மேலை சாளுக்கிய நாட்டை வெற்றிகொண்ட சோழப்படைகள்,மிகுந்த உற்சாகத்துடன் கங்கையை நோக்கி புறப்பட்டது.செல்லும் வழியில் தங்களை எதிர்த்துபோரிட்ட அனைத்து நாட்டு சிற்றரசு பேரரசுகளின் படைகளும் தோற்கடிக்கப்பட்டன.இவ்வாறு கங்கையை சென்றடையும் வரையுள்ள நாடுகளையெல்லாம் தன்னடிப்படுத்திக்கொண்டு கங்கை பிரதேசத்தை அடைந்தது.
அந்த சமயம் சோழர்கள் சற்றும் எதிர்பாரதவிதமாக கங்கையில் புதுவெள்ளம் (பூம்புனல்)ஓடிக்கொண்டிருந்தது.அதாவது யாணைகள் அடித்துச்செல்லப்படாத அளவிற்கு புதுவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.ஆனால் போர்வீரர்களால் அந்த புதுவெள்ளத்தை கடக்க இயலாத படியுமாக ஓடிக்கொண்டிருந்தது. அதை கங்கை நதியின் எதிர்கரையிலிருந்து கண்ட கங்கை பிரதேசத்து அரசர்களும்,போர்வீரர்களும் சோழவீரர்களைக்கண்டு ஏளனமாகச்சிரித்தார்கள்.
உடனே சோழப்படைதளபதி ,தன்னுடைய சேனையிலுள்ள அனைத்து யானைகளையும் சோடி , சோடியாக ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றினுள் இறக்கி நிறுத்தசெய்தான்.அந்த யானைகளின் மீது குறுக்குவசமாக மரக்கட்டைகளை அடுக்கி ‘‘யானைப்பாலம்’’ அமைத்தார்கள்.அடுத்தகணமே சோழப்படை மின்னல் வேகத்தில் தங்களை ஏளனம் செய்த கங்கைபிரதேசத்து மன்னர்களின் மீது போர்த்தொடுத்தது,அக்கடும் போரில் வெற்றி வாகையும் சூடியது.
உலக வரலாற்றிலே…!இப்படி முதன்முதலாக ‘‘ஓடும் நதியில் யானைப்பாலம்’’ அமைத்து தன் படைகளை வழிநடத்திச்சென்று வெற்றிவாகை சூடியவன் இராஜேந்திரசோழனும் அவனது படைத்தளபதி அரையன் இராஜேந்திரமேயாவார்கள்.இவையனைத்தும் திருவாலங்காடு செப்பேடுகளால் அறியமுடிகின்றது