22
இப்போது மேற்சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு, விடாமுயற்சியுடன் என்னை வென்று நூறு வருடங்கள் என்ன அதற்கு மேலும் வாழ உங்களை நான் ஆசிர்வதிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த பல நல்ல காரியங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். உங்களின் தன்னம்பிக்கை குறையும் போதெல்லாம், அவற்றை பார்த்து உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள் “எவ்வளவோ செஞ்சிட்டோம், இதச் செய்ய மாட்டோமா?”.
என்னை பிடிப்பதால், என்னென்ன கெட்ட விஷயங்கள் நடக்கும் என ஏற்கனவே பல நோய்களை பட்டியலிட்டு சொல்லியிருக்கிறேன். என்னை விட்டுவிடுவதால் என்னென்ன நன்மைகள் நடக்கும் எனவும் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
ஆகவே எந்த வயதில் நீங்கள் என்னை விட்டுவிட்டாலும், உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால், “இத்தனை வருடம் பயன்படுத்தாகி விட்டது, இப்போது விட்டு என்ன பயன்?” என்றெல்லாம் கேட்காதீர்கள்.
என்னை விட்டுவிடட்தால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கும் போது, இதனால் உங்களுக்கு ஏற்படப்போகும் நன்மைகளையெல்லாம் நினைத்து உங்களை தேற்றிக்கொள்ளுங்கள். அவற்றுள் ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பணச்செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கிறது. நீங்கள் சிகரெட்டிற்காக முன்னர் செலவழித்த பணத்தை ஒவ்வொரு நாளும் ஓர் உண்டியலில் போட்டு வாருங்கள். அதனை ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்துங்கள். வேண்டுமானால், அந்தப் பணத்தில் புதிய உடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த புதிய உடைகளை அவ்வபோது அணிந்து உங்களை என்னை விட்டு விடுவதற்கான போராட்டத்தில் நீங்கள் இறங்கியதற்காக உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
என்னை பயன்படுத்த சொல்லொ யாராவது வற்புறுத்தினார்களானால், “எனக்கு வேண்டாம்” என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டு அந்த இடத்தை காலி செய்துவிடுங்கள். அங்கேயே நின்றுகொண்டு, “நான் சிகெரெட்டை நிறுத்திவிட்டேன்” என்று தொடங்கி காரணங்களை அடுக்கி விளக்கிக் கொண்ருக்கக்கூடாது. நீங்கள் காரணம் சொல்லத்தொடங்கினால், அந்த மற்றவர் தொடர்ந்து உங்களுடன் பேச வாய்ப்பளிக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி செய்வதால், அவர் உங்களை ஏதாவது சொல்லி என்னை மீண்டும் தொடவைத்துவிடலாம். ஆகவே சொல்ல வேண்டியது “எனக்கு வேண்டாம்” என்பது மட்டுமே!
சுஜாதா என்னை விட்டுவிட என்னென்ன செய்தார் என்பதை அவ்வபோது படித்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை வெல்ல போராடி கொண்டிருப்பதை இருப்பதை ஃபேஸ் புக்கில்/ட்விட்டரில் தெரிவித்துக்கொண்டே இருங்கள். உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்.
என்னை குறைத்து/முழுவதுமாக விட்டுக் கொண்டிருக்கும் இந்த நடத்தை நிலையில் நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு அவசியம். ஆகவே அவர்களிடம் அவ்வபோது உங்கள் நிலையைப் பற்றி பேசி, அவர்களின் ஆலோசனைகளை, ஊக்கங்களை பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் ஓர் உளவியல் ஆலோசகரை/மன நல மருத்துவரை/பல் மருத்துவரை/பொது மருத்துவரை சென்று பார்த்து, அவர்களின் உதவியை பெறுவது என்பது அதிகத் தெம்பினை அளிக்கும்.