மோடு முட்டிகள்
அராத்து
நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் நமக்கு புரிவதில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் கருத்து சொல்வதன் மூலம் கடந்து செல்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ ஏதோ கருத்தைச் சொல்லிவிட்டு, நாம் சொல்லிய கருத்து என்பதால் அதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு சண்டையிட்டுக் கொள்கிறோம். பாருங்களேன், நானும் ஏதோ கருத்து சொல்வதாக நினைத்துக்கொண்டு சீரியஸான மொழி நடையில் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
பல விஷயங்கள் புரிவதில்லைன்னு சொன்னேனா? அதுல ஒண்ணு, வன்புணர்ச்சி நடக்கும் இடத்தை வைத்து அதற்குக் கூடும் மதிப்பு, சாரி அதற்கு எதிராக எழும் எதிர்ப்பு. திட்டக்குடிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் கற்பழிப்பு (பொலிட்டிகல் கரக்ட்னஸ் மைண்ட்ல இருந்தா கட்டுரை எழுத வர மாட்டேங்குது) நடந்தால், அது தினத்தந்தியில் இரண்டு பத்திச் செய்தியாக வந்தால், நம்மை அந்தச் செய்தி தொந்தரவே செய்வதில்லை.
ஆக்சுவலாக, இதைப்போன்ற சாதாரணக் கற்பழிப்புச் செய்தி பத்திரிக்கைகளில் கூட வராது. அந்தக் கற்பழிப்பில் ஏதேனும் ஸ்பெஷல் இருக்க வேண்டும், சுவாரசியம் இருக்க வேண்டும், அப்போதுதான் இரண்டு பத்திச் செய்தி வரும். அதுவும் நம் உணர்ச்சிகளை எல்லாம் கொந்தளிக்கச் செய்யாது. இதுவே டெல்லியிலோ, மும்பையிலோ, பெங்களூரிலோ, தற்போது போனால் போகட்டும் என்று சென்னையிலோ கற்பழிப்பு நடந்தால் நம்மை மீறி கோபப்பட்டுக் கொந்தளிக்கச் செய்கிறோம். ஏன் இந்த மெட்ரோபாலிட்டன் கற்பழிப்பு மட்டும் நம்மை கொந்தளிக்கச் செய்கிறது? நம் சகோதரிகளும், காதலிகளும், மனைவிகளும் – சரி சரி, மனைவியும் – நகரத்தில் வசிப்பதாலா? அல்லது நகரத்தில் வசிக்கும் வெள்ளைத் தோலுள்ள நவநாகரீக நங்கை மென்மையானவள், அவளுக்குத்தான் கிராமத்துப் பெண்ணை விட அதிகமாக வலியும் இழப்பும் என ஆழ்மனதில் நமக்கே தெரியாமல் நினைக்கிறோமா?
நகரமோ கிராமமோ, வெறும் கற்பழிப்பு மட்டும் நடந்தால் பெரும் அதிர்வலைகள் கிளம்புவதில்லை. கற்பழிப்புடன் சேர்த்து வன்முறை, கொலை, சம்மந்தப்பட்ட பெண்ணைத் தாக்கி அப்பெண்ணிற்கு உடல் ரீதியாக ஏதேனும் நிரந்தர ஊனம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே நமக்குப் பரிதாபமும் அதன் காரணாமாக கொஞ்ச நேரம் கழித்துக் கொந்தளிப்பும் ஏற்படுகிறது. அதாவது கற்பழிப்புடன் வேறு ஏதேனும் க்ரைம் சேர்ந்து இருந்தால் மட்டுமே நாமும் மீடியாவும் சிலிர்த்துக்கொள்கிறோம். கற்பழிப்பே பெரிய க்ரைம் என்று நம் மூளைக்கு உறைப்பதேயில்லை. அது நம் தவறும் இல்லை, நம் வளர்ப்பு அப்படி! இதுவரை நாம், நம் என்று சொல்லி்யதெல்லாம் ஆண்களைத்தான்.
ஓர் ஆணுக்குக் கற்பழிப்பு என்றால் நேரடியாக புரிந்து கொள்ள முடியாது. ஓர் ஆணாக இருந்து கொண்டு கற்பழிப்பு ஒரு பெண்ணுக்கு மனரீதியாக கொடுக்கும் அதிர்ச்சியையோ, வலியையோ, அருவருப்பையோ புரிந்து கொள்ளவே முடியாது. ஏனென்றால் தன்னையே யாரேனும் பெண் கற்பழித்தால் கூட அதைப் பெருமையாக வெளியில் சொல்லிக் கொண்டு திரியும் மன அமைப்பு பெற்றவன் ஆடவன். அவன் நேரடியாக அல்லாமல் ஒரு மாதிரி கற்பழிப்பை எப்படிப் புரிந்து கொண்டு கொந்தளிக்கிறான் என்றால், தன் சகோதரியையோ, மனைவியையோ ஒரு ரவுடி கற்பழிப்பதாகக் கற்பனை செய்து பார்த்துதான் கற்பழிப்பின் கொடுமையை உள்வாங்கிக்கொண்டு, ஒரு மாதிரி புரிந்து கொண்டு கொந்தளிக்கிறான். இதில் முக்கியமான விஷயம் கற்பழிப்பால் பாதிக்கப்படும் பெண் தன் தங்கை போலவோ, மனைவி போலவோ இருக்க வேண்டும். அதாவது அந்தஸ்தில், அழகில், க்ளாஸில்….
