இராஜேந்திரசோழன் வடநாட்டு போர்களில் வென்ற இடங்களின் அக்காலப்பெயர்கள் படிப்பவர்களுக்கு எந்த மாநிலம் ,எந்த பகுதி என்பதயறிவது சிரமமாக இருக்கும் ,அதை தவிர்க்கவே இக்காலப் பெயர்களாக புரிந்துகொள்ளேதுவாக இந்த பகுதியில் தந்துள்ளேன்.
இராஜேந்திரசோழனின் வடநாட்டு போர்கள் அனைத்தும் வெற்றியில் முடியக்காரணமாக முதற்காரணமாக இருந்தவர்கள்….இராஜேந்திரசோழனின் படைத்தளபதிகளான அரையன் இராஜராஜனும்,அருண்மொழி பட்டனும் மற்றும் இராஜேந்திரசோழனின் மனைவியான வீரமாதேவியுமே ஆவார்கள்.
1.சக்கரகோட்டப்போர்:
வடநாட்டு போரில் முதலிடமாக விளங்குவது சக்கரகோட்டப்போர் ஆகும்.இது இன்றைய விசாகப்பட்டினமே அன்றைய சக்கரகோட்டமாகும்.
2.ஆதிநகர்ப்போர்:
வடநாட்டு போரில் இரண்டாவதாக விளங்குவது ஆதிநகர்ப்போர் ஆகும். அப்போது ஆதிநகரின் மன்னனாக இருந்த இந்திரதனை சோழப்படைகள் போரில் வென்றது .இன்றைய ஒரிசாவே அன்றைய ஆதிநகர் ஆகும்.இந்த வெற்றிக்கு பிறகு இராஜேந்திரன் கோதாவரிக்கரையிலேயே தங்கி விட்டான்.இப்போது சோழப்படைகள் படைத்தளபதிகளின் தலைமையில் இயங்கியது.
3.தண்டபுத்திப்போர்:
வடநாட்டு போரில் முன்றாவதாக விளங்குவது தண்டபுத்திப்போர் ஆகும். இன்றைய வங்காள நாட்டிலுள்ள மிதுனபுரி மாவட்டமே அன்றைய தண்டபுத்தியாகும்.
4.தக்கணலாடப்போர்:
வடநாட்டு போரில் நான்காவதாக விளங்குவது தக்கணலாடமாகும். இன்றைய வங்காத்திற்கும் பீகார் மாநிலத்திற்கும் இடையேயுள்ள ஒருசில பகுதியே அன்றைய தக்கணலாடமாகும். தக்கணலாட்த்தின் மன்னன் இரணசூரன் ஆவான்.
5.வங்காளதேசப்போர்:
வடநாட்டு போரில் ஐந்தாவதாக விளங்குவது வங்காளதேசமாகும்.அன்றைய வங்காளதேசம் முழுமைக்கும் மன்னனாக இருந்தவன் கோவிந்த சந்திரனாவான்
6.உத்திரலாடம்:
வடநாட்டு போரில் ஆறாவதாக விளங்குவது உத்திரலாடமாகும். இது இன்றைய கங்கை நதிக்கு தென் கரையிலுள்ள மாபெரும் பகுதியாகும்.இதன் அரசனாக இருந்தவன் மகிபாலனாவான்.