கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஜெயங்கொண்டம்- கும்பகோணம் நெடுஞ்சாலை வழியே செல்லும் போது தென்கிழக்கிலுள்ள “மாளிகைமேடு”என்ற இடத்தில் இராஜேந்திரசோழன் அரண்மனையின் அடித்தள அஸ்திவார அடுக்குகள் மட்டுமே இன்று மிஞ்சியுள்ளன.இங்கிருந்து அகழ்ந்து எடுக்கப் பட்ட தொல்லியல் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையினரால் மாளிகைமேட்டிலுள்ள “அருங்காட்சியகத்தில்” பொது மக்கள் பார்வைகாக வைக்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தின் “கோ இல்” மறைந்த பின்னும் “கோவில்”மட்டும் அழியாது நின்று ராஜேந்திரசோழனின் பெருமையை நிலைநாட்டுகிறது. (கோ–அரசன்,மன்னன்; இல்–இல்லம்,வீடு. அரசன் வாழ்ந்த வீடு,அரண்மனை)
கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழ்ப்பாடும் தமிழிலக்கியங்கள்:
கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழ்ப்பாடும் தமிழிலக்கியங்களாக பற்பல உள்ளன.அவற்றுள் முக்கியமான சில இங்கு காணலாம்…
கருவூராரின் திருவிசைப்பாவில் கங்க கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழை கருவூரார் “முக்கண்ணா-நாற்பெருந்தடந்தோள் கன்னலே,தேனே,அமுதே, கங்கைகொண்ட சோழசுரத்தானே’’ என்று மிகஅருமையாக பாக்களால் வர்ணித்துப்பாடியுள்ளார்.அப்பாடல் பின்வருமாறு……..

செயங்கொண்டார் தன்னுடய கலிங்கத்துபரணியில்…,

என கங்கைகொண்ட சோழபுரத்தின் புகழைப்பாடுகிறார்.
ஒட்டக்கூத்தர் தன்னுடைய இராஜராஜசோழனுலாவிலும்,மூவருலாவிலும் இப்பெருநகரின் தோற்றம் பற்றி பாடியுள்ளார்….! இராஜராஜசோழனுலாப் பாடல் பின்வருமாறு…..