இதில் பொத்தாம் பொதுவாக எப்படி ஆண்கள் எல்லாம் இப்படி என சொல்லப்போச்சி என சிலர் கோபிக்கலாம். எதிலும் விதிவிலக்குகள் உண்டல்லவா? அதனால் மன்னித்து விடுங்கள், சில விதி விலக்குகளை – மீண்டும் மன்னிக்கவும், சிலரைத்தான் – குறிப்பிட முடியும். ஏனென்றால் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல! விதிவிலக்குகள்: ஜெயமோகன் மற்றும் அவரின் தீவிர வாசகர்கள், முக்கியமாக எஸ்ரா, சுகி சிவம், கெஜ்ரிவால், அன்னா ஹஸாரே, ஏ.ஆர். ரஹ்மான், நீதியரசர் சந்துரு, சாலமன் பாப்பையா, டி.ராஜேந்தர் மற்றும் அனைத்து அராத்து வெறுப்பாளர்கள்.
இந்தியாவையே குலுக்குமளவு ஒரு சிறப்புக்கற்பழிப்பு நடந்து முடிந்தவுடன் மீடியா, விஐபிகள், பெண்ணியவாதிகள், பெண்ணியவாதிகவர் கள்வன்கள், சோஷியல் நெட்வொர்க்கிங்க் சைட் என அனைவரும் அதைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறோம். அதிலும் இந்தக் கற்பழிப்பில் ஏதேனும் வித்தியாசமான கருத்தைச் சொல்லி விட வேண்டும் என அனைவரும் தலைப்படுகின்றனர். மூளையைக் கசக்கி ஆளுக்கொரு வித்தியாசக் கருத்தை சொல்லி விடுகின்றனர்.
கற்பழிப்பில் என்ன பெரிய கருத்து வேறுபாடு இருக்க முடியும்? மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சைக்கோக்களைத் தவிர மற்ற அனைவருக்கும் ஒரே கருத்துதான் இருக்க முடியும். தன்னால் ஏதும் செய்ய முடியாது என்ற நிலையில் ஓர் ஆதங்கத்தில், அட்லீஸ்ட் பாதுகாப்பாக இருக்கலாம் என சிலர் அக்கறையுடன் ஆலோசனை வழங்குகிறார்கள். அதுவும், உடைக்கட்டுப்பாடு பற்றியது அல்ல. இரவு நேரத்தில் யாருமில்லாத இடத்திற்குத் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பாய் ஃபிரண்டு உடன் வந்தால் கூட தனியான பங்களாவுக்கோ, வனம் சார்ந்த இடங்களுக்கோ, இருளான மக்கள் நடமாட்டம் இல்லாத பீச்சுக்கோ செல்லலாகாது என்று ஆலோசனை சொன்னால், குற்றவாளியை விட்டு விட்டு, இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதை விடுத்து, அரசாங்கத்தை மறந்து விட்டு, ஆலோசனை சொன்னவர்களைக் கடுமையாகத் திட்ட ஆரம்பிக்கிறார்கள்.
உனக்கும் கற்பழித்தவனுக்கும் ஒரே மனநிலை, வேறுபாடு இல்லை என்பதில் தொடங்கி, நீயும் ஒரு ரேப்பிஸ்ட் தான் என முடித்து வைக்கிறார்கள். பெண்ணியவாதிகளிடமும், அவர்கவர் கள்வன்களிடமும் சரமாரியாகத் திட்டு வாங்கியவனுக்குச் சமயத்தில் தானும் உண்மையில் ஒரு ரேப்பிஸ்ட்தானோ எனச் சந்தேகமே வந்து விடுகிறது.
கற்பழிப்பைத் தடுப்பதில் அரசாங்கத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது, மறுப்பதற்கில்லை. இந்த விஷயத்தில் மட்டுமல்ல, வேறு எந்த விஷயத்தில் நம் நாட்டு அரசாங்கம் மிகச் சரியாக பொறுப்புடன் நடந்து கொள்கிறது? மிக முக்கியமான குழந்தைகள் விஷயத்தில் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? எத்தனை குழந்தைகள் வேனில் இருந்தும், ஆழ் குழாய் சாக்கடையிலும் விழுந்து செத்துக்கொண்டு இருக்கிறார்கள்? பள்ளியிலேயே குழந்தைகள் எரிந்து சாம்பலான பிறகு நம் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இந்த விஷயத்தில் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உடல் சுரணையும் கிடையாது, அறிவுச் சுரணையும் இல்லை. நிலைமை இப்படி இருக்கையில் முதல் கட்டமாக நாம்தான் நம் பாதுகாப்பை உறுதி செய்துக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளோம். இந்த விஷயத்தில் ஆண், பெண் என்றெல்லாம் பிரித்துப் பார்த்துச் சண்டையிட்டுக் கொள்வதில் அர்த்தம் இல்லை, அது முட்டாள்த்தனமானதும் கூட. அரசுக்குப் பிறகு சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் கற்பழிப்பைக் குறைப்பதில் பெரும் பங்கு இருக்கிறதுதான்.
