1836ல் ஆங்கிலேயரின் ஆட்சியில் திருவையாற்றிலுள்ள கொள்ளிட ஆற்றுக்குப் பாலம் கட்ட கங்கைகொண்டசோழபுரத்துக் கோவிலின் நுழைவாயில்,முன்மண்டபங்கள் மற்றும் உள் திருசுற்று மதில்களின் கற்கள் பயன்படுத்தப்பட்டது.கங்கைகொண்டசோழபுரத்துக் கோவில் 1000ஆண்டுகளுக்கு முன்.., நவீன வசதியின்றி வாழ்ந்த தமிழர்களின் பண்பாட்டினை உலகிற்கு உணர்த்தும் ஒர் உன்னதச்சின்னமாகும்.