"

  இருட்டடிப்புசெய்யப்படும் சோழப்பேரரசர்களின் பெரும்புகழ்

மாமன்னன் இராஜேந்திரசோழன் கங்கை ,கடாரம், சுமத்ரா, இலங்கை,ஜாவா ,மலேசியா, வியட்நாம், கம்போடியா அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய கடல் கடந்த நாடுகளில் போரிட்டு வெற்றி வாகை சூடினான்..!

மிக மிக வேதனையாக இருக்கின்றது…..,

இத்தனை நாடுகளை வென்ற இராஜேந்திரசோழன் கட்டிய ஆலயம் இன்றும் இருட்டிலே கிடக்கின்றது.இத்தனை நாடுகளையும் வென்ற இராஜேந்திரசோழனுக்காகவும் ,அவன் கட்டிய நினைவு சின்னத்திற்காகவும்   மத்திய மற்றும் ,மாநில அரசுகளும் செய்தது என்ன….? வேறொன்றுமில்லை….சோழர்களின் பெரும்புகழை இருட்டடிப்புச்செய்தது தான்……!

 

இந்த ஆலயம் ஒளி என்னும்  வெள்ளத்திலே காணவேண்டிய இடம்……..!

தமிழர்களின் புகழ் என்னும் வெளிச்சத்தை உலகறியச்செய்தவன் கட்டிய ஆலயம் இது….!!

 

இந்திய அரசாங்கமே முன்னின்று விழா எடுத்து  சோழர்களின் புகழையும்,பெருமைகளையும் இவ்வுலகிற்கு சொல்ல வேண்டிய இந்நேரத்திலே…………..இராஜேந்திரசோழனின் புகழை இருட்டுக்குள்ளே தள்ளப்பார்க்கிறார்கள்…இவ்வளவு சிறப்பும் பெற்ற ‘‘இராஜேந்திரசோழனை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றால்….?’’ எனக்கு என்ன வேதனை எனில்……? மாமன்னன் இராஜராஜசோழனின் புகழையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை………..!

‘‘ஒளி வெள்ளத்தில் மின்னிக்கொண்டு இருக்கவேண்டிய தமிழகவீரச்சின்னம் இன்று இருள் என்னும் கடலால் சூழப்பட்டுள்ளது’’ அதனால் தான் இம்மின்நூலுக்கு “வரலாற்றுப்பக்கங்களில் மட்டுமே மணக்கும் கங்கைகொண்டசோழபுரம்” எனப்பெயரிட்டேன்.

 =தமிழினமே உலக வரலாறறியு முன் உன் வரலாறறிந்துகொள்=