"
முன்னுரை
 
பிற்கால சோழர்கள்:
தமிழகத்தை பண்டைய நாள் முதலே சேர,சோழ,பாண்டிய என்னும் மூவேந்தர்களும் ஆண்டு வந்தார்கள்.எனினும் , கி.மு-3ம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே தமிழகத்தை முதல் நிலையில் ஆண்டு வந்தவர்கள் சூரிய வம்சத்தோன்றாலான சோழர்களேயாவர்.
மாமன்னன் இராஜேந்திரனின் இடைவிடாத மனவலிமையாலும் அவனது படைபலத்தாலும்
கங்கைகொண்டான் ,கடாரம் கொண்டான் , சுமத்ராவை வென்றான்……!
இலங்கை ,மலேசியா, வியட்நாம், கம்போடியா அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய
கடல் கடந்த நாடுகளில் நீந்தி சீனாவின் கிழக்கு  எல்லையையும் தொட்டான் ……!!
அதனால் உலகளாவிய புகழையும் பெற்றான் ……….!!
                  என்பது உண்மை.ஆனாலும்,அவனுக்காக
நாம் செய்தது என்ன …?சோழமண்டலம் என்ற அழகிய தமிழ்பெயரை‘கொரமண்டல் ’ என்று அகோரப்படுத்தியிருப்பது மட்டும்தான்….!அசோகர் ஆண்டார், பாபர் ஆண்டார்,அக்பர் ஆண்டார் ,சத்ரபதி சிவாஜி ஆண்டார் என்று வடநாட்டரசர்களை  தெரிந்து வைத்திருக்கின்ற (தமிழர்கள்)நம்மவர்கள் பலகோடி…..! ஆனால் ,மேற்கூறியபடி வடநாட்டு அரசர்கள் ஆண்டதை விட இரண்டுமடங்கு பல தேசங்களை ஒரே மன்னாக இருந்து ஆண்ட நம் தென்னிந்திய மாமன்னர்கள் இராஜராஜசோழனைபற்றியும் அவரது ஒரேமகன் இராஜேந்திரசோழனைப்பற்றியும்  டெல்லியிலும் ,ஒரிஸாவிலும்,மராட்டியத்திலும் உள்ள மக்களில் எத்தனைபேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்….?என்பது ஒரு மாபெரும்வரலாற்று வினோதமாகும்.அந்த அளவிற்கு பெரும் புகழ்கொண்ட நம் சோழ மன்னர்கள் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.உலகளவில் மாபெரும்நிலபரப்பை ஆண்ட ‘‘பேரரசு சோழர்களின் வரலாறு’’ மத்திய அரசின் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இது மட்டுமல்ல இராஜேந்திரசோழனின் கடற்படை வலிமையை கொண்டாடும் விதமாக முதலில் ‘‘இராஜேந்திரா’’ என்னும் பெயர் வழங்கியிருந்தது.அக்கப்பல் சிதிலமைந்ததால் அது புதுபிக்கும் பணி தொடரப்பட்டது.அதன் பின்னர் அக்கப்பலின் பெயர் ‘‘சாணக்யா’’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
அது மட்டுமல்ல……, மாமன்னன் உலகப்புகழ்கொண்டான் என்றழைக்கப்பட்ட இராஜராஜசோழனின் பெரியகோவிலை தெரியாதவர்கள் இருக்கமுடியாது.அக்கோவிலுக்கு சென்றிருந்தவர்கள் ஒருசிலர் கோவிலின் ஓரத்திலேயே மாமன்னன் இராஜராஜசோழனின் பூங்காவை (அதாவது மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் “சோழன் சிலை பஸ் நிறுத்தம்”) கண்டிருக்கலாம்.
உலகின் முதல் கப்பல் படையை நிறுவி பல நாடுகளை வென்று தற்போதுள்ள மத்திய அரசைவிட பல மடங்கு திறமையான மத்திய அரசை நிலைநாட்டி சோழப்பேரரசை அதன் செல்வசெழிப்பின் உச்சநிலைக்கு கொண்டு சென்ற மாமன்னன் இராஜராஜசோழனுக்கு….! பெரியகோவிலின் உள்ளே நிற்க ஒரு சாண் கூட  இடமில்லையாம் ….!
இன்றைய மத்திய அரசு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியஅரசை உருவாக்கியவனுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா…………….?பற்பல போராட்டங்கள் செய்தும் மாமன்னன் இராஜராஜசோழனின் சிலையை கோவிலினுள் நிறுவுவதற்கான  அனுமதி மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது.மீறியும் கொண்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் சலுகைகள் இரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. அதனால் தான் மத்திய அரசை உருவாக்கிய மாமன்னனுக்கு இந்த அவல நிலை…..! யார் கண்ணிலும் படாதவாறு ஒரு ஒதுக்குபுறமாக நிறுத்தப்பட்டிருக்கிறான் தமிழ வளர்த்த தஞ்சை இராஜராஜசோழன்.
என்ன இராஜராஜசோழனாவது தமிழ் வளர்த்ததாவது……!என்று ஒருசிலருக்கு எண்ணம் தோன்றலாம்..ஆம் ,இராஜராஜசோழன் முத்தமிழையும் தன் உயிர் இத்தமிழ் உலகை விட்டு பிரியும் வரை வளர்த்தான்.
.முதன்முதலாக கல்வெட்டு பொறிக்கும் பழக்கத்தை நடைமுறைபடுத்தியவனும் இவனே..!
தன் தாய்மொழி – தமிழுக்காக கோவிலமைத்த சோழப் பேரரசனும் இவனே..!
முதன்முதலாக தமிழ் மொழியிலுள்ள “வட்டெழுத்துக்களை” நடைமுறையில் அறவே நீக்கி தமிழை புதுபித்தவன் என்றே கூறலாம்…..!இன்னும் இவன் செய்த தமிழ்தொண்டுகள் எண்ணிலடங்காதவைகளாகும்…..! எப்படியாயினும் சோழமன்னர்களின் புகழ் மறைக்கப்பட்டு வந்துள்ளது.
இதற்கு காரணம் …..நமக்கே தெரியும் ……! ஆக மொத்தம் நம் தமிழர்களின் புகழ் முற்றிலும் மறைக்கப்படுகிறது.இனிமேலாவது நாம் நம் நாட்டிலுள்ள மன்னர்களின் வீரதீர வெற்றிகளை படித்தறிவோமாக ,…………..! என்று கூறி இந்நூலை உலகத்தமிழன்பர்களுக்கும், தமிழ்மொழி காதலர்களுக்கும் சமர்பிக்கின்றேன்.
 என்றும் சோழதேசப்பிரியனாக ..,
இராஜராஜசோழன்