"

4

 என்றும் முதல் வரிசை வீரனாக இராஜேந்திரசோழன் :

இராஜேந்திரசோழன் இளமைப்பருவம் பருவத்திலிருந்தே மிக சுறுசுறுப்பானவனாகவும், புத்திசாலியாகவும் , துணிச்சல் மிக்க வீரனாகவும் விளங்கினான்.இராஜேந்திரனுக்கு உரிய பருவத்தில் கல்வியும்,கலைகளும் பயிற்றுவிக்கப்பட்டன.அரச வம்சத்தினர்க்கு முக்கியமானதாக விளங்கும்  வில் ,வாள், ஈட்டி எறிதல், சிலப்பு ,குதிரை ஏறுதல் , யானை ஏறுதல் என அனைத்தும் இராஜேந்திர சோழனுக்கு கற்றுகொடுக்கப்பட்டன.
இராஜேந்திரனும்  நாம் நமது தந்தையை விட அதிகம் சாதிக்கவேண்டும் ….!அதனால் நாம் எல்லாக்கலைகளிலும் சிறந்து விளங்கவேண்டும்  என்ற வெறியில்  பலகலைகளையும் கற்றுதேர்ந்த முதல் வரிசை வீரனாக விளங்கினான்.
4-இராஜேந்திரசோழனின் இளமைப் பருவம்I9
மேலும் , உயர்கல்வி ,அரசியல் பொருளாதாரம், அரசியல் இராஜதந்திரம் , வடமொழி பயிற்சி , கவிபாட மற்றும் இசைபாட பயிற்சி என அனைத்து துறைகளிலும் தலைசிறந்த இளவரசனாக விளங்கினான்.பகலிரவு பாராது போர்பயிற்சியிலும் ,ஆடல் பாடல் , கூத்து போன்ற கலைப்பயிற்சியிலும்  கல்வி , கேள்வியிலும் கடுமையாக ஈடுபட்டு வந்தான்.