"

28

அறிவியல் நோக்கில் ………., கங்கைகொண்டசோழபுரம்:

                       

image
இக்கோவிலின் கருவரையிலிருந்து 200மீ தொலைவில்.. முன்புறம் கருவரையை நோக்கியவாறு அமைந்துள்ள சுண்ணாம்பு சுதையினாற் செய்யப்பட்ட நந்தியின் நெற்றியிலிருந்து தினமும் பிரகாசமான சூரியஒளி கங்கைகொண்டசோழீஸ்வரர்க்கு செல்லும்படியாக கோவிலின் கட்டுமானம்  அமைக்கப்பட்டுள்ளது.
 
கருவரையின் உள்புறம் கிடைத்தற்கரிய ‘’சந்திர காந்தக்கல்’’ சோழ காலச்சிற்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது.இக்கல்லின் சிறப்பம்சம் என்ன்னவென்றால்…,
***கோடை காலங்களில் கருவரையை குளிர்ச்சியாகவும்…,
***குளிகாலங்களில் (மழைக்காலங்களிலும் கூட) கருவரையை வெதுவெதுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
 
இந்த இரண்டு விஷயங்களும்  பிற்காலச்சோழர்கள் அறிவியல் துறையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்தவர்கள் என்பதற்கு அழியாச்சான்றாக  இன்றும் விளங்குகின்றது.
 
சோழர்களால் மட்டும் எப்படி கடல்கடந்து பலநாடுகளை வெற்றிகொள்ள முடிந்தது….?
 
1)சோழர்களிடம் மட்டும் தான் யானைகளை ஏற்றிசென்று போரிடும் அளவிற்கு மிகப்பெரிய போர்க்கப்பல்கள்” இருந்தன.
 
2)அப்படிப்பட்ட கப்பல்கள் கட்டுமானம் செய்யப்பட்ட இடம் காவேரிப்பூம்பட்டினம்(இன்றைய பூம்புகார்). கப்பல்கள் கட்டுமானத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் சோழநாட்டினரே…!
 
3)கப்பற்படையை முதல்முதலாக நிறுவியவர்கள் சோழர்களே…..!