கி.பி-910 ஆம் ஆண்டில் முதலாம் பராந்தகசோழன் பாண்டியர்களை ‘வெள்ளூர்’என்னுமிடத்தில் பந்தாடியபோது ,போரில் தோற்ற ‘‘பாண்டிய மன்னன் இராஜசிம்மன்’’ பயந்து ஓடினான்.பாண்டிய நாட்டை முடிசூட்டிக்கொள்ள வேண்டும் என்ற பராந்தகனுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது……….!
போரில் தோற்ற பாண்டிய மன்னன் இராஜசிம்மன் அவனது இந்திர ஆரத்தையும்,மணிமுடியையும் போரில் உதவிய இலங்கை மன்னனிடம் ஒப்படைத்து விட்டு,சேர நாட்டுக்கு தப்பிவிட்டான்.
இதனால் கடுங்கோபமடைந்த முதலாம் பராந்தகசோழன் இலங்கைக்கு தன் வலிமைமிக்க பெரும்படை ஒன்றை அனுப்பி இலங்கை மன்னனை வெற்றிகொள்ளவும் செய்தான்.ஆனால்,இந்திர ஆரமும்,மணிமுடியும் வைரப்போர்வைகளும் கிடைக்கவில்லை.ஆண்டுகள் பல கடந்தன…..சோழமன்னர்கள் பலர் முடிசூடினார்கள். அம்மணிமகுடத்தையும், ஆரத்தையும் சோழர்களால் , இராஜராஜசோழன் இலங்கை படையெடுப்பில் கூட கண்டுபிடிக்கமுடியவில்லை.
அதை சரியாக 107 ஆண்டுகள் கழித்து தன்னுடய படையெடுப்பில் மீட்டான் இராஜேந்திரசோழன்.அது மட்டுமின்றி அப்போது சிங்கள மன்னனாக இருந்த ஐந்தாம் மஹிந்தனுடைய மணிமகுடத்தையும் தட்டிபறித்து அவனை கூனிகுறுகிப்போகச்செய்தான். சிங்கள மன்னன் ஐந்தாம் மஹிந்தனை கைதுசெய்து சோழநாட்டிற்கு கொண்டு வந்து 12ஆண்டுகள் சிறையில் அடைக்க …..அவன் சோழநாட்டு சிறையிலே இறந்துபோனான்.
இராஜேந்திரன் பாண்டியர்களையும் ,சேரர்களையும் தன்னாதிக்கத்தால் அடக்கி தனக்கு கைக்கட்டி கப்பம் கட்டும் நாடுகளாக மாற்றினான்.அதன் பிறகு தன் மூத்த மகனை ஜடவர்மன் சுந்தரசோழபாண்டியன் என்னும் பெயரோடு மதுரையை ஆளும்படி செய்தானகிட்டதட்ட சுமார் 100 ஆண்டுகாலமாக சோழ மன்னர்களால் தேடப்பட்டு வந்ததும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்தாக கூறப்பட்ட ‘‘வைரங்கள் பதித்த போர்வையையும், வைர மணிமுடியையும்,செங்கோலையும்’’ மீட்டபெருமை மாமன்னன் இராஜேந்திர சோழனையே சேரும்.