அது என்ன? ஆண் குழந்தைக்கு சிறு வயதிலேயே பெண்களை அலட்சியமாக அணுகக் கூடாது, பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது, விருப்பமில்லாமல் தொடக்கூடக் கூடாது என்பதை, திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது என்று சொல்லித் தருவது போல சொல்லித்தரவேண்டும் எனச் சொல்கிறார்கள். யார் சொல்லித் தருவது? திரும்பவும் அம்மாதான் சொல்லித் தந்தாக வேண்டி இருக்கிறது. வேறொன்றுமில்லை, அம்மா சொன்னால்தான் குழந்தை மனதார ஓரளவேனும் கேட்கும். பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது என்றுதான் பல வீடுகளில் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம். குழந்தை பெரியவனானதும் அதைக் கடைபிடிக்கிறதா என்ன? அப்புறம் என்னதான் செய்வது? பிரச்சனை இங்கு இல்லை. ஒரு குடும்பச் சூழ்நிலையில் வளரும் 99 சதவீதம் ஆண்கள் கற்பழிப்பில் ஈடுபடுவதில்லை. கற்பழிப்பைப் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை. சிலர் அதிகபட்சமாக தம் மனைவியைக் கற்பழிப்பார்கள், மனைவிகளும் மன்னித்து விட்டு விடுவார்கள்.
உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் கற்பழிப்பவர்கள் உருவாவதற்கு நாம் அனைவரும் நம்மை அறியாமாலேயே காரணகர்த்தாக்கள்தான். தனக்கு முன்பின் தெரியாத பெண்ணைக் கொடூரமாகக் கற்பழிப்பவன் பின்னணியை எடுத்துப் பார்த்தால் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறான். குடும்பம் இருக்காது அல்லது சிங்கிள் மதர் சைல்டாக இருப்பான். இருப்பிடம் இல்லாமல் பிளாட்ஃபார்மில் இருப்பவன், படிப்பறிவில்லாதவன், ஏதேனும் சாக்கடைக்குப் பக்கத்தில் குழுவாக வாழ்பவர்கள் – இப்படி நம் வாழ்கைக்குச் சற்றும் சம்மந்தம் இல்லாதவர்கள்.
நாமும் அரசாங்கமும் அவர்களைக் கண்டு கொள்வதேயில்லை. அவர்களும் நம்மிடையேதான் வாழ்கிறார்கள் என்ற எண்ணம் கூட நம்மிடம் இல்லை. அவர்களும் நம் சமூகத்தின் அங்கம் என்பதை வசதியாக மறந்து விட்டு ரொமாண்டிசைஸ் செய்து கொண்டு இருக்கிறோம். அரசும் ஆளை விடுடா சாமி எனக் கண்ணை மூடிக்கொள்கிறது. இந்த மாதிரியான மக்களின் மனநிலை என்ன? அவர்களின் எதிக்ஸ் என்ன? வேல்யூஸ் என்ன? அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கை முறை என்ன? அவர்களின் தனிப்பட்ட நியாய தர்மங்கள் என்ன? இதைப்போன்ற டேட்டா ஏதும் நம்மிடமோ அரசிடமோ இல்லவேயில்லை.
இது இல்லாமல் பணத்திமிரில் தன்கீழ் வேலை செய்பவளைக் கற்பழிப்பவன், காதலியைக் கற்பழிப்பவன், அரசியல் மற்றும் ஏதேனும் செல்வாக்கு கொடுக்கும் திமிரில் கற்பழிப்பவன் போன்றவர்களை சைக்கோ கேட்டகிரியில்தான் வைக்கிறேன். இவர்களின் கொட்டையை நசுக்கி குஞ்சை அறுத்து காக்காய்க்கு போடுவதில் மாற்றுக் கருத்தில்லை.
ரேப்பிஸ்டுகள் வழக்கமமாகச் சொல்லும் கவர்ச்சியான உடையணிந்து இருந்தாள், இரவு நேரத்தில் லேட்டாகச் சுற்றினாள், அதனால் கற்பழித்தோம் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பேத்தல். அதை ஒதுக்கி விடலாம். அழகாக உடையணிந்தால் ரசிக்கலாம். ரொம்பக் கவர்ச்சியாக ஆபாசமாக உடையணிந்தால் அருவருப்புதான் வருமே ஒழிய உடலுறவு கொள்ளுமளவுக்கு வெறி தோன்றாது. சில வக்கீல்களும், சமூக ஆர்வலர்களும் பெண்கள் உடை கவர்ச்சியாக அணிவதால்தான் கற்பழிக்கிறார்கள் என ஒத்து ஊதுவதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவது பிடிக்கவில்லை. கடும் பிற்போக்குவாதிகள். தங்கள் கருத்தை நிலை நாட்ட ரேப்பிஸ்டின் ஸ்டேட்மெண்டை துணைக்கு இழுத்து, பெண்களைப் பயமுறுத்துகிறார்கள். இவர்களிடம் விவாதம் செய்வது வெட்டிப்பயன். இவர்களின் அங்கீகாரம் யாருக்குத்தேவை? பெண்கள் தங்களுக்கு விருப்பமான உடையைத் துணிந்து அணியலாம். பாதுகாப்புக் காரணிகளை மனதில் இருத்திக்கொண்டால் போதும். எந்த உடை போட்டிருந்தாலும் ரேப்பிஸ்ட் கற்பழிக்க முயலுவான். அவனுக்கு பாட்டிக்கும் சிறுமிக்கும் வித்தியாசம் தெரியாது. மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வயதான நோயாளியைக் கூட விட்டு வைக்க மாட்டான். அவனுக்குத் தேவை நெஞ்சில் கொஞ்சம் சதையும், இடுப்புக்கு கீழே ஓர் ஓட்டையும்தான்.
