"

19

அளவில் மிகப்பெரிய செப்பேடுகள்  வெளியிட்ட சோழன் :

 தஞ்சையில் முதன்முதலாக சோழப்பேரரசை நிறுவிய விஜயாலசோழன் முதற்கொண்டு,முதலாம் ஆதித்தசோழன்,இராஜராஜசோழன் ஆகிய மன்னர்கள் அனைவருமே தங்களுக்கென்று ஒன்று அல்லது இரண்டு செப்பேடுகளைத்தான் வெளியிட்டிருக்கிறார்கள்.ஆனால் மாமன்னன் இராஜேந்திரசோழன் ஒருவன் மட்டும் தான் இதுவரை அளவில் மிகப்பெரிய செப்பேடுகளை வெளியிட்டிருக்கிறான்.
 இராஜேந்திரசோழன் செப்பேடுகளின் விவரம்:
1.திருவாலங்காடு செப்பேடுகள்
2.கரந்தை செப்பேடுகள்
3.திருக்களர் செப்பேடுகள்
4.ஆனைமங்கலம்  செப்பேடுகள்
5.எசாலம் செப்பேடுகள்
மேலுள்ள இந்த ஐந்து செப்பேடுகள் மூலமாகத்தான்  நம்மால் சோழர்களின் முழுவரலாற்றையும் வரிசைப்படுத்தி அறியமுடிகின்றது.இச்செப்பேடுகள் மட்டும் இல்லை எனில் உலகப்புகழ் கொண்ட சோழப்பேரரசர்களின் வரலாறு முற்றிலும் இவ்வுலகிற்கு தெரியாது போயிருக்கும்.சோழ வரலாற்றின் மாபெரும் சிறப்புகளும் இராஜேந்திரசோழன் வெளியிட்டுள்ள இந்த செப்பேடுகளால் தான் அறியமுடிகிறது.
கங்கைகொண்டசோழபுரத்தினைச் சுற்றிலும் மிகப்பெரிய அரண்மனைகளும்,பலத்தக் கோட்டைகளும் கட்டப்பட்டன.சோழகங்கமென்னும் மிகப்பெரியஏரி கட்டுமானம் மற்றும் மக்களின் தேவைக்காகப் பயன்படுத்தப் பட்டன.கி.பி.1026இல் ராஜேந்திரசோழன் தன்னுடைய பழையத் தலைநகரை தஞ்சையிலிருந்து புதிய தலைநகரான “கங்கைகொண்டசோழபுரத்திற்கு” மாற்றி மிக சீரும் சிறப்புடன் ஆட்சி செய்துவந்தார்.வடக்கே துங்கபத்திரை நதியும்,தெற்கில் இலங்கை வரையுள்ள சோழப்பேரரசுக்குஇராஜேந்திரசோழன் ஆட்சிக்காலத்திலிருந்தும் அவருக்கு பின் வந்த 16 சோழ மன்னர்களுக்கும் சுமார் 250 ஆண்டு காலம் கங்கைகொண்டசோழபுரமே தலைநகராக புலிக்கொடி கட்டிப் பறந்தது.
கி.பி.13ம் நூற்றாண்டில் சிறப்புபெற்றிருந்த பாண்டியன் சடையவர்மன் சுந்தரப்பாண்டியனின் (கி.பி.1126-12268) படையெடுப்பினால் இந்த வரலாற்று பழம் பெருமைவாய்ந்த                நகரத்தின்         சுற்றுப்          பகுதியிலுள்ள             மதில்சுவர்களும், கோவிலின் வெளிசுற்று மதில்களும், அரண்மனைகளும் தகர்க்கப்பட்டன.அது மட்டுமின்றி ஆங்கிலேயரின் ஆட்சியில் திருவையாற்றிலுள்ள கொள்ளிடஆற்றுக்குப் பாலம் கட்ட கங்கைகொண்டசோழபுரத்துக் கோவிலின் உள் திருசுற்று மதில்களின் கற்கள் பயன்படுத்தப்பட்டது மிகவும் வருத்ததிற்குரியது.இதில் நமக்காக நமது முன்னோர்கள் கடின உழைப்பினாலும், பலமணிநேரம் செலவழித்து செதுக்கிய கிடைத்தற்கரிய கல்வெட்டுகள் எல்லாம் ஆற்றுப் பாலத்திற்க்கு தூணாக நின்று “பயனற்றுப்போனது”.இன்றும் அதன் எழுத்து வரிகளை அந்தப் பாலத்தின் கீழுள்ளத்தூண்களில் காணலாம்.
சடையவர்மன் சுந்தரப்பாண்டியனுக்குப்பின் வந்த மாறவர்மன் குலசேகரன்(1268-1310) மூன்றாம் இராஜேந்திரன் என்ற சோழ மன்னனை கி.பி-1279 ல்  தோற்க்கடித்தான்.சுமார் 450ஆண்டுகளாக புலிக்கொடிகட்டி பறந்த சோழ சாம்ராஜியத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்தான் சுந்தரப்பாண்டியன் .மாளிகை மேடு என்னுமிடத்தில் மறைந்த தலைநகரின் எஞ்சிய அடிப்பகுதிகள் சிலவற்றை இன்றும் நாம் காணலாம்.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஜெயங்கொண்டம்- கும்பகோணம் நெடுஞ்சாலை வழியே செல்லும் போது தென்கிழக்கிலுள்ள “மாளிகைமேடு”என்ற இடத்தில் இராஜேந்திரசோழன் அரண்மனையின் அடித்தள அஸ்திவார அடுக்குகள் மட்டுமே இன்று மிஞ்சியுள்ளன.இங்கிருந்து அகழ்ந்து எடுக்கப் பட்ட தொல்லியல் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையினரால் மாளிகைமேட்டிலுள்ள “அருங்காட்சியகத்தில்” பொது மக்கள் பார்வைகாக வைக்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தின் கோ இல் மறைந்த பின்னும் கோவில்மட்டும் அழியாது நின்று ராஜேந்திரசோழனின் பெருமையை நிலைநாட்டுகிறது. (கோஅரசன்,மன்னன்; இல்இல்லம்,வீடு.   அரசன் வாழ்ந்த வீடு,அரண்மனை)