இராஜேந்திரசோழனின் எண்ணிலடங்கா சாதனைகள் அனைத்துமே தன் தந்தையின் புகழால் தேங்கி நிற்கிறது.இராஜேந்திரசோழனுக்கென்று உள்ள தனிச்சிறப்பை தமிழர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக இந்த மின்னூலை எழுதினேன்.அவற்றில் மிகமுக்கியமான…… மாமன்னன் இராஜேந்திரசோழன் செய்த மகத்தான பத்து அசுர சாதனைகளை இங்கு காணலாம்.
இராஜேந்திரசோழனின் முதலாவது சாதனை:
ஒரு இளவல் சொல்லுக்கு 9இலடசம் வீரர்கள் அசைந்தார்கள் :
இராஜேந்திரசோழன் தன் தந்தை இராஜராஜசோழனுடன் இளவரசனாக நியமிக்கப்பட்டகாலத்திலிருந்தே சோழப்படைகளுக்கு மாதண்ட நாயகனாக இருந்து போர்வீரர்களுக்கு தலைமை தாங்கி அவர்களை வழிநடத்தியுள்ளான்.இராஜேந்திரசோழன் இளவரசனாக இருந்தபோதே 9 இலட்சம் சோழப்படை வீரர்களுக்கு மாதண்ட நாயகனாக தலைமை தாங்கிச் சென்று பாண்டிய மன்னர்களையும், சேரநாட்டு மன்னர்களையும் வென்று அவர்களது அரசியர்களையும் சிறைபிடித்து மாபெரும் வெற்றி வாகையுடன் சோழதேசம் நோக்கிப்புறப்பட்டான்..
அவன் சோழ தேசம் நோக்கி வெற்றி வாகையுடன் புறப்பட்டு வரும் செய்தியை முன்னரே தூது மூலம் அறிந்த இராஜராஜசோழன் தன்மனைவி வானவன்மாதேவியிடம்….
தேவி….!நானின்றி நம் மகன் நம் நாட்டு சேனைக்கு முதன்முறையாக தலைமைத்தாங்கி சென்றனே..என்று கவலைபட்டாயே……….!
இப்போது பார்த்தாயா….? பாண்டிய மன்னர்களையும், சேரநாட்டு மன்னர்களையும் வென்று அவர்களது அரசியர்களையும் சிறைபிடித்து சோழதேசத்திற்கு வந்து கொண்டுஇருக்கிறான்.
இப்போது தெரிகிறதா நம் மகனின் வெற்றியும், எல்லையற்ற வீரமும் என் கூறிக்கொண்டிருக்கும் போதே இராஜேந்திரசோழன் தன் படைத்தளபதிகளுடன் வந்து சேர்ந்தான்.அப்போது ‘’தன் வீர மகனான இராஜேந்திரசோழனை கட்டிதழுவி ஆரத்திஎடுத்து வரவேற்றாள் இராஜராஜசோழனின் தேவி’’ என இராஜேந்திரசோழனின் கல்வெட்டுகூறுகின்றது.
இளவரசனாக இருக்கும் போதே சுமார்9 இலட்சத்திற்கும் மேற்பட்ட படைவீரர்களுக்கு மாதண்டநாயகனாக விளங்கியபெருமை இராஜேந்திரசோழனையே சேரும்.