என்னதான் செய்தாலும் கற்பழிப்பை மொத்தமாகத் தடுத்து விட முடியாது என்ற கசப்பான உண்மை முகத்தில் அறைந்தாலும், அதைக் குறைப்பதற்கு நம்மாலான முயற்சிகள் எடுக்கலாம். சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதில் தவறேதும் இல்லை. வெட்டியாக ஏத்தி விடும் போலி பெண்ணியவாதி ஆண்களை நம்பாதீர்கள் பெண்களே. இங்கே ஃபேஸ்புக்கில் உங்களை ஏற்றி விட்டு விட்டுத் தங்கள் வீட்டு பெண்களிடம் என்ன சொல்கிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும்.
1) பாய் ஃபிரண்ட் / காதலனைக் கூட நம்பாதீர்கள்.
2) காதலனுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் எனில், அவன் வீட்டிலோ அல்லது உங்கள் வீட்டிலோ, யாரும் இல்லாத போது ரொமான்ஸ் செய்து கொள்ளுங்கள். ஹோட்டலில் கூட ரூம் போட்டு ரொமான்ஸ் செய்யலாம். இதுவும் காதலனின் நம்பகத்தன்மையை பொறுத்தது. ஆனால் ஆளரவமற்ற இடங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காடு, இருட்டான பீச், பாழடைஞ்ச பங்களாவுக்கு போறது எல்லாம் அதிக அளவு ரிஸ்க் கொண்டது.
3) ரூம் போடக் கையில் காசு இல்லை எனில் பல அரசாங்க அலுவலக வளாகங்கள் இருக்கும். பாதுகாப்பாக அங்கே ரொமான்ஸ் செய்யலாம். உதாரணத்திற்கு சென்னையில் பிர்லா கோளரங்கம் ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம். கன்னிமாரா நூலக வளாகம், சென்னை பல்கலைக்கழக வளாகம், அரசினர் தோட்டம் போன்றவைகளில் எந்த பிரச்சனையும் வராது. ஹைகோர்ட் வளாகம், கமிஷனர் அலுவலக வளாகம் போன்றவை பாதுகாப்பானவை!
4) தனியாகச் செல்கையில் கூடுமானவரை இரவு 9 மணிக்குள் வேலையை முடித்து வீட்டுக்கு வருவது போல பார்த்துக்கொள்ளவும். இயலவில்லை எனில் தகுந்த துணையுடன் வரவும். நண்பரை / உறவினரை அழையுங்கள்.
5) நமக்கா நடக்கப்போகுது என்றெண்ணாமல் கையில் பெப்பர் ஸ்ப்ரே, சின்ன கத்தி போன்றவை வைத்திருக்கலாம்.
6) சிறிய அளவிலாவது தற்காப்பு பயிற்சி கற்றுக்கொள்ளலாம். பள்ளிகளிலேயே இதை அறிமுகப்படுத்தலாம்.
7) யாருமில்லாத கம்பார்ட்மெண்டில் ஏறுவது, நள்ளிரவில் தனியாக டாக்ஸியில் செல்வதைத் தவிர்க்கலாம்.
8) ஆண்களுக்கு கொட்டையில் நங்கென்று உதைத்தால் தாங்க முடியாது. இருவர்தான் எதிரி எனில் தைரியமாக உதைக்க முயற்சி செய்யலாம்.
9) வேலை செய்யும் அலுவலக்த்தில் இருந்து வெளியேறும் வழி பாதுகாப்பானதாக இல்லையெனில், தயங்காமல் நிர்வாகத்திடம் சீரியஸாக சொல்லவும்.
10) சடார் படாரென யாரிடமும் செல்போன் நம்பரையும் மனதையும் பறி கொடுக்காதீர்கள். சாட் மூலம், போன் மூலம் பேசியதை வைத்து தனியிடத்தில் ஒருவரை சந்திக்கச் செல்லாதீர்கள். நம்மாளு அப்படி இல்லையென்றுதான் தோன்றும். ரேப்பிஸ்டும் யாருக்கோ நம்மாளுதான்.
