"

27

பிரம்மதேசம் :

கடாரப்படையெடுப்பிற்குப்பின்னர் இராஜேந்திரசோழனின் ஆட்சிகாலம் எவ்வித போர்களுமற்ற அமைதியான காலமாவே இருந்தது. இராஜேந்திரசோழனின் இறுதி காலத்தில் அண்டை நாடுகளில் ஏற்பட்ட கலகங்களை இராஜேந்திரனின் மகன் இராஜாதிராஜன் வீறுகொண்டு அடக்கினான்.
தன்னுடைய முடியாத காலத்திலும் ,அண்டை நாடுகளில் எழுந்த கலகங்களை தன் மகன் அடக்க  இராஜாதிராஜன் வீறுகொண்டு அடக்கியபோதிலும் இராஜேந்திரன் மகிழ்ச்சி பெறவில்லை.

உடல் பலவீனப்பட்டாலும் தன் மக்கள் அரசியல் நிலைகளைப்பார்வையிடுவதிலும் , இறைவழிபாடு செய்வதிலும் , புதிதாக சோழநாட்டுடன் இணைக்கப்பட்ட நாடுகளை கண்கானிப்பதிலும் நாட்டம் கொண்டவனாகவே இருந்தான்.

image
   
இராஜேந்திரசோழன் தன்னுடைய 84 ஆம் வயதில் (கி.பி-1044)ஆம் ஆண்டு இன்றைக்கு திருவண்ணாமயில் உள்ள பிரம்மதேசம் என்றழக்கப்படும் ஊரில் உள்ள மாபெரும் அரண்மனையில் தங்கியிருந்த காலத்தில் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்து இப்பூவுலகை விட்டு மறைந்தான்.
இவனது திருவுடல் பிரம்மதேசத்திலுள்ள சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது .
இராஜேந்திரசோழன் இறந்தபோது அவனது தேவி வீரமாதேவியும் உடன்கட்டை  ஏறி வீரமரணமடைந்தாள்.இவ்விருவர் உயிர்களின் நீர்வேட்கை தணியும் பொருட்டு வீரமாதேவியின் தம்பியும் ,சேனாதிபதியுமான மதுராந்தகன் பரகேசரி நீர்பந்தல் அமைத்தான் என்று ‘இக்கோவிலிலுள்ள கல்வெட்டுகள்’கூறுகின்றன.
தமிழ்நாட்டு மண்ணிலே பிறந்து …..!கன்னி தமிழை சோழநாட்டில் வளர்த்து….!!வட மொழிகளையும் ஆதரித்து….!!! வட நாட்டினர்களின் கொட்டத்தையடக்கி …..,கடல் கடந்தும் தமிழரின் வீரத்தையும் , தமிழ் மொழியின் கலாச்சாரத்தையும் பரப்பிய ஆற்றல் மிக்க பண்டிதசோழனின் சாதனைகள் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

                                          

image

                     

காலவெள்ளத்தாலும் அழிக்க வொண்ணாப்புகழினைத் தமிழக வரலாற்றுகல்வெட்டுகளில் பதித்துவிட்டுத் தமிழர்களின் மனங்களில் மாசற்றப்பொன்னாய் ஒளிவீசிக்கொண்டிருக்கும் மாமன்னன் பரகேசரி இராஜேந்திர சோழனின் புகழ் வாழ்க…!
இராஜேந்திரசோழனின் பொன்னுடல் மறைந்தாலும், புகழுடல் மறையாது என்பதை அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டசோழீஸ்வரம் இன்றளவும் உணர்த்திக்கொண்டுள்ளது.