"

11

இப்போது நீங்கள் என்னை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறீர்கள். சூப்பர்! நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டுமென்று வழிகாட்டுகிறேன்.

பலர் என்னிடம் சொல்கிறார்கள், “உன்னை நிறுத்த வேண்டுமானால், எப்போது வேண்டுமானாலும் என்னால் உன்னை நிறுத்த முடியும்”. நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். “அப்படியானால் நிறுத்த வேண்டியதுதானே? ஏன் இன்னும் தாமதிக்கிறீர்கள்?”

எனக்குப் புரிகிறது. என்னை நிறுத்த வேண்டுமானால், வெறும் நினைப்பு மட்டும் போதாது. உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். என்னை நிறுத்திவிட்ட பிறகு உங்களுக்கு என்னவெல்லாம் சவால்கள் இருக்கப் போகின்றன என்பனவற்றை அறிந்து கொண்டு, அவற்றைச் சமாளிக்க உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள உங்களுக்கு ஒரு திட்டமும், இரண்டு மூன்று மாற்றுத் திட்டங்களும் இருக்க வேண்டும். அந்த திட்டங்களில் எவை உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்று கண்டுபிடிக்க ஒரு சோதனை ஓட்டம் அதாவது ‘ட்ரயல்’ (Trail) பார்க்க வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் போட்ட திட்டம் சரியாக வர உங்களுக்கு உதவாமல் போனால், மாற்று திட்டங்களாகக் குறைந்த பட்சம் இரண்டு திட்டங்கள் வேண்டும். மேலும் நீங்கள் போட்ட திட்டம், நன்றாகச் செயல்படுகிறதா என்று செய்து பார்க்கக் கொஞ்சம் கால அவகாசமும் வேண்டும்.

தேவைப்பட்டால், பொது மருத்துவரையோ, பல் மருத்துவரையோ, உளவியல் ஆலோசகரையோ, மன நல மருத்துவரையோ சந்திக்க நீங்கள் தயாராக இருப்பது அவசியம். அவர்கள் என்னை வெல்ல உங்களுக்கு உதவுவார்கள். இதற்காக அவர்கள் உரிய பயிற்சியும் பெற்றிருக்கிறார்கள்.

நீங்கள் என்னை பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்த என்னை விட்டுவிட்டவுடன் ஏற்படப்போவதாக நீங்களே எழுதியுள்ள கெட்ட விஷயங்களை எதிர்கொள்ளப் போகிறீர்கள். அதே போல் என்னை பயன்படுத்துவதால் ஏற்படும் நல்ல விஷயங்கள் உங்களுக்குக் கிடைக்காது. இவற்றைச் சமாளிக்கத் திட்டங்களும், உரிய முன்னேற்பாடுகளும் செய்து கொண்டால், என்னை நீங்கள் வெல்வது எளிது!

அதற்காகக் கொஞ்சம் நீங்களே யோசியுங்கள். உங்களுக்கு மேலும் உதவ “என்னை தொடர்ந்து உங்களுடன் வைத்திருப்பதற்காக பலர் சொல்லும் காரணங்கள்” பற்றி சொல்கிறேன். இதற்காக நீங்கள் மீண்டும் சில கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். உங்கள் பதில்கள் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும் இருக்கட்டும். நீங்கள் வேறு யாரோ ஒருவருக்காக இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. நீங்கள் என்னை விட்டொழிக்கும் வழியைக் கண்டுபிடிக்கவே இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறீர்கள், அப்படித்தானே?

. எண்

வாக்கியங்கள்

இல்லவே இல்லை எப்போதாவது அடிக்கடி எப்போதுமே

1

காலையில் எழுந்த 30 நிமிடங்களுக்குள் நான் உன்னைப் பயன்படுத்தி விடுகிறேன்.

2

உன்னைப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ள பொது இடங்களில், உன்னைப் பயன்படுத்தாமல் இருப்பது எனக்குச் சிரமமாக இருக்கிறது.

3

எனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கூட உன்னைப் பயன்படுத்தி விடுகிறேன்.

4

குறிப்பிட்ட நேரத்திற்கு உன்னைப் பயன்படுத்தாமல் இருந்தால் எனக்கு உன்னைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற ‘பசி’ எடுக்கிறது.

5

வெகு நேரத்திற்கு உன்னைப் பயன்படுத்தாமல் இருந்தால், உடலிலும், மனதிலும் பல தொல்லைகள் ஏற்படுகின்றன.

6

ஒரு நாளைக்கு எத்தனை முறை உன்னைப் பயன்படுத்துகிறேன் என்பது என் கட்டுக்குள் இல்லாமல் போகிறது.

7

சில காலத்திற்கு முன்னால் நான் உன்னைப் பயன்படுத்திய எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உன்னைப் பயன்படுத்திய ‘கிக்’ (kick) – வரவழைக்க வேண்டி இப்போது நான் உன்னைப் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
8 உன்னைப் பயன்படுத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிவிட்டால், என்ன வேலை இருந்தாலும், அதனை விட்டு விட்டு உன்னைப் பயன்படுத்துகிறேன்

9

நீ என் உடலை, மனதை, குடும்ப உறவுகளை, வேலையைப் பாதிக்கிறாய் என்று தெரிந்தும் உன்னைப் பயன்படுத்துவதை ஒரு குறிப்பிடத்தகுந்த அளவில் குறைக்க முடியாமல் இருக்கிறேன்.