1ஓவியம் : ராமி
அனைத்து நாடுகளிலும் ஆண்கள் ஒரே போலத்தான் இருக்கிறார்கள். பெண்களைப்பற்றி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான எண்ணங்களையே கொண்டிருக்கின்றனர். அனைத்து விஷயங்களிலும் நம்பர் 1 பொசிஷனில் இருக்கும் அமெரிக்கா பழக்க தோஷத்தில் கற்பழிப்பிலும் முன்னணியிலேயே இருக்கிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு ஐந்தாவதோ ஆறாவதோ இடம். பரவால்லை, அமெரிக்காவிலேயே நிறைய கற்பழிப்பு இருக்கு, நம்ம நாடு எவ்ளோ தேவலாம் என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. நம் நாட்டில் பெரும்பாலான கற்பழிப்புகள் பதிவாவதேயில்லை. ஏதோ கொஞ்சூண்டு பதிவான புகார்களை வைத்தே நமக்கு ஐந்தாம் இடம். அனைத்து கற்பழிப்புகளையும் தைரியமாக புகார் அளித்து கேஸ் ஆடினால், நிச்சயமாக சொல்ல முடியும் இந்த விஷயத்தில் நாம் அமெரிக்காவை முந்தி பழிப்பு காட்டலாம். ஏன் புகார் பதிவாவதில்லை என்ற விஷயம் குழந்தைக்கு கூட தெரியும். கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணை எவனும் கல்யாணம் பண்ண மாட்டான். மீறி பண்ற சில பேர் மீடியா வெளிச்சத்துக்காக பண்ணுவான்.
இங்கே பெண்ணியம் பேசிக்கொண்டும், பெண்களை புரட்சிகரமாக இருக்கச்சொல்லி ஏற்றி விட்டுக்கொண்டிருக்கும் ஆண்களே, மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்கள் காதலித்த பெண்ணோ, வீட்டில் பார்த்த பெண்ணோ கற்பழிக்கப்பட்டு, புகார் கொடுத்து கேஸ் நடத்திக்கொண்டு இருக்கிறாள் என்று தெரியவந்தால், உங்களில் எத்தனை பேர் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அந்தப் பெண்ணை திருமணம் செய்வீர்கள்?
அநேகமாக விடை பூஜ்யம்தான் வரும். பெண்களே, இந்த ஆம்பளைப் பசங்களை நம்பாதீர்கள். உங்க பாதுகாப்பை நீங்கள்தான் உறுதி செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும், அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத நாட்டிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணருங்கள். ஆண்கள் எல்லாம் கெட்டவனும் இல்லை, ரொம்ப நல்லவனும் இல்லை, சூப்பர் மேனும் இல்லை. கொஞ்சம் ஆம்பளைங்க உலகத்தையும் தெரிஞ்சிக்கலாம்.
இதுவரை நான் பழகிய ஆண்கள் கூட்டத்தில் யாரும் எந்தப் பெண்ணையும் ரேப் செய்ய வேண்டும் என்று விளையாட்டுக்குக் கூட சொன்னதில்லை. அந்த எண்ணம் கூட இதுவரை வந்ததாகச் சொன்னதில்லை. ஆண்கள் கூட்டத்தில் என்ன தோன்றினாலும் பேசலாம். அதனால் மனதில் வைத்து வெளியில் சொன்னதில்லை என்று கூற முடியாது. இதை வைத்து, பரவாயில்லை பெரும்பாலான ஆண்கள் உத்தம புத்திரர்கள் என்று நினைத்து விடலாகாது. கற்பழிப்பைத் தாண்டி எத்தனை வக்கிரமாகவும் சிந்திக்கிறார்கள் பெண்களை எவ்வளவு கேவலமாக நினைக்கிறார்கள், எவ்வளவு இழிவாகப் பேசுகிறார்கள் என்பதைச் சில உதாரணங்கள் மூலம் சொல்கிறேன்.
சம்மந்தமே இல்லாத பெண்களோ, தன்னுடைய கல்லூரியில் படிக்கும் தோழியோ, அலுவலகத்தில் வேலை செய்யும் தோழியோ எல்லாம் ஒன்றுதான் ஆண்களுக்கு. பெண்களிடம் நாகரீகமாக வழிந்து கொட்டி வழுக்கி விழும் ஆண், ஆண்கள் கூட்டத்தில் இருக்கும்போது எப்படி பேசுவான்?
“அவளுக்கு செம காய் மச்சி “
“ஒரு தடவையாவது அவளைப் போடணும் மாப்ள”
“தேன் மாதிரி இருக்கா மச்சி, பீச் ரெஸார்ட் கூட்டிப் போய் நக்கி நக்கி ஒழ்க்கணும் மாப்ள”
உடல் ரீதியாக அவளை அனுபவிக்கும் ஆசையை இப்படிச் சர்வ சாதரணமாக வெளிப்படையாகக் குழுவில் வெளிப்படுத்தும் ஆண், எந்தப் பெண்ணுடனவாது சண்டை வந்து விட்டாலோ, கோபம் வந்து விட்டாலோ,
“தேவடியாச் சிறுக்கி “
“கண்டவன்ட்டையும் படுக்கறவதானே “
“அது ஒக்காருன்னா படுக்குற கேஸ் மச்சி “
“வாய்ல வுட்டு அடிக்கணும் மாப்ள அப்பத்தான் சரிவரும்”
இன்னும் பலவாறாக எழுத முடியாத அளவுக்கு சரமாரியாக திட்டுவான்.
காதலிக்கும்போது தன் காதலியைப்பற்றி உயர்வாக தன் நண்பர்களிடம் பேசுபவர்கள், காதலியை தேவதை என்று சொல்பவர்கள், காதல் ஏதோ ஒரு காரணத்தால் முறிந்தவுடன் தன் நண்பர்களிடம் வேறு மாதிரி பேசுவார்கள்.
“காலை விரிக்கிற நாய்க்கே இவ்ளோ கொழுப்புன்னா மேல படுக்குற எனக்கு எவ்ளோ இருக்கும்?”
