"

16

சாதனை -6: சோழ கங்கம் என்னும் பொன்னேரி:

மேட்டுபாங்கான புஞ்சை நிலங்களில்புதிய தலைநகரான ‘கங்கைகொண்ட சோழபுரத்தை ’ நிர்மாணித்த இராஜேந்திரசோழன், கோவில் கட்டிடத் திருப்பணிக்கும் மக்களுக்கு  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதிருப்பதற்காகவும், பாசன வசதியை மேம்படுத்தி நீர்வளத்தைபெருக்கவும் ‘‘16 மைல் நீளமும்,3மைல் அகலமும் கொண்ட ஒரு மாபெரும் ஏரி ஒன்றை சமவெளிப்பகுதியில்  வெட்டுவித்தான்’’ என திருவாலங்காடு செப்பேடுகள் கூறுகின்றன.
அந்தசோழப்பேரேரியின் மத்தியில் கிரானைட் கல்லால்  ஆனஒரு உயரமான வெற்றித்தூணைம், அதனடியில் கிரானைட் கல்லால் ஆன தொட்டி ஒன்றையும் கட்டி  கங்கைகொண்டசோழீஸ்வரர்க்கு அபிசேகம் செய்த நீரை ஊற்றினான்.
image
மேலும் , கொள்ளிடம் ஆற்றிலிருந்து வந்த காவிரி நீரை தொட்டியில் உள்ள கங்கை நீருடன் கலக்கச் செய்தான்.அன்றிலிருந்து அந்த சோழப்பேரேரிக்குசோழகங்கம்என்ற பெயரையும்…,அந்த கிரானைட் கல்லால் ஆன வெற்றித்தூணுக்கு நீர் மயமான வெற்றித்தூண்’ என்ற பெயரையும் மாமன்னன் இராஜேந்திரன் சூட்டி மகிழ்ந்தான்.

image
அப்படிபட்ட ‘சோழ கங்க ஏரியின்’ நாலாபுறமும் பெரிய, பெரிய பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு,பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன.‘‘மேடு பள்ளமற்ற  சமவெளிப்பகுதியில் இவ்வளவு பெரிய மாபெரும் ஏரி இராஜேந்திரசோழனால் வெட்டப்பட்டது’’ஒரு அசுரசாதனையாகவே கருதப்படுகின்றது.
ஏன்னென்றால்…..?  நாம் வாழும் இவ்வுலகில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்வரை சமவெளிப்பகுதியில் இப்படிபட்ட ஒரு பேரேரி (முற்றிலும் மனித உழைப்பால்) உருவாக்கப்பட்டு பயன்பாட்டில்இருந்ததற்கான சுவடுகள் இன்றளவும் இல்லை.