10

உன்னை எடுப்பது, வாயில் வைப்பது, பற்ற வைப்பது, உள் இழுத்து வெளியில் விடுவது போன்ற உன்னைப் பயன்படுத்தும் செயல்கள் அனிச்சை செயலாக, மிகுந்த விழிப்புணர்வில்லாமல், என்னை அறியாமல் நடக்கின்றன

11

என் சந்தோஷங்களைக் கொண்டாட உன்னைப் பயன்படுத்துகிறேன்.

12

உன்னைப் பயன்படுத்தும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

13

என்னை நானே ஊக்கப்படுத்தி கொள்ள உன்னைப் பயன்படுத்துகிறேன்.

14

‘போர்’ (Boar) அடிக்காமல் இருக்க உன்னைப் பயன்படுத்துகிறேன்.

15

தூக்கம் வராமல் இருக்க, வேலையில் என் வேகம் குறையாமல் இருக்க, கவனம் செலுத்த உன்னைப் பயன்படுத்துகிறேன்

16

என் எடை அதிகரிக்காமல் இருக்க/ பசியைக் கட்டுப்படுத்த நான் உன்னைப் பயன்படுத்துகிறேன்,

17

உன்னைப் பயன்படுத்துவதால் நான் பிரபலமான, எல்லோரையும் கவர்ந்திழுக்க கூடியவனாக, எதைப்பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பவனாக மற்றவர்களுக்குத் தெரிகிறேன்.

18

உன்னைக் கையில் ஸ்டைல் -ஆக வைத்திருப்பது, பற்ற வைப்பது, உள்ளே இழுப்பது, புகை விடுவது போன்ற உன்னைப் பயன்படுத்தும் செயல்களை நான் இரசித்துச் செய்கிறேன்.

19

என் குறைகளைத் தீர்க்கும் ஒரு நண்பனாக உன்னைப் பார்க்கிறேன்.

20

நான் கோபமாக இருக்கும் போதோ அல்லது பதற்றப்படும் போதோ எதைப்பற்றியாவது கவலைப்படும் போதோ ரிலாக்ஸ் செய்ய உன்னைப் பயன்படுத்துகிறேன்.

21

என் பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டுமென்பதற்காகவோ அல்லது வருத்தமாக இருக்கும் போதோ உன்னைப் பயன்படுத்துகிறேன்.

22

நான் குறிப்பிட்ட சில விஷயங்களைச் செய்யும் போது (எடுத்துக்காட்டாக, டீ அருந்தியவுடன், சாப்பாடு சாப்பிட்டவுடன்), உன்னைப் பயன்படுத்துகிறேன்.

23

நான் குறிப்பிட்ட சில இடங்களில் இருக்கும் போது (எடுத்துக்காட்டாக, கழிவறையில், அலுவலகத்திற்குள் நுழையும் முன்) உன்னைப் பயன்படுத்துகிறேன்.

24

என்னைச் சுற்றி இருப்பவர்கள் உன்னைப் பயன்படுத்தும் போது (எடுத்துக்காட்டாக நண்பர்களுடன் இருப்பது, மது அருந்தும் போது) நானும் உன்னைப் பயன்படுத்த வேண்டியதாகிறது

இப்போது உங்கள் விடைகளுக்குப் பின்வருமாறு மதிப்பெண்கள் அளியுங்கள்.

இல்லவே இல்லை – 0

எப்போதாவது – 1

அடிக்கடி – 2

எப்போதுமே – 3

பின்வரும் அட்டவணையில் முதல் நெடுவரிசையில் கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண்களுக்கான மதிப்பெண்களைக் கூட்டி, இரண்டாவது நெடுவரிசையில் போடவும். பிறகு மூன்றாவது நெடுவரிசையில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுடன் பெருக்கி நான்காவது நெடுவரிசையில் உள்ள கட்டங்களில் எழுதவும்.

வரிசை எண்கள்

மதிப்பெண்களின்

கூட்டுத்தொகை

எண்ணுடன் பெருக்கவும்

பெருக்குத்தொகை

பழக்கக் காரண பரிமாணம்

1 முதல் 10

3.3

அடிமைப் பழக்கம்

11 முதல் 17 வரை

4.76

மூடநம்பிக்கை பழக்கம்

18

33.33

கையாளும் பழக்கம்

19 முதல் 21

11.11

சமாளிப்புத் திறன் பழக்கம்

22 முதல் 24

11.11

சூழ்நிலைப் பழக்கம்

நீங்கள் இங்கு பெறும் மதிப்பெண்களைப் பொறுத்துதான், என்னை வெல்ல உங்களுக்கு எவ்வாறான உதவி தேவைப்படும் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஒவ்வொரு பரிமாணத்திலும் எந்த அளவுக்கு மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு பரிமாணத்திற்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை தொடர்ச்சியாகவும் கவனமாகவும் படித்து, என்னை வெல்ல உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.