“போனா போறா மச்சி, அவளை ஒழ்த்து கிழிச்சி எடுத்துட்டேன்”
“முட்டி போட்டு பூளை ஊம்புனவதானே, அவளை விட எனக்கு எவ்ளோ திமிர் இருக்கும்”
செக்ஸ் என்பது அழகான ஷேரிங். இருவரும் மனமுவந்து தன் உடல் மீது இருக்கும் மரியாதையை தனது துணைக்காக விட்டுக்கொடுத்து அடி ஆழம் வரை இறங்கிப்பார்த்து ரசித்துத் துய்ப்பது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அது ஒரு உடைமையை வெற்றி கொள்ளும் செயலாகவோ, தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதாகவோ பார்க்கிறார்கள். இங்கு காதல், அன்பு, பாசம் ஏன் காமத்துக்குக் கூட இடமில்லை. ஒழ்த்துக் கிழிச்சிட்டேன் எனப் பேசுபவனிடம் என்ன உணர்ச்சி இருந்திருக்கும்?
ஒரு பெண் அன்பு மேலோங்க ஓரல் செக்ஸில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய விஷயம்? இதற்கே நம்மூர் ஆண்களின் ஹைஜீன் பற்றியும், அழகுணர்ச்சி பற்றியும் நமக்கு நன்கு தெரியும். ரெட்டை ஜடை போடும் அளவுக்கு ஆண்குறிப் பிரதேசத்தில் மசிர் வைத்திருப்பார்கள். ஆண்குறியைப் பிதுக்கி சுத்தம் செய்ய மாட்டார்கள். வெளியே மட்டும் கடமைக்கு லக்ஸ் சோப்பை விபூதி தேய்ப்பது போல தேய்ப்பதோடு சரி. சிலருக்கு அந்தப் பிரதேசத்தில் சீலைப் பேன்கள் எல்லாம் இருக்கும். மரு, பரு, கொப்பளம், கட்டி இன்னபிற விசித்திர ஐட்டங்கள் குறியைச் சுற்றி ஸ்தாபித்து இருக்கும். முதல் முறையாக அந்த ஏரியாவில் முகத்தை நுழைப்பவளுக்கு எப்படி இருக்கும்? பேரதிர்ச்சி அடைவாள். அதையும் மீறி காதலால் முன்னேறுபவளுக்கு அழுகிய பிண வாடை முகத்தில் அறையலாம். எல்லாவற்றையும் மீறித்தான் தன் காதலனுக்காக ப்ளோ ஜாபில் ஈடுபடுகிறாள் ஒரு பெண். உலகில் மிக மிக ரிஸ்கான விஷயம் முதன் முதலில் ஒரு இந்திய ஆண்மகனுக்கு ப்ளோ செய்வதுதான் எனலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மேற்சொன்ன அனைத்து பன்ச் டயலாக்குகளின் போதும் அனைத்து உரையாடல்களின் போதும் மற்ற ஆண்களும் சேர்ந்து கொள்வார்கள். எந்த ஆணும், பெண்களை இப்படிப் பேசக்கூடாது என எதிர்த்துப் பேசமாட்டான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஆண் அதில் கலந்து கொள்ளாமல் அமைதியாக பார்வையாளனாக இருப்பான், அவ்வளவுதான். நானெல்லாம் அப்படி இல்லை என்று தயவு செய்து எந்த ஆம்பளையும் ஷோல்டரை தூக்கிகிட்டு வரவேண்டாம். நீங்கள் அப்படி இல்லாமல் இருக்கலாம். உங்கள் பெயரை எனக்கு மெயில் அனுப்பினால், உத்தம ஆண்கள் என்ற தலைப்பில் போடப்போகும் லிஸ்டில் உங்கள் பெயரை சேர்த்துவிடுகிறேன். முன்பே கூறியது போல விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை இப்படித்தான்.
ஐயய்யோ ஆண்களே இப்படித்தானா என மிரண்டு விட வேண்டாம். இவர்கள் கூடவா வாழ வேண்டும் என விரக்தி அடைந்து கூகிளில் போய் லெஸ்பியனைப் பற்றித் தேட வேண்டியதில்லை. பொதுவில் மற்ற பெண்களைப் பற்றி இப்படி பேசினாலும் தன் மனைவி என வரும்போது பெண் புனிதவதி ஆகிவிடுவாள். கூடுமானவரை நண்பர்கள் கூட்டத்தில் எவ்வளவு குடி போதையிலும் மனைவியைப் பற்றியோ, திருமணம் செய்து கொள்ளப்போகும் காதலியைப் பற்றியோ மரியாதைக் குறைவாகப் பேசுவதேயில்லை. மெனக்கெட்டு மரியாதை சேர்த்து அவங்க, இவங்க, வீட்டுக்காரம்மா என்றுதான் விளிப்பார்கள். அவ சொன்னா, அவ கொஞ்சம் கோவக்காரி என்பதாக அவ, இவ என்று கூட சொல்வதில்லை. மனைவி மேல் பெரிய மரியாதை எல்லாம் கிடையாது. இவன் பேசுவதைப் பார்த்து மற்ற நண்பர்களும் அவ இவ எனப் பேசி விடப்போகிறார்கள் என்று பயம். அது மட்டுமல்லாமல் அவ, இவ என்று சொன்னால் கொஞ்சம் செக்ஸியாக ஃபீல் ஆகிறது என்பது போன்ற மனநிலையில், கேட்டுக்கொண்டு இருப்பவர்களும் தன் மனைவியை செக்ஸியாக நினைத்து விடப்போகிறான் என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம். வீட்டுக்காரம்மா என்று சொன்னால், கையில் தொடைப்பக்கட்டையோடு விம் பார் கறை சேலையோடு ஒரு பெண்மணி நின்று கொண்டிருப்பது கற்பனையில் வருகிறது அல்லவா? அதுதான் காரணம்.
