பின்னுரை
புத்தகம் என்றால் அதற்கு ஒரு முன்னுரை, முகவுரை, உள்ளடக்கம், முடிவுரை என்று அமைப்பது பாரம்பரியம் என்ற வகையில் இந்த ஆக்கத்திற்கும் ஒரு முடிவுரை அமைக்கப்பட வேண்டும் என்ற போதிலும் நினைவுகள் தொடர்வதாலும், முப்பத்தைந்தாண்டு நிகழ்வுகள் அவ்வப்போது வந்து வந்து நவரசங்களையும் விதைப்பதாலும். மனிதனுக்கே உரிய நினைவு சக்தி குன்றாததாலும், நினைக்க நினைக்க வரும் நிகழ்ச்சிகளின் எச்சங்களை தடுக்க இயலாததாலும், வந்த நினைவுகளை எழுதிக்கொண்டே இருக்கப் போவதாலும், போதாக் குறைக்கு இன்னும் என் தோழனின் பகிர்வுகள் தொடரப்போவதாலும், அடுத்து ஒரு தொடர் வெளிவந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக வும், அந்த நிர்ப்பந்தத்தினை கட்டாயமாக நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற சங்கற்பத்தாலும், சங்கற்பம் என்றாலே கைகூடும் என்ற விதியாலும், இந்த தொடர் தொடரப்போது நிச்சயம் என்பதாலும் முடிவுரைக்கு பதிலாக பின்னுரை என்று அமைத்து தொடரும் என்று முடிக்கிறேன்…… …. அப்பாடி மூச்சு விட்டுக்கறேன்.
தங்களின் கருத்துக்களை, சாத்தியப்பட்டால், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பினால் அகமகிழ்வோம்
நன்றி. வணக்கம்.