"

20

இராஜேந்திர சோழனின் மாபெரும் திருக்கோவிலும்,திருக்கோயிலும்:

பண்டித சோழன்,முடிகொண்ட சோழன் ,சோழேந்திரசிம்மன் ,கடாரம் கொண்டான் என பல்வேறு பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்ட இராஜேந்திரசோழன் வெற்றித்திருநகரே கங்கைகொண்டசோழபுரமாகும்.
image
      

கி.பி-1025 ஆம் ஆண்டு இராஜேந்திரசோழனின் 13 வது ஆட்சியாண்டில் இந்நகரம் புதியதாக தோற்றுவிக்கப்பட்டது.தஞ்சையை விட பெருமைமிக்கதாய் மற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு நினைத்த இராஜேந்திரன் இந்நகரை தன் தலைநகராக்கிக்கொண்டான்.மிகவும் சீரியமுறையில் திட்டமிடப்பட்டு, தேர்ந்தக்கட்டிடக்கலை வல்லுநர்களைக்கொண்டு ,இத்தலைநகரமும்,இதனை சேர்ந்த மாளிகைகளும் எழுப்பபட்டன என்ற செய்தியை இராஜேந்திரசோழனின் திருவாலங்காடு செப்பேடுகளாலும்,கல்வெட்டுகளாலும் அறியலாம்.

இத்தகைய சிறப்புடன் நிறுவப்பட்ட இராஜேந்திரசோழனின் கோவிலிருந்துதான் திக்கெட்டும் சென்று  வெற்றிகொண்டு வந்த தீர்த்தளபதிகளுக்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.அந்த மாளிகையிலிருந்து தான் பிறநாட்டு மன்னர்கள் பலரும் வந்து சிரம் தாழ்த்தி தங்களது திறையைசெலுத்திச் சென்றார்கள்.
20-இராஜேந்திரனின் கோவிலும்,கோவிலும் i222
இந்த  அரண்மனையில் உட்கார்ந்து தான் கருவூரார்,ஒட்டக்கூத்தர்,ஜெயங்கொண்டார்,கம்பர்,புகழேந்திப்புலவர்கள் எல்லாம் காவியம் பாடினார்கள்.இந்த  மாளிகையிலிருந்து தான் சோழஇளவரசி அம்பிகாபதியும், கம்பர் மகன் அமராவதியும் ஒருவரையொருவர் காதலித்து ஆடிப்பாடினார்கள்.இவ்வளவு மாபெரும் சிறப்புகளையெல்லாம் கொண்ட மங்கல மாளிகை தான்.., மாமன்னன் இராஜேந்திரசோழனின் திருமாளிகையாகும்.
ஏறத்தாழ 900 ஆண்டுகளுக்கு  முன்னர்வரை வரலாற்றில் புகழ்பெற்று  ,ஈடுஇணையற்று விளங்கிய இந்த  திருமாளிகை மிகப்பெரிய கோட்டை சுவர்களையும் திருமதில்களுடனும் விளங்கியது.
இந்த நகரங்களில தான் சோழக்கேரளன் திருமாளிகை என்று வீரராஜேந்திரன் காலத்தில் அழைக்கப்பட்டதும் , கங்கைகொண்டசோழன் திருமாளிகை என முதலாம் குலோத்துங்கன் காலத்தில் அழைக்கப்பட்டதுமான  மாபெரும் அரண்மைகள் இருந்து வந்தன.இம்மாபெரும் அரண்மனைகளைச்சுற்றிலும் இன்றைய நெடுஞ்சாலைகளைப்போல  பல முக்கிய நகரங்களை இணைக்கப் பெருவழிகள் அமைந்திருந்தன.