முக்கியமாக பெண்கள் இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் எனில், உங்களுக்கோ, உங்களுடன் பழகும் ஆணுக்கோ திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையெனில், உங்களின் அந்தரங்கத்தை பொதுவில் வைக்கத் தயங்க மாட்டான். அது நீங்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்கலாம், விடியோவாக இருக்கலாம். உங்கள் இருவருக்குள் நடந்த செக்ஸ் உரையாடலாக இருக்கலாம். உங்கள் இருவருக்குள்ளும் நடந்த உடல் உறவைக்கூட இன்ச் பை இன்ச்சாக வர்ணிப்பான். நீங்கள் சொன்ன காதல் மொழி, இன்ன பிற காம மொழிகளை மறக்காமல் மனப்பாடம் செய்து நண்பர்களிடம் சொல்லிப் புளகாங்கிதம் அடைவான். பெரும்பாலான ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது மனப்பூர்வமான மன உடல் பகிர்தல் அல்ல; சாகசம்.
குடும்பப் பின்னணியில் வந்த ஆண் திருமணத்திற்கு முன் தான் கரக்ட் செய்த பெண்ணோ, இல்லை தன்னை வலியனாக காதலித்த பெண்ணோ, நான்கைந்து பெண்களுடன் எதிர்பாராத தருணத்தில் (படுத்துதான் இருந்தோம், அப்பிடியே எப்பிடியோ இண்டர்கோர்ஸ் ஆயிடிச்சி! – ஏண்டா இது என்ன மூக்குக்குள்ள கை வுட்ற விஷயமாடா?) உடலுறவில் ஈடுபடுகிறான். பெரும்பாலான உறவுகளில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துத் தான் உடலுறவு கொள்கிறான். பல நேரங்களில் ப்ரொஃபஷனலாகத் திட்டமிடுகிறான். உதாரணாமாக, சும்மா காதலித்துக் கொண்டிருக்கும் பெண்ணை, மாமல்லபுரம் சுத்திப் பாத்துட்டு வரலாம் என அழைத்துக்கொண்டு போய், முன்பே திட்டமிட்டுப் போடப்பட்டிருக்கும் அறைக்கு அழைத்துப்போய், கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, சூடேற்றி, ஆண்கள் பாஷையில் சொல்வதானால் மேட்டரை முடிக்கிறான். சில நேரங்களில் சரக்கை ஏத்தி விட்டும் கூட.
காதல் கண்றாவியை விடுங்கள். உறவுகளிலேயே மாமன், சித்தப்பன் லொடுக்கன் லொசுக்கன் எல்லாம் மடியில் அமர வைப்பது, இடுப்பைக் கிள்ளுவது, லேசாக அணைப்பது போன்ற செயல்களின் மூலம் சின்னப் பெண்களைத் தூண்டி விடுகின்றனர். பெண்கள் என்ன மெஷினா? அதுவும் உணர்ச்சிகள் உள்ள உடல்தானே? கொஞ்சம் உடல் ரெடியானதும், முத்தம், இறுக்கி அணைப்பது, மாரைத் தொடுவது என முன்னேறி, உடை களைவது வரை ஒரு நீண்ட நாள் ப்ராஸஸாகத் திட்டமிட்டுச் செய்து, கடைசியில் கவுத்து மேட்டரை முடிக்கின்றனர். ப்ராஜக்ட் சக்ஸஸ்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உடலுறவுக் கூத்து அரங்கேறும் போது பெண் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாள். பெண் விருப்பத்துடனேயே நடக்கும். அவளும் அதை எஞ்சாய் செய்வாள். தமிழ்ப்பட தாக்கத்தால் மேட்டர் முடிந்ததும் குத்துக்காலிட்டு முகத்தைப் புதைத்துக்கொண்டு சில பெண்கள் அழுவர். ஏன் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்றால் ஸ்லோ பாய்ஸன் போல அந்த மேட்டர் தருணத்திற்காக பல நாட்கள் அவள் திட்டமிட்டு தயார் செய்யப்படுகிறாள். 21 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் தன்னையறியாமலேயே தன்னை இழந்ததாக எண்ணி முகத்தைப் புதைத்து அழுவதை விட்டு விடலாம். என்னதான் ஆண் ஏமாற்றி உடலுறவு கொண்டாலும் தனக்கும் சுயபுத்தியும், என்ன செய்கிறோம் என்ற சுரணையும் இருக்க வேண்டும். யாருக்கு நம் மரியாதைக்குரிய பெருமைக்குரிய உடலை பகிர்ந்து கொள்ள கொடுக்கிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும்.
