"

1

அரியலூர் மாவட்ட வரலாற்றுக்காலச்சிறப்பு :

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரசோழனால் சுமார் 993 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது.அன்று தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கே தலைநகரக விளங்கிய வீரம்விளைந்த பூமியாக இருந்து வந்தது.அப்படிபட்ட தலைநகரை தற்போது தன்னுடைய எல்லையில் கொண்டிருக்கும் அரியலூரின் அக்கால வரலாற்றுக்காலப்பெயர்  “விஷ்ணுபுரம்” என்பதாகும். விஷ்ணுபுரம் என்னும் வரலாற்றுக்காலப்பெயரே (அரி+இல்+ஊர் = அரியலூர்) மாவட்டத்தின் உண்மையான தமிழ்பெயர் ஆகும்.ஆனால் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் மக்களால்  அரி+இல்+ஊர் (விஷ்ணுபுரம்)  என்னும் அழகிய தமிழ் பெயர் சிறிது சிறிதாக மருவி இன்று  அரியலூர் என்றாகியுள்ளது.

அரியலூர் பெயர்க்காரணம் :

 

1 அரியலூர் பெயர் காரணம் I1

அரி+இல்+ஊர் = அரியலூர்; இங்குள்ள அரிவிஷ்ணுவையும் ; இல்இல்லம் (அதாவது வீட்டையும்) ; புரம்இடத்தையும் குறிக்கும்.ஆகவே இன்றைய அரியலூர்(விஷ்ணுபுரம்) மாவட்டம் பல்லாண்டுகளுக்கு முன்னர் விஷ்ணு பிறந்துவளர்ந்த ஊராகும்.

மற்ற எந்த மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் இல்லா வீரப்புகழ் சோழ நாட்டிலுள்ள தற்போதைய அரியலூர் மாவட்டத்துக்கு உண்டு.ஏன்னென்றால்….? இராஜேந்திரசோழனுக்கு பின்னர் முடிசூடிய 16 சோழப்பேரரசர்களுக்கும்…ஏன்…………? சுமார் 250 ஆண்டுகள் தொடர்ச்சியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கே தன்னிகரற்ற தலைநகராக விளங்கிய பெருமை கங்கைகொண்ட சோழபுரத்தையே சேரும்.