2
01
முத்தங்கள் யாசிக்கிறாய்
‘கெஞ்சாதேடா‘ என்றால்
‘சரி, முத்தம் தாடி‘ எனத்
திமிராய் மிரட்டுகிறாய்.
02
உள்ளங்கைகளிலேந்திக்
கன்னங்கள் பற்றுகையில்
அனிச்சையாய்க் குவியும்
உன் இதழ்களின் இச்சை.
03
சிணுங்கும் கொலுசில்
நீ முத்தமிடுவது கண்டு
உடையக்காத்திருக்கும்
வளையல் சலசலக்கும்.
04
யுத்தம் நீடித்ததில்லை
சம்பவஇடம் சமீபித்தால்
சம்மதித்து விடுமென்
முத்தப் போராட்டம்.
05
இதழ் துவைக்கும் உன்
முரட்டு முத்தங்களுக்கு
ஒத்தடமிட்டு களைக்கும்
என் பெண் முத்தங்கள்.