"

13

இராஜராஜசோழனால் சாதிக்கமுடியாத  அரும்பெரும் சாதனை எது…?

பிற்கால சோழர் வரலாற்றில்  பல்லவர்கள் காலம் தொட்டே  சோழர்களுக்கும்,மேலைச்சாளுக்கியர்களுக்கும் பகைமையும் போருமாக  காலம் உருண்டோடிக்கொண்டிருந்தது. இங்கு ஒரு சில சமயங்களில் சோழர்கள் ,மேலைச்சாளுக்கியர்களையும்  மேலைச்சாளுக்கியர்கள் சோழர்களையும் வெற்றிபெற்றுள்ளார்கள் . அப்படிபட்ட தோல்வி வரலாற்றில்  ‘‘மாமன்னன் இராஜராஜசோழனின் தோல்வி’’ குறிப்பிடத்தக்கதாகும்.

image
                     
ஆம்,சாளுக்கிய நாட்டின் (இன்றைய கர்நாடக மாநிலமே அன்றைய சாளுக்கிய நாடாகும்) மீது இராஜராஜசோழன் பலமுறை படைஎடுத்தும் ,போரிட்டும்  சாளுக்கிய நாட்டை முழுமையாக வெற்றிகொள்ள இயலவில்லை . அதனால் இராஜராஜசோழன் வெஞ்சினம் கொண்டு ‘‘மான்யகேத்தை நான் பிடிக்காத வரை கிரிஹா விகாரம் செய்வதில்லை ’’ என்று சூளுரைத்தான்.ஆனால் , அதை நிறைவேற்றுவதற்கு முன்னரே  இராஜராஜசோழன் (கி.பி.-1014 )ல் இறந்துவிட்டான்.
 தந்தையின் சூளுரையை நிறைவேற்றுதல் மகனின் கடமை என்பதால் ,இராஜேந்திரன் கி.பி-1020 ல்  தன் பெரும்படையுடன் மேலைசாளுக்கிய நாட்டைநோக்கி புறப்பட்டான்.கி.பி.-1016 ல் பதவிக்கு வந்த சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மனை  எதிர்த்து ‘‘முயங்கி ’’ என்னுமிடத்தில் போர்செய்தான்.அப்போரில்  சோழப்படைகள் இரட்டப்பாடி ஏழரை இலக்கத்தை (மேலைசாளுக்கிய நாட்டைநோக்கி) வெற்றிகொண்டது.
அப்போரில் தோற்ற  சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் உயிருக்கு பயந்து  அருகிலிருந்த காட்டுக்குள் ஒடிவிட்டான். அதன் பிறகு , அந்நாட்டிலுள்ள அற்புத மணித்திரள்களும், பொற்குவியலும்  சோழநாட்டிற்கு கொண்டுவரப்பட்டன என்று திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
மாமன்னன் இராஜராஜசோழனால் சாதிக்கமுடியாத  அரும்பெரும் சாதனையை அவன் புதல்வனாகிய மாமன்னன்  இராஜேந்திரன் சாதித்தது உலகசாதனையே….!