
சோழர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே அமைதியாக வாழமுடியும் என்ற நிலை தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கு ஏற்பட்டது.
ஆர்பரிக்கும் அலைகள் வழியிலுள்ள நாடுகளில் ஆழிப்பேரலை வந்ததைப்போல ஆரவாரம் நிகழ்த்தும் சோழப்பேரரசு நாவாய்கள்.
பிரளையம் ஏற்பட்டது போன்ற பேரோசையுடன் கம்பீரமாக கடல் நீரைக்கிழித்துச்செல்லும்…..!
சோழப்பேரரசு நாவாய்கள் புறப்பட்டால் கடலையே ஆக்கிரமித்துக்கொண்டு மீன்கள் நீந்தக்கூட இடமில்லாத அளவிற்கு மரக்கலங்கள் அணிவகுக்கும்.
அவற்றை பார்த்த மாத்திரத்திலேயே எதிரி நாட்டு மன்னர்கள் ஒளிந்துகொள்ளுமளவிற்கு அவை காட்சியளித்தன.