உலகப்புகழ் கொண்ட சோழப்பேரரசர்களில் முதன்மையானவராக மாமன்னன் இராஜராஜசோழனே விளங்குகின்றார்.இவரது பட்டத்தரசி உலகமகாதேவியாவாள்.எனினும் மாமன்னன் இராஜேந்திரசோழனைப் பெற்ற பெருமை திரிபுவனமாதேவி என்னும் சேர நாட்டு பெண்ணையே சேரும்.ஆம்,வானவன் மாதேவி (எ) திரிபுவனமாதேவி என்ற பெயரைக்கொண்ட இவள் தான் மாமன்னன் இராஜேந்திரசோழனின் அன்னையாவாள்.
3
இராஜேந்திரசோழனின் தாய்,தந்தையர்கள் :

மாமன்னன் இராஜராஜசோழனுக்கும் சேரநாட்டைசேர்ந்த வானவன் மாதேவிக்கும் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் தான் இராஜேந்திரசோழன்….!
இவனது இயற்பெயர் மதுராந்தகன் என்பதாகும்.இவன் இராஜராஜசோழனால் கி.பி 1012ல் முடிசூட்டபட்ட பின்னர் தனது மதுராந்தகன் என்னும் இயற்பெயரை மாற்றி இராஜேந்திரசோழன் என்னும் புதிய பெயரைசூட்டிக்கொண்டான்.