குவியொளி
மகி (@veyilooraan)
96 – பெண்ணியம்.
Divorce என்பது மணநோய்.
கனியிருப்ப … கவர்தல் முதலிரவு.
தோற்ற மயக்கம் ஜெயித்தவனுக்கு!
உலகத்தை பார் என்றவன் தீர்க்கதரிசி!
சுடுகாட்டில் எல்லோரும் நல்லவர்களே.
அம்மா எழுதும் கவிதைகளுக்கு கோலமென்று பெயர்!
மனைவியுடன் உடன்பாடு இல்லை என்றால் உடன்படு.
ஆணுக்கு arranged marriage போன்றதொரு அவமானம் ஏதுமில்லை.
வீட்டுக்குச் செல்லாமல் சொந்த ஊரைக் கடப்பதும் பெருவலிதான்.
தானழுது தானே கண்துடைத்துக் கொள்வது எத்தனை பெருந்துயரம்!
கல்யாணம் ஆனபிறகு தான் பெண்கள் சைட்டடிக்கவே ஆரம்பிக்கிறார்கள்!
அழகாக இருக்கும் எனது கையெழுத்து அர்த்தமற்றுப் போனது இணையத்தில்.
இழவு வீட்டில் அழாமலிருக்கும் பிணம்போலவே உன்னுடைய திருமணத்தில் நான்.
பெண்ணிடம் authentication பெறுவது ரொம்பக் கஷ்டம் ஆனால் authorization ரொம்ப ஈசி.
பின்னாளில் தவறு செய்தால் பெண் ஏற்றுக்கொள்வாள் என்று உணர்த்துவதே அம்மாதான்.
கண்ணாடியில் பொட்டு ஒட்டப்பட்டிருக்கும் லாட்ஜ் அறையில் குளிக்க வெட்கமாயிருக்கிறது.
இது இந்தியாங்க… என்பதே போதுமானதாய் இருக்கிறது எல்லாத் தவறுகளையும் நியாயப்படுத்த!
எழுதப்படாத முதல் விதியாய் பறிக்கப்படுகிறது தனியாகப் பயணிப்பவனின் ஜன்னலோர இருக்கை.
வெயிலில் தவித்தவனுக்கு மட்டும் தான் மரநிழல் உன்னதம்; முளைக்கக் காத்திருக்கும் விதைக்கு அல்ல.
ஆண் ரகசியம் காப்பான் என்று பெண்ணும், பெண் உளறிவிடுவாள் என்று ஆணும் இன்னும் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்
முன்பெல்லாம் ஊருக்கு போறேன் என்றால் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகிறோம் என்று பொருள். இப்போது ஊருக்கு போறேன் என்பது சொந்தவீட்டிற்கு போவது.
ரூம்ல இருந்து கல்யாணமாகிக் போனவன் எப்பவாது ரூம் வரும்போது, பொண்ணுங்க அம்மா வீட்டுக்கு வந்த மாதிரி ஃபீல் பண்றானுங்க.
சாலையைக் கடக்க, என் கைகோர்க்காமல் நான் முன்னெடுக்கும் பாதுகாப்பான நடையில் சில நொடி துணையாக கடந்தவள் அந்நாளின் வரம்.
முக்கால்வாசி காதல் கவிதைகள் யார் ரசிக்க வேண்டுமென எழுதப்படுகிறதோ அவர்களால் வாசிக்ககூடப்படுவதில்லை.
***