1.திருவிமானம் ,அகமண்டபம்,முகமண்டபம்,அம்மன் கோவில்,திருசுற்று மாளிகை ,திருமதில்,கோபுரங்கள் முதலிய அம்சங்கள் யாவும் “ஒரே மன்னராட்சி காலத்தில்”கட்டப்பட்ட சிறப்பைக் கொண்டது “கங்கைகொண்ட சோழபுர சிவாலயம்” மட்டுமே…!
2.கோவில் கட்டடப்பகுதிகள் யாவும் “கிரானைட்கல்லினால்” ஆனவை.போக்குவரத்து வசதி ஏதுமற்றக்காலத்தில் கி.பி.11ம் நூற்றாண்டில் வெகுத்தொலைவிலிருந்து பல டன் எடைக்கொண்ட கருங்கற்களைக் கொண்டுவந்து ஒரு மாபெரும் கற்றளியை “கங்கைகொண்ட சோழபுரத்தில்” எழுப்பிய அசுர சாதனையை யாரலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
3.கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயமும்,தஞ்சாவூரிலுள்ள சிவாலயமும் கட்டிட மற்றும் சிற்பக்கலையில் பல அம்சங்களில் ஒன்று போலிருக்கின்றன. கங்கைகொண்ட சோழபுரக் கோவில் தஞ்சை பெரியக்கோவிலைப் உயரமான “அதிட்டானமேடையில்” ஏற்றி கட்டப்பட்டுள்ளது.இருந்தாலும் இக்கோவில்“அதிட்டானமேடையின் வடிவமைப்பு” கட்டிடக்கலையில் தஞ்சை பெரியக்கோவிலை விஞ்சும் அளவிலுள்ளது.ஆனால் தஞ்சைப்பெரியக்கோவிலின் அடித்தளம் கண்டுபிடிக்க முடியாதப் புதிராக உள்ளது.
4.தஞ்சைப் பெரியக் கோவிலைப் போல் “கங்ககைக்கொண்டசோழபுரக் கோவிலும் சிறப்புமிக்க விமானத்தைப் பெற்றுள்ளது. தஞ்சைப் பெரியக் கோவில் விமானத்தைப் போல் இவ்விமானமும் கவர்ச்சி மிக்கது.மூலவருக்கு மேலுள்ள விமானத்தின் கட்டுக்கோப்பு தஞ்சைப் பெரியக் கோவிலைப் போல் அடிமுதல் ஸ்தூபிவரை கிரானைட்கற்ககளால் ஆனது.ஆனால், தஞ்சைப் பெரியக் கோவில் விமானத்தை விட உயரத்தில் குறைவாக உள்ளது.
தஞ்சைப் பெரியக் கோவில் விமானத்தின் உயரம் –61மீ,கங்கைகொண்ட சோழபுரத்த்து சிவால விமானத்தின் உயரம்-55மீ. தஞ்சைப் பெரியக் கோவிலைப் போல் இக்கோவிலின் அடிமுதல் ஸ்தூபிவரை சிற்பங்கள் மிகுந்த வனப்புடன் காட்சியளிக்கின்றன.விமானத்தின் மீதுள்ள பிரமமந்திரக்கல் தஞ்சைப் பெரியக் கோவிலைப் போல் ஒரே கல்லிலால் ஆனது.இது உடையார்பாளையத்திற்க்கு அருகிலுள்ள “பரணம்” என்ற கிராமத்திலிருந்து சாரம்–சாய்தளம் அமைத்து ஏற்றப்பட்டது.
5.விமானத்தின் சுவர்களிலுள்ள தேவ கோட்டங்களில் உயிர்ச்சிற்பங்களாக காட்சியளிக்கும் பல தெ ய் வ ங் க ளி ன் சி ற் ப ங் க ள் உ ள் ளன. தெற்க்கு சுவற்றிலுள்ள நர்த்தன வினாயகர்,அர்த்தநாரீஸ்வரர்,தஷிணாமூர்த்தி,ஹரிஹரன்,நடராஜர் ஆகிய திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை. மேற்க்குச் சுவற்றிலுள்ள கங்காதரர்,லிங்கோத்பவர்,உபய தேவிகளுடன் கூடிய திருமால், தேவேந்திரன், உமாமகேஸ்வரர் ஆகிய திருவுருவங்கள் உள்ளன.வடக்கு சுவற்றில்காலசம்காரர்,விஷ்ணு,துர்க்கை,பிரம்மன்,பைரவர்,காமதகனமூர்த்தி(தட்சணாமூர்த்தி)ஆகிய திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை.கிழக்குச் சுவற்றில் சண்டேச அனுக்கிரக மூரத்தி,ஞான சரஸ்வதி ,பிஷாடனர்,கஜலட்சுமி ஆகிய திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை.
மெய்மற்க்கச் செய்யும் இச்சிற்பங்கள் யாவிலும் சோழர்காலச் சிற்பிகளின் தனித்திறமை பல்லவசிற்பிகளைவிட ஒரு படிமின்னுவது பளிச்சென்றுத்தெரியும்.இந்து சமய வரலாற்றை பிரதிபலிக்கும் வண்ணமாக “சண்டேச அனுக்கிரக மூர்த்தியின்”சிற்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
6.துவாரபாலகர்கள்:
இக்கோவிலின் மற்றொரு சிறப்புமிக்க அம்சமாகக் கருதப் படுகிறது.கிழக்கு,தெற்க்கு,வடக்கு வாயில்கள் என மொத்தம் 10 துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன.இவை சுமார் 4மீ(18அடி) உயரமுள்ளன வாயிற்காவல கம்பீரசிலைகளாகத் தோற்றமளிக்கினறன.
கோவிலின் வாயிலையடுத்து வலபுறத்திலுள்ள நவகிரகச்சிலைகள் ஒரே கல்லில்செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலிலுள்ள நவகிரகச்சிலைகள் போல இந்தியாவிலே வேறு எங்கும் இல்லை என்பதும், நவகிரக மகாமண்டபத்தில் நவகிரகச்சிலைகளுடன் மேலும் பல அரிய சிற்பங்கள் அமைந்துள்ளது தனிசிறப்பு மிக்கதாகும்.
கருவரைக்கு அதிசய சூரியஒளி அமைப்பு :
8.கர்ப்பகிரகத்திலுள்ள லிங்கம் இக்கோவிலின் மிக முக்கியமான அம்சமாகும்.மூலவர் லிங்கம் 13.5 அடி உயரத்துடன் கூடிய மிகப்பிரம்மாண்ட வடிவிலுள்ளது.பகலில் எவ்வித மின்சார விளக்குகள் இல்லாத சூழ்நிலையில் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது மட்டும் சூரிய ஒளிபிரதிபலிக்கும்படி வினோதமாகவுள்ளது.
இது எப்படி சாத்தியமாகிறது என்றால்…? கோவிலின் முன்புறம் சுதையால் செய்யப்பட்ட நந்தியினுடைய நெற்றியின் உச்சி வெயில்படும்.அப்போது நந்தியின் நெற்றியில் விழுந்த உச்சி வெயில் அதிலிருந்து 90டிகிரி நேராக கருவரையிலுள்ள பிரம்மாண்ட லிங்கத்தின் நெற்றியிலுள்ள பட்டையில் பட்டு வெளிச்சம் தரும்.