"

10

சோழ நாட்டு பெண் உளவாளிகள்  :

6-சோழநாட்டு பெண் உளவாளி (அத்தியாயத்தில் சேர்க்கவும்) i3

 

சோழர்கள் தான் முதன் முதலில் பெண்களையும் உளவாளிகளாக பயன்படுத்தினார்கள். பெண்களையும் தூதுக்கு அனுப்பினார்கள்…அவர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்.., அவர்களுடைய அங்க அவையங்களை  அறிந்துகொள்வதற்கு, ரோமக்கால்கள்,ரோமத்தை வைத்தெல்லாம் ஆய்வு செய்துவிட்டு, இந்தப் பெண் உண்மையை சீக்கிரம் வெளியிடமாட்டாள்,இரகசியங்களை சொல்லமாட்டாள். இவளா‌ல் அரசாங்கத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லை என்றெல்லாம் பார்த்து பார்த்து கவனமாக தேர்ந்தெடுத்தார்கள்.

ஒரு மூலிகை கலவை இருக்கும். அதில் அந்த ரோமத்தைப் போட்டால் எப்படி மாறுகிறது என்று பார்ப்பார்கள்.கலவை நீர்த்துப் போனால் அவருடைய உடலும், மனக்கூறும் இப்படி இருக்கும். அபிலாசைகளுக்கு ஆசைப்பட்டு சீக்கிரமே அந்தரங்களை வெளியிட்டுவிடுவார்கள். ஆனால், அந்தக் கலவை திடநிலையை அடைந்தால், அவ்வளவு சீக்கிரத்தில் எந்தச் சூழ்நிலையிலும் இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இராஜாங்க இரகசியங்களை வெளியிடமாட்டார்கள் என்பன போன்று குறிப்புகள் இராஜ இராஜ சோழ‌ன் ஆட்சி காலத்திலேயே இருக்கிறது.இதையெல்லாம் வைத்துதான் அரசர்கள் அந்தக் காலத்தில் பல கோணங்களில் எதிரிகளை வீழ்த்தினார்கள்.போர்க்களத்தில் நின்று மட்டும்  எதிரிகளை வீழ்த்தவில்லை. இதுபோன்றும் செய்திருக்கிறார்கள்.