"

22

 இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசின் எல்லைகள்

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு;இலங்கை,அந்தமான் நிக்கோபார் தீவு , மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம்,மலேயா(சிங்கப்பூர் – மேலசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திரசோழனே முதன் முதலில் கடல் கடந்து பல்வேறு அயல்நாட்டிற்குப்  பெரும்படை எடுத்துச் சென்று அதில்  முற்றிலும் வெற்றி கண்ட இந்திய மன்னன் ஆவான்.

image
மகிபாலைனவென்று வங்காள த்தை சோழநாட்டுடன் இணைத்தவன்; அதன்  வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்டசோழபுரம் என்னும் புதிய தலைநகரை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வாகித்தான்.வடநாட்டு பெரு வெற்றியின் நினைவுசின்னத்தை நிலைநாட்ட சங்க காலத்தில் “கங்காபுரி” என்றழைக்கப்பட்ட இன்றைய “கங்கைகொண்டசோழபுரம்” என்னும் ஊரை தேர்ந்தெடுத்தான்.