இலங்கை என்ற இனவாத நாட்டில் ஈழத்தமிழர் எல்லாம் புலிகள் என்ற இனவாத ஆட்சியாளர்களின் இனவாத பார்வையில் அப்பாவிகளும் புலிகள் என்ற சிந்தனையில் கைதியாகி . இலங்கை சிறைக்கூடங்களிலும் ,இராணுவ முகாம்களிலும் ,இன்னல்கள் பல நோக்கி ! உயிர் சித்திரவதை பட்டு இன்னுயிர் கொண்டு! இன்றும் நடைப்பிணம் போல வாழ்ந்து கொண்டிருக்கும் பலரில் இன்னும் முகம் காணும் ஆசையுடன் வாழ்வோரில்! தம் எதிர்கால விடுதலை விரைவில் கிடைக்கும்! கருணை பிறக்கும், என்ற கனவில் காத்து இருக்கும் நம்மவர் நிலையினை பலரும் அறியும் ஆவலில் தோன்றிய உணர்வின் வெளிப்பாடே இந்த நாவல். காலத்தின் கரங்களில் எதையும் திணிக்கும் ஆர்வம் இல்லை என்ற போதிலும் வரலாறு முக்கியம் அடுத்த சந்ததிக்கும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு இந்த கதை மாந்தர்கள்.இனி கதை உங்களின் பார்வைக்கு!அதற்கு முன் !
இலங்கையின் சிறையில் பல்வேறு போலிக் குற்றச்சாட்டில் கைதியாக ஈழத்தமிழர் வாழ்வோர் பலர்.அவர்களுக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டி எப்போதும் பிரார்த்திக்கும் ஒரு சாமானியன் தனிமரம் நேசன். விரைவில் ஒளிகிடைக்கட்டும் உறவுகளுக்கு..
ஆவலுடன்
தனிமரம்.
பாரிஸ்.