இராஜேந்திரசோழன் தன் தந்தையைப் போல ஒரு ஆழ்ந்த சிவ பக்தனாக இருந்தார்.தனது தந்தை அமைத்த தஞ்சைப் பெரியக்கோவில் புகழுடன் விளங்கினாலும் தம் புதிய தலை நகருக்கு கங்கை பெருவெற்றியின் நினைவாக ஒரு சிவாலயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்,சிவன் மீது கொண்ட போரன்பினாலும் உருவாக்கப்பட்டதே சங்ககாலத்தில்“-கங்காபுரி” என்றழைகப்பட்ட இன்றைய கங்கைகொண்ட சோழபுரமாகும்.
ஆகம விதிப்படி கோவிலமைத்த சோழர்கள்:
தஞ்சையில் இராஜராஜசோழன் அமைத்த இராஜராஜேஸ்வரம் வீரஆண் மகனுக்குள்ள கம்பீர மிடுக்குடன் காணப்படும் அதற்கு சோடியாக அடக்கத்துடன் காட்சியளிக்கும் பெண் நலினத்துடன் கூடிய கங்கைகொண்டசோழீஸ்வரக்கோவிலை இராஜேந்திரசோழன் விஷ்ணுபுரத்தில்(அரியலூரில்) அமைத்தான்.
தந்தையும் தமையனும் ஆகம நூலில் கூறப்பட்டுள்ள கட்டிடக்கலைக்கு முழுவடிவம் கொடுத்துள்ள அதிசயம் “சோழ நாட்டில்” மட்டுமே இன்றும் நிலைத்திருக்கும் அபூர்வமாகும்.