"

29

 கரந்தை செப்பேட்டும்,அதிலுள்ள  இராஜமுத்திரைக்கான  விளக்கமும்:

சோழர்களின் ஆட்சிகாலத்திற்கு முன்பிலிருந்தே ஒவ்வொரு மன்னனும் தன்னுடைய ஆட்சிகாலத்தில் தனக்கென தன்பெயருடன் கூடிய புதிய நாணயங்களை வெளியிடும் பழக்கமிருந்து வந்தது.அம்மன்னர்கள் பிறநாட்டை வென்றபோது அந்நாட்டு சின்னங்களையும் தங்களது நாணயங்களில் பொறித்துவிடுவார்கள்.

கரிகாலச்சோழன் இமயம் வரைசென்று அதில் தன் புலிக்கொடிநாட்டினான் என்ற செய்தியை

‘’தென்தமிழ்   நன்நாட்டுச் செழுவில் கயற்புலி  மண்டலையேற்ற வரை வீரங்க வெளி‘’ என்னும் சிலப்பதிகாரம் கூறுவதால் நன்கறியலாம்.

 

 

se

 

காவேரிப்பூம்பட்டினத்தில் இறக்கப்பட்ட பொதிகளின் மீது ‘’சுங்கம் (வரி)விதித்து சோதனைசெய்ததற்கு அடையாளமாகப் புலிச்சின்னம் முத்திரையாக குத்தியனுப்பப்படும் என்பதை புலி பொறித்து புறம் போக்கி-என்னும் பட்டினபாலை கூற்றின் மூலமாக அறியலாம்.

 

I28

 

படத்திலுள்ள இராஜமுத்திரையானது இராஜேந்திரசோழனின் 8ஆம் ஆட்சி காலத்தைசேர்ந்த (கி.பி-1020)  52 ஊர்களை ஒன்றாக இணைத்துத் தன் தாயின் பெயரால் ‘திரிபுவன மாதேவி ஸ்துர்வேதி மங்கலம்’ என பெயரிட்டு 1009 சதுர்வேத்தில் சிறந்த பட்டர்களுக்கு கொடையாக அளித்த விவரசெப்பேடு ஆகும்.இது தஞ்சாவூரிலுள்ள ‘கரந்தை’  என்னும் ஊரில் கிடைத்தால் இது கரந்தை செப்பேடு என்னும் பெயர் பெற்றது.இது 57 செப்பேடுகளில் 2500 வரிகளால் எழுதப்பட்ட மிகப்பெரிய செப்பேடு ஆகும்.

 

I21

 

இந்த இராஜமுத்திரையின் விளிம்பைச் சுற்றிலும் வட்டவடிவிலான அக்கால கிரந்த சமஸ்கிருத எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.இதன் துவக்க எழுத்து முத்திரையின் வெண்கொற்றக்குடைக்கு நேராக ஆரம்பிக்கிறது.

 

இந்த இராஜமுத்திரையில் உள்ள வாசகம் பின்வருமாறு உள்ள..,

ராஜத்ராஜந்ய மகுடஸ்ரேணி

ரத்னேஷீ ஸாஸனம் !

ஏதத் ராஜேந்த்ர  சோளஸ்ய

பரகேஸரி வர்மண ஹா!!

இதன்  அர்த்தம்:

இந்த சாசனம் ‘’மன்னனுக்கெல்லாம் மன்னாக விளங்க கூடியவனாகிய  மணிமகுடத்தில் விளங்கி ஒளிவீசும் இரத்தினத்தைப்போன்றது.

இது பரகேசரி வர்மனாகிய இராஜேந்திர சோழனுடையது’’ என்பதாகும்.

பிறகு.., இம்முத்திரை நன்கு கவனிக்க வேண்டும்.இதன் உச்சியில் வெண்கொற்றக்கொடையும் அதன் இருபுறமும் வெண்சாமரை என்னும் கவரியுமுள்ளது.

அதனையடுத்து வரிசையாக ஒரு கோட்டின் மேல் அமைக்கபட்டுள்ளவை தண்டு ,உடைவாள்,இருபுறமும்  குத்துவிளக்குகள்,பின் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சோழர்களின் சின்னமான புலி.இதுக்கு எதிரில் இருப்பது இரண்டு மீன்கள் பாண்டியர்களின் சின்னமாகும்.இவையனைத்தும் வரிசையாக உள்ள கோட்டுக்கு கீழே தலைகீழாக அரைக்கோள வடிவில் சேரர்களின் வில் சின்னம் பொறிக்கப்பட்டு அதில்  5 உருவங்கள் பன்றி சாளுக்கியர்களின் சின்னம் , ஸ்வஸ்திக்-நண்டு , தாமரை , மத்தாளம் ,கண்ணாடி  ) இடம் பெற்றிருக்கும்.

இந்த இராஜமுத்திரையிலிருந்து பார் முழுதும் தனியாணை செலுத்திய இராஜேந்திரனின் தனிதன்மையை அறிந்துகொள்ளலாம்.