சிறுமிகள் விஷயத்தில் இந்த ஆண்கள் நடந்து கொள்ளும் விதம்தான் கொடுமை மற்றும் கவலைக்குரியது. இப்போதெல்லாம் சிறு வயதிலேயே வயதுக்கு வந்து விடுகின்றனர். ப்ரைமரி ஸ்கூலிலேயே காதல், முத்தம், கட்டியணைப்பது எல்லாம் தெரிந்து விடுகிறது. உண்மை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும், ஐந்தாம் வகுப்பு படிக்கையிலேயே என்னவென தெரியாமல் லவ் யூ சொல்லிக்கொள்வது, முத்தமிட்டுக்கொள்வது எல்லாம் சிறுவர் சிறுமிகளுக்குள் நடக்கிறது. நாம்தான் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு கள்ளக்காதல் கதைகளை ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருக்கிறோம். 10 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு சிறுமிகளுக்கேயுரிய ஆர்வம் இருக்கும். உறவினர்களோ, நண்பர்களோ, முக்கியமாக அவளை ஏற்றிச்செல்லும் டிரைவர்கள், டியூஷன் மாஸ்டர்கள், வழக்கமாகச் செல்லும் கடைக்காரர், ஸ்போர்ட்ஸ் கோச், எதிர் வீட்டுத் தாத்தா என எவர் வேண்டுமானாலும் அப்யூஸ் செய்யலாம்.
அப்யூஸில் இரண்டு வகை உண்டு. எடுத்த உடனேயே அவளின் பிரைவேட் பார்ட்ஸைத் தொட்டு தடாலடியாக வன்முறையாக அப்யூஸ் செய்வது. இந்த வகையில் மாட்டினாலாவது அவள் வீட்டில் சொல்ல வாய்ப்புண்டு. இரண்டாவது வகைதான் மோசமானது, மேற்சொன்னது போல திட்டமிட்டு செய்யப்படுவது. சின்ன சின்ன தொடுதல் மூலம் அவள் உடலை மலரச்செய்து, அவளுக்கே அதைப் பிடிக்க வைத்து, அதில் அவளுக்கு ஆர்வத்தை உண்டாக்கி, படிப்படியாக முன்னேறி கட்டியயணைத்தல், முத்தமிடுதல் என நகர்ந்து உடலுறவில் கூட முடிப்பவர்களும் இருக்கிறார்கள். 11 வயது சிறுமி ஒரு தடிமாட்டை ப்ளோ ஜாப் செய்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? பல இடங்களில் அதுவும் நடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அவள் அதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதைத் தாண்டி அவள் அதற்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறாள் என்பதுதான் வேதனையான உண்மை. அவளே அதை கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறாள். தயவு செய்து குடும்பத்திற்குள் கொஞ்சம் கண்களைத் திறந்து கொள்ளுங்கள். சிறுமிகளுடன் நேரம் செலவு செய்யுங்கள்.
குடும்ப ஆண்களுக்கு சொந்தத்திலோ, காதல் மூலமாகவோ பெண்கள் கைக்கெட்டும் துரத்தில் இருப்பதாலும், சுலபமாகக் கிடைப்பதாலும் திட்டமிட்டு மேட்டரை முடித்து தப்பித்துக்கொள்கின்றனர். முகேஷ் சிங் போன்ற ஆட்களுக்கு இதைப்போல வாய்ப்பு இல்லாததால், நல்ல சந்தர்ப்பம் அமையும் போது, எதிர்ப்படும் எந்தப் பெண்ணையும் வன்முறை மூலம் உடலுறவு கொள்வது மற்றும் தாக்கிக் கொலை செய்யும் அளவுக்கு போகின்றனர். அழகழகா டிரஸ் போட்டு லாத்திகிட்டு போறாளுங்க, எவன் எவன் கூடயோ சுத்தறாளுங்க, நமக்கு இந்த மாதிரி பொண்ணு கிடைக்கலயே என்ற எரிச்சலும் கோபமும் இதைப்போல செய்யத் தூண்டுகிறதோ என்னவோ தெரியவில்லை. மேட்டர் என்னவென்றால் மேற்சொன்ன வகைகளில் குடும்ப ஆண்கள் கரக்ட் செய்து தேத்தி மேட்டர் முடிப்பது, முகேஷ் சிங் செய்த கற்பழிப்புக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதுதான்.
இந்த திட்டமிட்ட ப்ராஸஸில் வன்முறை இல்லையென்பதால் சமூகத்தில் பெரிய தாக்கத்தையோ, கொந்தளிப்பையோ ஏற்படுத்துவதில்லை. வெளியே தெரிந்தாலும், இவளும்தானே காட்டேஜுக்குப் போனா என்ற வசையோடு முடிவுக்கு வந்து விடுகிறது. உடனே முகேஷ் சிங்குக்கு ஆதரவாக பேசிட்டான் என துள்ள வேண்டாம். சொல்ல வந்தது என்னவெனில், ஏமாற்றி மேட்டர் முடிப்பவர்கள், திருமண உறுதியளித்து மேட்டர் முடித்து ஏமாற்றுபவர்கள் அனைவரும் முகேஷ் சிங்களே, அனைவரும் ரேப்பிஸ்டுகளே!
முகேஷ் சிங் போன்ற ஆட்களிடம் வன்முறை இருக்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம்.
***