கடலும்,காற்றும் சோழர்களின் மரக்கலங்களுக்கு கட்டுப்பட்டன.சோழர்கள் கடலைத் தங்கள் கட்டுபாடின் கீழ் வைத்திருந்தார்கள்.வணிக்கப்பல்கள் பாதுகாப்புடன் பயணிக்க சோழக்கப்பல்கள் பகலிரவுபாராது ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தன. அதுவரை அப்படி ஒருஅமைப்பு தமிழகத்தில் விரிவாக ஏற்படுத்தப்படவில்லை.வர்த்தகம் செழிக்க ஏற்படுத்தப்பட்ட நாவாய்கள் ,அசுரவேகத்தில் சக்திவாய்ந்த கடற்ப்படையாக உருப்பெற்றது.”சோழர்கள் கடலின் தோழர்கள்” என்னும்நிலை ஏற்பட்டது.
5
சோழர்கள் கடலின் தோழர்கள்:
இராஜேந்திரசோழனுடைய வங்காளப் படையெடுப்பு சோழர்களின் கடற்படை தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எதிரானப்படையெடுப்பிற்கு முன்னோட்டமாகவே இருந்தது. இராஜேந்திர சோழன் காலத்தில் சோழர்கள் இந்தியபெருங்கலையும், வங்காளவிரிகுடக்கடலையும் நிலப்பரப்பாக நினைக்குமளவிற்கு கப்பல் கட்டும் பணியில் சிறந்து விளங்கினார்கள்.