதுதான் சஸ்பென்ஸா??

போச்சு யாவும். கன்ட்ரோலரும், காப்டரும்,கீழே விழ எந்தவித அநுதாபம், யாருக்கு,எப்படி, சொல்ல வார்த்தையில்லை. எங்கு போய்எங்கு வந்திருக்கிறேன், எழுத்தில்தான். சொல்லி,சொல்லி, பார்த்தவர்கள் மாய்ந்து போக,இந்த இழப்பு அந்தக் காலத்தில் பெரிய பயங்கரம். கத்துக்குட்டியோ, அனுபவமில்லாத பைலட்டோ இல்லை. பிறகு எதைப் பற்றி யார் பேசியும்,எதுவும் லாபமில்லை.
பிறகு ப்ளேன்கள் வந்தது. ராயல்ஃப்ளைட் இருந்தது. பின்னர் ஆர்மியில் வாயுஸேவாவாக இணைக்கப்பட்டது.

இதெல்லாம் ராயல்ஃப்ளைட் ஸமாசாரங்கள். இப்போது நாம் ஜும்ஸும்,நபர்களும்,சாலக்ராமங்களும் என்ன ஆயிற்றென்று பார்ப்போம். ஜும்ஸும்மிலிருந்து இவர்கள் வரவிருந்த ஒரு வசதியும் முடங்கிவிட்டது. போனவர்கள் வந்துதானே ஆக வேண்டும்?
போக்ரா வரையில் நடத்து வந்து, பிறகு காட்மாண்டுவர வழி சொல்லப்பட்டு, முக்திநாத் போக ஏற்பாடு செய்த  மாதிரி மட்டக்குதிரைகளும்,வழி காட்டிகளும், ஸெக்யூரிடிகளுக்கு ஆட்களும்
ஏற்பாடு செய்யப் பட்டு சாளக்ராமங்கள் வழி நடையாக ராஜ ஸவாரி மாதிரியில் இவர்களுடன் பாதுகாப்புடன் போக்ரா வந்து சேர்ந்தது.

நான்கு நாட்களாகும், ஐந்து நாட்களாகும் என்ற வழி நடையை நல்ல வழிகாட்டிகளோடு வந்ததால் சிறிது சீக்கிரமேமுடித்து, மூன்று நாட்களிலேயே போக்ராவையடைந்து, விஷயங்கள் எங்களுக்குத்
தெரிவிக்கப் பட்டது.

இதனிடையே விசாரங்கள், கவலைகளெள்லாம் எழுதவேண்டிய அவசியமில்லை. வழி நெடுக நல்ல தங்குமிடமும்,இருப்பதில் நல்ல வசதியும் கொடுத்திருக்கிறார்கள். காட்மாண்டுவும் வந்தாகிவிட்டது. கூட போனவர்கள்,தங்களுக்கு வேண்டிய சில சாளக்ராமத்தை எடுத்துக் கொண்டு, பூணூல் போட்ட பாவுன் நீங்களே எல்லாவற்றையும் எடுத்துப்போய், எல்லாருக்கும், கொடுங்கள் என்று சொல்லிவிட்டனர். ஆதலால் எல்லா சாளக்ராமமும் எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
வந்தவர்களை வரவேற்பதா? சாளக்ராமத்துக்காக, ஸந்தோஷப் படுவதா என்ன செய்வதென்று, திகைப்பும்,ஒரு மூலையில் மன நிம்மதியும், செயலற்று நின்றதும்தான் நினைவுக்கு வருகிறது!!!!!!!!

சாளக்ராமம் மட்டுமா, கொண்டு வந்தனர்?   கூடவே அவ்விடத்திய அழகான நாய்க்குட்டியும்!!!!!!!!!!!!!! ஆளுக்கொன்றாக யாவரும் எடுத்து வந்ததாகப் பெருமையுடன் சொல்ல  பசங்களுக்கெல்லாம் பரம ஸந்தோஷம்.

ஸமீபத்தில் சீனாவினின்றும்,திருட்டுத்தனமாக முப்பது நாய்க்குட்டிகள் ப்ளேனில் வந்ததாக ஒரு செய்தி வந்ததே!!!

அந்தக்குட்டி மாதிறி அசல் அச்சு, நான் ,நீ என்று  போட்டிபோட்டுக் கொண்டு, பசங்கள் கொஞ்ச,   அதற்கு பால் கொண்டுவா என்று என்னைச் சொல்ல   எனக்குக் காரணம் தெரியாமல் ஒரு கோபம் வந்ததே பார்க்க வேணும்?

போதும், பதினைந்து, பதினாரு வருஷங்களாக இந்தப் பசங்களுக்கு எல்லாம் செய்தாயிற்று.  இது வேறு என்ன சீர் வேண்டிக் கிடக்கிறது?

என்னால் எதுவும் செய்ய முடியாது.  ஒரு ப்ரஸங்கமே செய்து விட்டேன்.

பசங்கள்,   நான்,தான் என்று குட்டிக்கு எல்லாம் செய்வதாக ஒப்புக் கொண்டனர். பழுப்பும்,வெண்மையும் ,  கலந்த  புஸுபுஸு திட்டமான ரோமங்களுள்ள  அழகான நாக்குட்டி. அதுவும் இவர்கள் யாவருடனும் ஒட்டிக்கொண்டு என்னிடம் பயந்து கொண்டே  இருந்தது. ரொம்ப அழகாக யாவரும் பார்த்துக் கொண்டனர்.

எல்லாம் ஒருமாதமாகி விட்டது.   அடுத்து வினியோகம்தான்.

அதையும் சொல்கிறேன்.  கட்டாயம் எல்லோரும் வந்து விடுங்கள்.

அடுத்த பதிவு சொல்லி முடிக்கிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சில நினைவுகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book