"

15

 1000 பொற்குடங்களில் கங்கை நீரை சுமக்கச்செய்த  சோழப்படைத்தளபதி:

கங்கைபிரதேசத்து உத்திரலாட  மன்னன் மகிபாலனும்,அவனுக்கு கீழுள்ள பற்பல சிற்றரசர்களும் ஒன்றுசேர்ந்து சோழப்படையை எதிர்த்துப்போரிட்டார்கள்.அவர்கள் அனைவரையும் தோற்கடித்து அவர்களை கைது செய்து, 1000 பொற்குடங்களில்  புனித தீர்த்தமான கங்கை நதிநீரை எடுத்துகொண்டு,அந்த கங்கை நீர் குடங்களை தோல்வியுற்ற கங்கை நாட்டு மன்னர்களின் தலையிலே சுமந்து வரும்படி செய்து , சோழதேசம் நோக்கி புறப்பட்டார்கள் சோழப்படைத்தளபதிகளான அரையன் இராஜராஜனும்,அருண்மொழிபட்டனும் ,வீரமாதேவியும்…….ஆனால் ,மாமன்னன் இராஜேந்திரன் அப்படைகளுடன் கங்கை வரை செல்லவில்லை.
கோதாவரி நதிக்கரையுடன்  இராஜேந்திரன் ஏன் தங்கி விட்டான்…….?
 
சோழ நாட்டுக்கு எதிரான மன்னர்களின் படைகள் கங்கை நதி  நோக்கி செல்லும் தன்னுடைய படையை சூழ்ந்து விட்டால் பேராபத்து ஏற்படும் என்பதனால்,….தன்னுடய ஒரு படைப்பிரிவை கோதாவரி நதிக்கரையிலேயே நிறுத்தி விட்டான். மற்றொறு படையினை மட்டுமே  கங்கை நதி தீர்த்தம் எடுக்க அனுப்பினான். (*கங்கை சென்ற சோழபடை வீரர்கள் திரும்பி வரும்வரை அவர்களுக்கு காவல் அளிக்கத்தான் கோதாவரி நதிக்கரையிலேயே இராஜேந்திர சோழன் தங்கி விட்டான்.)
இரண்டாண்டுகள் கடுமையாக நடைபெற்ற இப்போரில் வெற்றி  வாகையுடன் சோழதேசம் நோக்கி புறப்பட்டார்கள். வழியில் தன்னுடய படைத்தளபதிகளை வரவேற்று,அவர்கள் கொண்டு வந்த “கங்கை தீர்த்த்தை” கண்ணில் ஒத்திக்கொண்டான் இராஜேந்திரசோழன்.
அதன் பிறகு கோதவரிக்கரையில் முகாமிட்டிருந்த சோழப்படைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பேரிடி போன்ற ஓசையோடு தங்களின் ஒட்டுமொத்த வெற்றியை கொண்டாடி சோழ நாட்டிற்கு புறப்பட்டது.
அப்புனித நீரை தன் தலைநகரில்  புதிதாக கட்டுபட்ட கங்கைகொண்டசோழீஸ்வரர்க்கு அபிசேகம் செய்தான் மாமன்னன் இராஜேந்திரசோழன்.அப்படி அபிசேகம் செய்த நீரை அக்கோவிலிலுள்ள திருக்கிணற்றிலும்,புதிய தலைநகரமைக்கும் போதே ஏற்படுத்தப்பட்ட சோழப்பேரேரியிலும் ஊற்றினான்.அன்றிலிருந்து தான் ‘‘கங்காபுரி’’ என்ற இடம் ‘‘கங்கைகொண்டசோழீச்சரம்’’ என்னும் சிறப்புபெயர்பெற்றது.