2
கங்கைகொண்ட சோழபுரம் ;
கங்கைகொண்ட சோழபுரம் என்னும் சோழர்கால மாபெரும் தலைநகரின் வரலாற்றுக்காலப்பெயர் “கங்காபுரி”என்பதாகும்.
மாமன்னன் இராஜேந்திரசோழன் தன் தந்தையைப் போலவே சிறந்த வெற்றி வீரனாக விளங்கினார்.கடல் கடந்து இலங்கை,இந்தோனேசியா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் முதல் வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகளை குவித்தார்.கடாரம், கங்கைவரை சென்று பெற்ற பெருவெற்றியின் நினைவாக “கங்கைகொண்ட சோழபுரத்தில்” மாபெரும் கற்றளி – சிவாலயத்தை எழுப்பினார்.மேலும் தன் புதிய தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திலமைக்க திருப்பணி, புதிய நகர் உருவாக்கும் பணியை கி.பி.1023ல் தொடங்கினார்.
ஸ்தல விருட்சம்:

கங்கைகொண்டசோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னிமரக்காடாக விளங்கியது . இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் ஸ்தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோவிலில், வன்னி மரம் உள்ளது.