"

3

இனி!!!!

புலிச் சந்தேகம் என்ற  போர்வையில் இன்னும் சிறையில் வாடும் தமிழர் ஒருபுறம் என்றால்!

புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் சிங்களவர்கள் கூட இன்னும் சிறையில் இருப்பதை இந்த உலகம் மறந்து தன் தலைவன் உத்தமபுத்திரன் என்பது போல பாராளுமன்றத்தில் தூங்கும் கூட்டம் எல்லாம் வாக்கு வாங்கிய மக்களை மறந்த ஆடும் ஆட்டம் எல்லாம் என்று தோற்க்கும்.

image

இனியும் விடியல் வருமா ?,என்று சாமானிய மக்கள்  சிறைப்பறவையானவர்கள் எல்லாம் இனியும் வெளியுலகு கானுவது எப்போது,?

image

எந்த வல்லரசு இவர்களின் விடுதலை பற்றிப் பொதுவில் பேசும்!

இல்லை எந்த நடிகன் பேசுவான்?

இல்லை இனியும் எவர் வாக்கு வேட்டைக்காக  தமிழர் என்று போலி உணர்ச்சியை தூண்டி  தீக்குளிப்போர்  யார் ?,

image

என்று எல்லாம் இனி வரும் காலம் சொல்லும் என்றாலும் இந்த சிறைவாழ்க்கை மட்டும் அரசியல்வாதிகளுக்கு பஞ்சு மெத்தை .

image

அப்பாவி மக்களின் சிறைவாழ்க்கை பற்றி தொடராக எழுதும் ஆசையில் பத்திரிக்கை ஆசிரியரை நாடிய போது!

அவர் சொன்னது” என்னம்மா நீ பிரபல்யமான விசயம் என்றால் நம் பத்திரிக்கையும் விற்பனை அதிகமாகும். வாசகர் வட்டமும்  சினிமா நடிகையின் பின் போகும் தொழில் அதிபர் போல எகிரி வீசும் அதை விடுத்து அடுத்த வேளை என்ன சாப்பாடு போடுவார்கள் என்று அறியாத இருட்டில் வாழும் சிறையில் இருப்போர் பற்றி எழுத  என்னிடம் அனுமதி கேட்டு வந்து என் நேரத்தையும் வீனாக்கிக்கொண்டு”

ஏதாவது சினிமா கிசுகிசு இல்லை, அரசியல்வாதியின் அந்தரங்கம்!
இல்லை மதவாதம் என்று நெருப்பான விடயத்தை பத்தவை!

பத்திரிக்கையில் வலையில் வாசிக்காத  தொடராக இடம் ஒதுக்க சொல்லுகின்றேன்!

இல்லையோ உனக்கு என்று ஒரு உலகை உருவாக்கு.

இப்ப தொழில்நுட்பம் வளந்துவிட்டது சுமா .

image

நீ போகலாம் என்று பிரதம ஆசிரியர் சொன்ன நிலையில் ஆட்சியில் மதிப்பிளந்து போன மந்திரி போல வெளியேறிய சுமாவின் மனதில் அசுரன் நினைப்பு வந்தது  அவசர போலீஸ் 100  போல!

அசுரனிடம்  இந்தவிடயம் பற்றி எப்படியாவது பேசனும் உடனடியாக அவன் இப்ப  பாரிசில்!நடண விடுதியில் உல்லாச வாழ்க்கையில் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே  என்று இருப்பானோ ?,

இல்லை பிரெஞ்சு பெண்கள் பின் சிகப்பு ரோஜா கமல் போல அலைவானா ,,

இல்லை  பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் என்று இருப்பானோ?,

இப்படித்தான் இலங்கையில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் பேசும் போது இலங்கை  பெண்கள் கற்பனை!!!

ஆனால்  பாரிஸ்   நிலையோ அடுத்த சாப்பாடு என்ன என்று ஆஹா பட டெல்லி கனேஷ்  போல வாழும் நிலை யார் அறிவார் என்று சிந்தனையில் அசுரன்  சாப்பாடு தயார் செய்தான்!

முகம் காண ஆசையுடன்….

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

முகம் காண ஆசையுடன். Copyright © by sivanesan79 and தனிமரம் நேசன். is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book